நடைபெற்று முடிந்த இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளது.
நரேந்திர மோடியைப் பிரதமராகக் கொண்டு, பாஜக தலைமையிலான அரசு நேற்று (மே 26) மாலையில் பதவியேற்றது. இதனை முன்னிட்டு, நேற்று 18.00 மணியளவில் அக்கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
நகர பாஜக கேந்திர பொறுப்பாளர் ஏ.பண்டாரம் தலைமையில், காயல்பட்டினம் நகர செயலாளர் செபஸ்தியான், 12ஆவது வார்டு செயல் தலைவர் காளிமுத்து, 12ஆவது வார்டு செயலாளர் பாலமுருகன், பி.ஆறுமுகம், ஜஸ்டின், இந்து முன்னணி நகர செயலாளர் ஆர்.செல்வகுமார், எம்.ஆறுமுகம், எம்.மாரியப்பன், ஏ.அய்யாச்சாமி, எஸ்.மனோகர், ஐ.மோகன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். நிறைவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
நகர பாஜக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |