காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 87ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 27.04.2014 ஞாயிற்றுக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
ரஜப் 27ஆம் நாளன்று (மே 27) ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, அல்அஸ்ரார் மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டி.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ வழங்கினார்.
நபிகளார் மிஃராஜ் விண்ணுலகப் பயணம் சென்ற நாளை முன்னிட்டு, நேற்றிரவு மஃரிப் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளியின் இமாம் ஹாஃபிழ் எஸ்.எச்.ஷெய்கு அலீ மவ்லானா தலைமையில் மிஃராஜ் மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது. மவ்லவீ ஹாஃபிழ் கே.எஸ்.கிழுறு முஹம்மத் ஃபாஸீ துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
ரஜப் 28ஆம் நாளன்று (மே 28) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.சுலைமான் லெப்பை மஹ்ழரீ வழங்குகிறார்.
தொடர்ந்து, புனிதர் புகாரீ இமாம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சொற்பொழிவை, மேலப்பாளையம் உதுமானிய்யா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எஸ்.ஹைதர் அலீ மிஸ்பாஹீ வழங்குகிறார்.
இன்று 19.00 மணிக்கு, இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மீதான மவ்லித், இமாம் இப்னு ஹஜர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி - அஜ்மீர் காஜா முஈனுத்தீன் ஜிஷ்தீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஆகியோர் மீதான புகழ்மாலை மர்ழிய்யா ஆகியன, காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ தலைமையில் நடைபெறுகிறது.
ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழுப் பிரிவின் முதன்மை ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.அபூபக்கர் ஸித்தீக் மிஸ்பாஹீ துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுறுகின்றன.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற வலைதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1435ஆம் ஆண்டு நிறைவு நாட்களின் நிகழ்ச்சி நிரலைக் காண இங்கே சொடுக்குக!
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1435ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1434ஆம் ஆண்டு (கடந்தாண்டு) 27ஆம் நாள் நிகழ்ச்சிகள் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |