செய்தி: உலக சுற்றுச்சூழல் நாள்: நகராட்சியின் சார்பில் அரசு மருத்துவமனை, ரெட் ஸ்டார் நீர்த்தேக்கத் தொட்டி வளாகங்களில் மரம் நடு நிகழ்ச்சி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நீர் தேக்க தொட்டியில் தண்ணீர் இல்லை அதன் அருகில் மரமாவது நடுகிறார்களே நன்றி posted bymackie noohuthambi (chennai)[07 June 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 35208
ரெட் ஸ்டார் வளாகத்தில் உள்ள நீர்தேக்க தொட்டியாகட்டும் மொகுதூம் பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்க தொட்டியாகட்டும் இங்கெல்லாம் தண்ணீர் எப்போதும் நிரப்பப் படவில்லை. பல ஆண்டுகளாக அவை வெறும் தொட்டிகளாகவே இருக்கின்றன. சட்டமன்ற உறுப்பினர் வந்தார், சூளுரைத்து சென்றார்.. ஒன்றும் நடக்க வில்லை.
இப்போது நீர்தேக்க தொட்டி அருகே மரங்கள் நடுகிறார்கள். இதற்கு தேவையான தண்ணீர் எங்கிருந்து கிடைக்கும்.. ஏற்கெனவே மொகுதூம் பள்ளி நீர்தேக்க தொட்டி அருகில் மரம் நடு விழா மிக விமரிசையாக நடந்தது, நானும் அதில் கலந்து கொண்டேன். அதன் பிறகு அந்த மரங்கள் வளர்ந்ததா, பூ பூத்ததா நிழல் கொடுத்ததா பட்டுப் போனதா என்று யாரும் கவனிக்கவில்லை (இதில் நானும் குற்றவாளிதான்).
சுற்று சூழல் பசுமை தாயகம் என்றெல்லாம் விளம்பரங்கள் நிறைய இருக்கின்றன. அதுபோல் இதுவும் இருக்குமா அல்லது, கண்ணியம் மிக்க பக்ரின் ஹாஜி அவர்கள் தனது தள்ளாத வயதிலும் இங்கு வந்து மரம் நடுவது பலனளிக்குமா, அல்லது பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என்று போய்விடுமா பொறுத்திருந்து பார்ப்போம்.
நகர் மன்றம் இதில் அக்கறை செலுத்தினால் இந்த மரம் நடும் நிகழ்ச்சி நல்ல பலனை தரும்.
செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா என்று மக்களை உசுப்பிவிட்டு வெற்றிக் கனியை பறித்த புரட்சி தலைவியின் வழி நின்று நகரமன்ற தலைவி இதை செய்வார்கள் என்று நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross