மார்ச் 31, 2014 முடிய காயல்பட்டினம் நகராட்சியின் கடன் - 1 கோடியே 40 லட்சம் ரூபாய் என ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
மாநில அரசு - தான் விதிக்கும் வரிகள் மூலமான வருவாயில் குறிப்பிட்ட ஒரு பங்கினை, உள்ளாட்சிமன்றங்களுக்கு விகிதாசார அடிப்படையில் பிரித்து கொடுக்க வேண்டும் என இந்திய அரசியல் சாசனத்தின் 73வது மற்றும் 74வது திருத்தங்கள் வலியுறுத்துகின்றன. அதன்படி - தமிழக அரசு, மாநில நிதிக்குழு அமைத்து, அதன் பரிந்துரைப்படி, மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு உள்ளாட்சி மன்றத்திற்கும், ஒவ்வொரு மாதமும் மானியம் வழங்குகிறது.
தற்போது நடைமுறையில் உள்ள 4வது மாநில நிதிக்குழு, உள்ளாட்சி மன்றங்களுக்கு வழங்கப்படும் மானிய அளவினை, 80 சதவீதம் மக்கள் தொகை அடிப்படையிலும், 15 சதவீதம் பரப்பளவு அடிப்படையிலும், 5 சதவீதம் கடன் பாக்கி அடிப்படையிலும் வழங்கிட பரிந்துரைத்துள்ளது.
அதன்படி - நிறைவுற்ற நிதியாண்டின் ஏப்ரல் 2013 முதல் ஜனவரி 2014 வரையிலான காலக்கட்டத்திற்கு, தமிழக அரசு, காயல்பட்டினம் நகராட்சிக்கு - கடன் திருப்பி செலுத்தும் வகைக்காக 7,51,830 ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஏப்ரல் 2013 - ஜனவரி 2014 காலக்கட்டத்திற்கான இந்த தொகை, தனியாக நகராட்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பிப்ரவரி - மார்ச் 2014 காலக்கட்டதிற்கான் - இந்த வகை தொகை, ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும், மானியத்துடன் இணைத்து வழங்கப்பட்டுள்ளது.
தகவல்:
நகராட்சி நிர்வாகத்துறை, சென்னை.
|