ஜூன் 05 அன்று உலக சுற்றுச்சூழல் நாளாகும். இதனை முன்னிட்டு, காயல்பட்டினம் நகராட்சி சார்பில் மரம் நடும் நிகழ்ச்சி, காயல்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகம், அப்பா பள்ளித் தெரு - ரெட் ஸ்டார் சங்கம் அருகிலுள்ள நீர்த்தேக்கத் தொட்டி வளாகம் ஆகிய இடங்களில் மரங்கள் நடும் நிகழ்ச்சிகள், ஜூன் 05ஆம் நாள் வியாழக்கிழமையன்று நடைபெற்றன.
அன்று 11.00 மணியளவில் காயல்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மரங்கள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு மருத்துவமனைக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வரும் கித்மத் சேவா சங்க நிறுவனர் ஹாஜி எம்.எம்.பக்ரீன் முன்னிலை வகித்து, மரங்களை எடுத்துக்கொடுக்க, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் மரத்தை நட்டு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
அவரைத் தொடர்ந்து, நகர்மன்ற உறுப்பினர்களான கே.ஜமால், எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், அலுவலர்கள் மரங்களை நட்டு, நீரூற்றினர்.
அன்று 16.30 மணியளவில், அப்பாபள்ளித் தெரு - ரெட் ஸ்டார் சங்கம் அருகிலுள்ள நீர்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகர்மன்ற துணைத்தலைவரும், 11ஆவது வார்டு உறுப்பினருமான எஸ்.எம்.முகைதீன், நிகழ்விடம் அமைந்துள்ள 09ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏ.ஹைரிய்யா, 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், நகராட்சி ஆணையாளர் ம.காந்திராஜ், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், நகரமைப்புத் திட்டப் பணிகள் ஆய்வாளர் அறிவுடைநம்பி, பணி மேற்பார்வையாளர் செல்வமணி, குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார், துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லட்சுமி உள்ளிட்டோர் மரங்களை நட்டு நீரூற்றினர்.
செய்தி & படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
படங்களுள் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |