Re:... posted byM.M. Seyed Ibrahim (Chennai)[31 May 2014] IP: 122.*.*.* India | Comment Reference Number: 35129
வாழ்த்துக்கள்!
பொறியியலை பொறுத்த வரையில் TIER-1 (IIT, NIT, etc) மற்றும் TIER-2 (ANNA UNIVERSITY, MIT, etc) கல்லூரிகளில் படித்தால் மட்டுமே வேலை கிடைக்கும் (உங்கள் சொந்தகார கம்பெனி இருந்தால் தனி மேட்டர்). இப்போது 1.8 கோடி ENGINEERING DEGREE HOLDERS வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.
"தமிழ்நாட்டில் மட்டும் 498 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 2,36,417 பேர் படித்து வெளியில் வருகின்றனர். மொத்த இந்தியாவையும் கணக்கிட்டால், நாடு முழுவதும் உள்ள 4,469 பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 16,03,012 பேர் படித்து வெளியில் வருகின்றனர். இது, 2011-12ம் ஆண்டின் கணக்கு. இதற்கு முந்தைய ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை சற்றுக் குறைவாக இருக்கலாம். எப்படி இருப்பினும், ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய பொறியாளர்கள் உருவாகிக்கொண்டே வருகின் றனர்"
"எனவேதான் ஜனவரி - 2011 நிலவரப்படி 98 லட்சமாக இருந்த இந்திய வேலையில்லா பொறியாளர்களின் எண்ணிக்கை, 2013-ல் 1.8 கோடியாக அதிகரித்துள்ளது."
"ஐ.டி. நிறுவனங்களின் கூட்டமைப்பான 'நாஸ்காம்’ வெளியிட்ட தகவலின்படி, 2013-ம் ஆண்டில் 50 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளைப் பெற, சுமார் 10 லட்சம் பொறியாளர்கள் போட்டியிட்டனர்."
நன்றி: அனந்த விகடன் 7-மே-2014
********வேண்டுகோள்********
நமதூரில் ** டிமாண்ட் உள்ள ** எலேக்ட்ரீஷியன்களை (ELECTRICIANS) விட வேலை இல்லா ELECTRICAL (EEE, ECE, ETE) ENGINEERS அதிகம் என நினைக்கிறேன். 10வது (SSLC) முடித்து 2 வருடம் ITI முடித்தால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சம்பாதிக்கலாம். 10வது முடித்து 3 வருடம் DME (POLYTECHNIC) படித்தால் நிறைய கம்பனிகளில் operator வேலை காத்துள்ளது.
ஒரு AUTOMOBILE கம்பனியில் வேலை பார்க்கும் நமதூர் வாசியிடம் பேசியபோது, "முன்பெல்லாம் 10வது அல்லது ITI என்று இருந்த தகுதிகளை (QUALIFICATION FOR THE OPERATOR JOB IN MANY AUTOMOBILE COMPANIES) இப்போது POLYTECHNIC DIPLOMA வாக மாற்றி விட்டார்கள். நல்ல சம்பளம். உடனடி வேலை"
இது போன்ற கல்விகளையும் ஊக்குவித்தால் வேலை இல்லா திண்டாட்டம் குறையும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross