காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா இம்மாதம் 07ஆம் நாள் சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு, கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
கல்லூரியின் தலைவர் எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப் தலைமை தாங்குகிறார். உதவி தலைவர் வாவு எஸ்.காதிர் ஸாஹிப் வரவேற்றுப் பேசுகிறார்.
கல்லூரி முதல்வர் மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழை (ஸனது) வழங்கி, பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார்.
கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் அய்யம்பேட்டை ஸுபுலுஸ் ஸலாம் அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ பி.எம்.ஜியாஉத்தீன் அஹ்மத் பாக்கவீ ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
கர்நாடக மாநிலத்தின் மார்க்கத் தீர்ப்பாளர் (முஃப்தீ) மவ்லவீ அஸ்ஸெய்யித் ஷாஹ் ஷம்சுல் ஹக் காதிரீ அல்ஹஸனீ வல் ஹுஸைனீ இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
கல்லூரியின் உதவி செயலாளர் ‘ஜெஸ்மின்’ ஏ.கே.கலீலுர்ரஹ்மான் நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுறுகின்றன.
இவ்விழாவில், 3 மாணவர்கள் ‘மவ்லவீ ஆலிம் மஹ்ழரீ’ பட்டமும், 3 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டமும் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விழா ஏற்பாடுகளை, கல்லூரி செயலாளர் எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா, கணக்குத் தணிக்கையாளர் எம்.கே.முஹ்யித்தீன் தம்பி (துரை) உள்ளிட்ட நிர்வாகிகள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும், மஹ்ழரா அரபிக் கல்லூரியின் www.mahlara.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், காயல்பட்டினம் குத்பிய்யா மன்ஸிலின் www.quthbiyamanzil.org என்ற இணையதளத்திலும் நேரலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விழா குறித்து கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரம்:-
தகவல்:
மவ்லவீ ஹாஃபிழ் S.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ
பேராசிரியர் - மஹ்ழரா அரபிக்கல்லூரி
மஹ்ழரா அரபிக்கல்லூரியில் கடந்தாண்டு (1434) நடைபெற்ற பட்டமளிப்பு விழா குறித்த அறிவிப்புச் செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மஹ்ழரா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |