Re:... posted byMohamed Sarjoon (Kayalpatnam)[01 June 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 35136
அன்புள்ள ரியாத் கயல் நல மன்றத்தினருக்கு சலாம்.
உங்களுடைய இந்த முயற்சி உண்மையில் பாராட்டத்தக்கது. ஆனால் இந்த cutoff சம்பந்தப்பட்ட கட்டுரையை காயல் இணைய தளங்களுக்கு அனுப்புமுன் துறை சார்ந்த அனுபவம் பெற்றவர்களுடன் கொஞ்சம் கலந்தாலோசனை செய்திருக்கலாம்.
பொதுவாக அறிவியல் அல்லது கணிதம் சார்ந்த துறையை பள்ளி மேல்நிலையில் தேர்வுசெய்வோர் யாரும் மொழி சார்ந்த பாடங்களுக்கு டியுஷன் செல்வதில்லை. அந்தந்த துறையின் முக்கிய பாடங்களுக்கு மட்டுமே முடிந்தவரை முழு முயற்சி எடுத்து அந்த துறையின் மிகச்சிறந்த ஆசிரியர்களிடம் சென்று டியுஷன் செல்கிறார்கள். இதில் இருந்து அவர்களின் ஆர்வம் அந்தந்த துறையின் முக்கிய பாடங்களுக்கே எனபது தெளிவு.
இங்கே நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் முக்கிய பாடங்களில் முழு மதிப்பெண் பெற முயலும் மாணவன் மொழிப்பாடங்களில் அரைகுறையாக மதிப்பெண் எடுக்க முயல்வானா? இல்லை தேர்ச்சி பெறவேண்டிய மதிப்பெண்களுக்கு மட்டும் தேர்வு எழுதிவிட்டு அவனை தேர்வு அறையில் இருந்து வெளியேறச் சொல்கிறீர்களா?
ஒருவேளை ஒரே cutoff மதிப்பெண்கள் பலர் பெரும் நிலையில் அவனுடைய தர வரிசையை கணக்கிடுவதற்கு இந்த மொழிப் பாடகளுக்குத்தான் முன்னிலை கொடுப்பது உங்களுக்குத் தெரியுமா?
சரி மருத்துவத் தரவரிசை இதுவரை மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிடாத நிலையில் இவ்வருடம் யாரும் நமதூரில் இருந்து செல்ல முடியாது என்று எவ்வாறு கணித்தீர்கள்?
இல்லை உங்களுக்கு மட்டும் தனியாக மருத்துவ தரவரிசை அனுப்பப்பட்டுள்ளதா?
உங்களின் இது போன்ற அறிக்கைகள் சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கு மன உளைச்சலை ஏற்ப்படுத்தி இருக்கும் எனபது மட்டும் திண்ணம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross