காயல்பட்டினம் அலியார் தெருவில் இயங்கி வரும் சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டரின் 17ஆம் ஆண்டு நிறைவு விழா “அழகிய வாழ்வு பெற” எனும் தலைப்பில், இம்மாதம் 08ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (நாளை) 17.00 மணிக்கு, தஃவா சென்டர் முன்பகுதியில் நடைபெறுகிறது.
இஸ்லாம் மார்க்கத்தை தாமாக முன்வந்து தம் வாழ்வியல் நெறியாக்கிக் கொண்ட – தஃவா சென்டரில் பயிலும் மாணவ-மாணவியர் இவ்விழாவில் பங்கேற்று, தமது அனுபவங்களை உரைகளாக வழங்கவுள்ளனர்.
அத்துடன், சென்னையைச் சேர்ந்த பொறியாளரும், இஸ்லாம் மார்க்கத்தைத் தன் வாழ்வியல் நெறியாக்கிக் கொண்டு, அழைப்புப் பணியில் செயலாற்றி வருபவருமான சுரேஷ் பாபு என்ற அப்துர்ரஹீம் ஸாலிஹ் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சிறப்புரையாற்றவிருக்கிறார்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொள்ளுமாறும், அவரவருக்கு அறிமுகமான - முஸ்லிமல்லாத மக்களையும் இந்நிகழ்ச்சிக்கு அழைத்து வருமாறும், தஃவா சென்டர் நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் மக்களுக்காக, நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் http://www.ustream.tv/channel/dawahcentre என்ற இணையதள பக்கத்தில் ஒளி நேரலை செய்யப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழா குறித்து தஃவா சென்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரம்:-
தஃவா சென்டர் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |