காயிதேமில்லத் பிறந்த நாளை முன்னிட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
ஜூன் 05ஆம் நாளன்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனர் காயிதேமில்லத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு, காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் கட்சியின் பிறைக்கொடியேற்றும் நிகழ்ச்சி, 17.30 மணியளவில் நடைபெற்றது.
அரபி ஷாஹுல் ஹமீத் கிராஅத் ஓத, இளைஞரணி நகர துணை அமைப்பாளர் எச்.எம்.ஜிஃப்ரீ வரவேற்றுப் பேசினார். காயிதேமில்லத் அவர்களின் சரித்திரச் சுருக்கவுரையை மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ ஆற்றினார்.
கட்சியின் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் கொடியேற்றி, தலைமையுரையாற்றினார்.
காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.எஸ்.ஏ.செய்யித் முஹம்மத் மன்பஈ துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், சுதந்திர தொழிலாளர் யூனியன் மாவட்ட அமைப்பாளர் ஆர்.பி.ஷம்சுத்தீன், இளைஞரணி நகர அமைப்பாளர் ஏ.ஆர்,ஷேக் முஹம்மத், நகர நிர்வாகிகளான பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், எம்.எச்.அப்துல் வாஹித், அரபி முஹம்மத் முஹ்யித்தீன், கே.எம்.டி.அபூபக்கர் சித்தீக் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கட்சியின் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் செய்திருந்தார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
காயிதேமில்லத் பிறந்த நாளை முன்னிட்டு கடந்தாண்டு நடைபெற்ற நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |