காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா, திரளான மக்கள் பங்கேற்க - 25 வகையான நலத்திட்ட உதவிகள் வினியோகத்துடன் நடைபெற்று முடிந்துள்ளது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை வருமாறு:-
நகரில் பொதுநலப் பணிகளாற்றல், சமூகத் தீமைகளைக் களைதல் உள்ளிட்ட செயல்திட்டங்களை உள்ளடக்கி, 1989ஆம் ஆண்டில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி வளாகத்தில் துவங்கி செயல்பட்டு வருவது காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு.
25ஆம் ஆண்டு வெள்ளி விழா:
இவ்வமைப்பின் 25ஆம் ஆண்டு நிறைவு வெள்ளி விழா இம்மாதம் 03ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று, அமைப்பின் அலுவலகம் அமைந்துள்ள குத்பா பெரிய பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கத்முல் குர்ஆன்:
அன்று அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின், அமைப்பின் பெயர் காரணகர்த்தாவான காயிதேமில்லத் முஹம்மத் இஸ்மாஈல் ஸாஹிப் அவர்களின் பெயரில் கத்முல் குர்ஆன் ஓதி, ஈஸால் தவாப் செய்யப்பட்டது. குத்பா பெரிய - சிறிய பள்ளிகளின் துணை இமாம் மவ்லவீ என்.எம்.ஓ.முஹம்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ இந்நிகழ்விற்குத் தலைமை தாங்கினார்.
வெளியரங்க நிகழ்ச்சிகள்:
அன்று 17.00 மணியளவில், வெள்ளி விழா மற்றும் சமூக நலப்பணிகள் அர்ப்பணிப்பு விழா ஆகியன - மர்ஹூம் ஹாஜி எம்.எம்.உவைஸ் நினைவு மேடையில் நடைபெற்றது.
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினரும், துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் செயலாளருமான ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை, அமைப்பின் கவுரவ ஆலோசனைக் குழு உறுப்பினர்களான ஹாஜி வி.எஸ்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி, ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர், டாக்டர் பி.எம்.ஏ.ஜாஃபர் ஸாதிக், ஹாஜி என்.எம்.எம்.மஹ்மூத், ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், ஹாஜி எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா, ஹாஜி குளவி சேக் அப்துல் காதிர், ஹாஜி எஸ்.ஏ.ஜவாஹிர், ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், ஹாஜி நேஷனல் காஜா முஹ்யித்தீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எம்.எல்.முஹம்மத் முஹ்யித்தீன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் பி.எம்.ஐ.முஹம்மத் ஹஸன் கிராஅத் ஓதி விழா நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். துணைத்தலைவர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கே.ஏ.எம்.முஹம்மத் உதுமான் இஸ்லாமிய இன்னிசை பாடினார். அமைப்பின் தலைவர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, அமைப்பின் சார்பில் விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
விழாவிற்குத் தலைமை தாங்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் தலைமையுரையாற்றினார்.
சிறப்புரைகள்:
காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ துவக்கவுரையாற்றினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை அப்துல் மஜீத் சிறப்புரையாற்றினார்.
மஃரிப் தொழுகைக்கான இடைவேளையைத் தொடர்ந்து நடைபெற்ற அமர்வில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளரும், காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் செயற்குழு உறுப்பினருமான எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, அமைப்பின் ஆண்டறிக்கையை வாசித்தார்.
சமூக நலப்பணிகள் அர்ப்பணிப்பு, நலத்திட்ட உதவிகள் வினியோகம்:
பின்னர், நலத்திட்ட உதவிகள் வழங்கி, சமூக நலப்பணிகள் அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜித்தா காயல் நற்பணி மன்றத் தலைவர் ஹாஜி குளம் அஹ்மத் முஹ்யித்தீன், சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் ஹாஜி எம்.எம்.மொகுதூம் முஹம்மத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் ஆகியோர் நலத்திட்ட உதவிப் பொருட்களை தம் கரங்களால் வினியோகிக்க, பயனாளிகள் சார்பில் நகரப் பிரமுகர்கள் அவற்றைப் பெற்றுக்கொண்டனர்.
சமூக நலப்பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளின் சுருக்க விபரக் குறிப்பு:-
>>> இக்ராஃ கல்விச் சங்கத்தின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், நன்மதிப்பெண் பெற்ற மாணவர்களுள் தகுதியுடையோருக்கு மட்டும் முழு கல்வி உதவித்தொகையும் வழங்க நடப்பாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டத்தின் கீழ், மர்ஹூம் குளம் அபூபக்கர் லெப்பைத்தம்பி ஆலிம் அவர்கள் நினைவாக அன்னாரின் குடும்பத்தினர் சார்பில், இந்த வெள்ளி விழாவின்போது ஒரு மாணவருக்கான முழு கல்வி உதவித்தொகைக்கு அனுசரணை வழங்கப்பட்டுள்ளது.
>>> இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில இளைஞரணி அமைப்புக்குழு உறுப்பினர் பாலவாக்கம் ஹஸன் அனுசரணையில், காயல்பட்டினம் பஞ்சாயத்து வீதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மஸ்ஜித் ஜீலானீ பள்ளிக்கு ரூபாய் 40 ஆயிரம் மதிப்பில், பேட்டரியுடன் கூடிய இன்வெர்ட்டர் கருவி வழங்கப்படுகிறது.
>>> ஏழை சிறுவர்களுக்கு கத்னா செய்தல், சிறுதொழில்கள் செய்வதற்காக, ரூபாய் 2 லட்சம் மதிப்பில், தையல் மிஷின், மாவு அரைக்கும் இயந்திரம், மண்ணெண்ணெய் அடுப்பு, இட்லி சட்டி உள்ளிட்ட பொருட்கள் வினியோகிக்கப்பட்டது.
>>> ஏழைச் சிறுவர்களுக்கு கத்னா இலவசமாக செய்யப்பட்டது.
வாழ்த்துரை:
மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வரும் - தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீயுமான மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ, காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினர் உரை:
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில செய்தி தொடர்பாளரும், சென்னை - மந்தைவெளி ஈத்கா மஸ்ஜித் தலைமை இமாமுமான மவ்லவீ கா.மு.இல்யாஸ் ரியாஜீ இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, சிறப்புரையாற்றினார்.
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் செயலாளர் கே.முத்து இப்றாஹீம் நன்றி கூற, குத்பா பெரிய பள்ளியின் இமாம் ஹாஃபிழ் எஸ்.கே.ஏ.நத்தர் ஸாஹிப் துஆவுக்குப் பின் ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் யாவும் இறையருளால் இனிதே நிறைவுற்றன.
கலந்துகொண்டோர்:
இவ்விழாவில், காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பகுதி பிரமுகர்கள், ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள், நகர்மன்ற அங்கத்தினர் உட்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ஏற்பாடு:
வெள்ளி விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும், அமைப்பின் செயற்குழு உறுப்பினர்களான எஸ்.எம்.பி.ஷேக் அப்துல் காதிர், கே.எஸ்.எல்.மஹ்மூத் ரஜீன், எம்.ஏ.உமர் கத்தாப், கே.எம்.டி.அபூபக்கர் ஸித்தீக் மற்றும் அமைப்பின் அங்கத்தினரான வி.எம்.ஏ.ஷேக்னா லெப்பை, எஸ்.எம்.பி.மஹ்மூத் தீபி, எஸ்.ஏ.தவ்ஹீத், எஸ்.எம்.தைக்கா உமர், ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், ஹாஃபிழ் ஏ.எல்.ஷம்சுத்தீன் காமில், பொருளாளர் ஏ.எம்.எஸ்.அப்துல் ரஷீத், இணைச் செயலாளர்களான என்.எம்.ஏ.அப்துல் ரஹ்மான், வி.எம்.கிழுறு முஹம்மத் ஆகியோர் செய்திருந்தனர்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
செய்தியாக்கம்:
எஸ்.கே.ஸாலிஹ்
காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |