காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 87ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 27.04.2014 ஞாயிற்றுக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
ரஜப் 29ஆம் நாளன்று (மே 29) ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, குளச்சல் ரிஃபாஈ பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவீ எம்.அப்துஸ்ஸலாம் ஜமாலீ வங்கினார்.
தொடர்ந்து. சட்டமேதை இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வரலாற்றுச் சரித உரையை, கோழிக்கோடு - குட்டிகாட்டூர் ஜாமிஆ ஆரிஃபிய்யா அன்வாரிய்யா அரபிக்கல்லூரியின் திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.தாஜுத்தீன் மஸ்லஹீ வழங்கினார்.
அன்று 19.00 மணிக்கு, இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மீதான மவ்லித், இமாம் இப்னு ஹஜர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி - அஜ்மீர் காஜா முஈனுத்தீன் ஜிஷ்தீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஆகியோர் மீதான புகழ்மாலை மர்ழிய்யா ஆகியன, காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ தலைமையில் ஓதப்பட்டது.
ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழுப் பிரிவின் முதன்மை ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.அபூபக்கர் ஸித்தீக் மிஸ்பாஹீ துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
ரஜப் 30ஆம் நாளன்று (மே 30) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, சென்னை புகாரிய்யா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஏ.எம்.முஹ்யித்தீன் லெப்பை ஷக்காஃபீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ ஆகியோர் வழங்குகின்றனர்.
இன்று 19.30 மணிக்கு, பூஸிரீ இமாம் அவர்களால் தொகுக்கப்பட்ட புர்தா ஷரீஃப் மஜ்லிஸ், காயல்பட்டினம் கடைப்பள்ளியின் இமாம் எம்.ஐ.செய்யித் முஹம்மத் புகாரீ தங்ஙள் தலைமையில் நடைபெறுகிறது. மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.முத்து பத்ருத்தீன் ஃபாஸீ துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுறும்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற வலைதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1435ஆம் ஆண்டு நிறைவு நாட்களின் நிகழ்ச்சி நிரலைக் காண இங்கே சொடுக்குக!
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1435ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1434ஆம் ஆண்டு (கடந்தாண்டு) 29ஆம் நாள் நிகழ்ச்சிகள் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |