துரிதமான நடவடிக்கைத் தேவை posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[24 March 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 3514
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
பெரிய நெசவுத் தெரு - IOB வங்கி சந்திப்பு மேல்புறம் புதிய நிழற்குடை அமைக்கவும், மற்றும் கே.எம்.டி. மருத்துவமனை கீழ்புறம் புதிய நிழற்குடை அமைக்கவும் அங்கீகரிக்கப்பட்டு இருப்பதால் தபால் நிலையம் அருகில் உள்ள நிழற்குடையை புதுப்பிக்காமல் இருப்பது நகராட்சியின் பொறுப்பின்மையை பிரதிபலிக்கிறது.
-------------------------------------
பெரிய நெசவுத் தெரு - IOB வங்கி சந்திப்பு மேல்புறம் புதிதாக நிழற்குடை அமைப்பது என்பது இன்று, நாளை நடக்கக்கூடிய சாத்தியக்கூறு உண்டா? கே.டி.எம். தெரு - பெரிய நெசவுத் தெரு ஒரு வழிப்பாதை திட்டம் நிறைவேறும்போதுதான் அந்த பக்கம் நிழற்குடைத் தேவைப்படும்.
ஒரு வழிப்பாதை திட்டம் இன்னும் நிறைவேறாத நிலையில் அங்கே எங்கனம் நிழற்குடை அமைக்க முடியும்?.
அதுவரை மக்கள் இந்த நிழற்குடையை உபயோகிக்க புதிய நிழற்குடை அமைக்காவிட்டாலும் பழுது பார்த்துக் கொடுக்கலாமே?
எந்த மக்களும், பெரியதாகவோ, புதியதாகவோ நிழற்குடை அமைத்து தாருங்கள் என்று கேட்கவில்லை.
உபயோகத்துக்கு உகந்ததாக பழுத்துப் பார்த்துக் கொடுத்தால் போதுமானது. ஆகவே நமது நகராட்சி துரிதமாக நடவடிக்கை எடுத்து ஆவன செய்ய வேண்டியது.
----------------------------------------
மக்களே!
மக்களுடைய தேவையை பூர்த்தி செய்ய இயலாத, மக்கள் மீது அக்கறை இல்லாத, பெரும்பாலான சுயநல விரும்பிகள் உறுப்பினர்களாக இருக்கக்கூடிய அல்லது திறமையற்றவர்கள் உறுப்பினர்களாக இருக்கின்ற நகர்மன்றத்தை மறந்துவிடுங்கள்.
இன்ஷா அல்லாஹ்! வருகிற நகராட்சி தேர்தலுக்கு முற்றும் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுங்கள். அவரவர்கள் வார்டுகளில் உள்ள
திறமையானவர்களை தேர்ந்தெடுத்து, ஊரையும், ஊர் மக்களையும் நோய், நொடியில்லாமல் வாழ வழி செய்யுங்கள்.
--------------------------------------
குறிப்பு :-
சட்டசபைத் தேர்தலுக்கும், பாராளுமன்றத் தேர்தலுக்கும் எது நம்மால் ஓன்று பட்டு உழைத்து வெற்றியை அடைய மிகவும் சிரமமோ அதற்கெல்லாம் நம்மால் நிறைய "கருத்துக்களை" எழுதி மக்களை விழிப்படைய முயற்சிக்கிறோம்.
ஆனால் நம்முடைய ஊர் விசயமாக அதுவும் 2, 3 தெருக்களில் உள்ள மக்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து அனுப்பக்கூடிய கவுசிலர்களைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முயற்சிப்பதில்லை அது ஏன்?
சட்டசபைக்கோ - பாராளுமன்றத்துக்கோ நம் ஊர் மக்களால் மட்டும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அனுப்ப இயலாது. ஆனால் இன்ஷா அல்லாஹ்! நம்ம ஊர் நகர் மன்றத்தை நம் மக்களால் நிச்சியமாக மாற்றி அமைக்க முடியும் என்பதை நம் மக்கள் அனைவரும் உணர்ந்து செயல்படுவோமாக. அல்லாஹ் அதற்கு துணை செய்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross