புகையிலை, மதுப்பழக்கத்தினால் விளையும் தீமைகளை விளக்கி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை மாணவரணி சார்பில் நகரில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதோடு, பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டுள்ளன.
தகவல் & படம்:
‘தேக்’ முஜீப்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
1. Re:...இல்லம் தோறும் மக்கள் உள்ளம்தோறும் செல்லவேண்டும் posted bymackie noohuthambi (chennai)[07 June 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 35206
நல்ல முயற்சி. வெளியூர்களில் பெட்டிக் கடைகளில் "இங்கு சிகரட், பீடி விற்பனைக்கு இல்லை" என்று போர்டு போட்டிருக்கிறார்கள். முஸ்லிம்கள் நிறைந்த நமதூரிலுள்ள பெட்டிக் கடைகளில் சிகரட் பீடி தாராளமாக கிடைக்கிறது. ஆண்மையின் அடையாளமாக, பணம் படைதவர்களின் அங்கீகாரமாக இவை ஆக்கப்பட்டு பல காலங்களாகி விட்டன.
நான் chain smoker என்று சொல்லிக் கொள்வதில் ஒரு பெருமை. எவை எல்லாம் உடலுக்கு உணர்வுக்கு தீங்கு விளைவிக்கின்றனவோ அவை எல்லாம் இஸ்லாத்தின் பார்வையில் ஹராம்தான். இதை சொல்லிக் கொடுக்க வேண்டிய உலமாக்களும் இந்த தீமைக்கு அடிமையாகி இருந்தார்கள், இருக்கிறார்கள் எனபது கசப்பான உண்மை.
சமூக சீர் திருத்தங்கள் இப்படிப்பட்ட விஷயங்களில் இருந்து ஆரம்பிக்கப் பட வேண்டும். ஒருவர் சுவர்க்கம் போக நபிகள் நாயகம் இடம் கேட்ட போது, அவர்கள் சொன்னார்கள், நீ பொய் சொல்லாதே...இன்னொருவர் கேட்டபோது, நீ கோபப் படாதே..எத்தனை சிறிய சொற்கள் எவ்வளவு பெரிய தாக்கத்தை அந்த நபி தோழர்களிடம் ஏற்படுத்தியது. நம்மிடம் அந்த வழிமுறைகள் நடைமுறைகள் விதிமுறைகள் விடைபெற்று சென்று விட்டனவே..
ஒரு பூட்டை திறக்க அதன் நெற்றியில் சுத்தியலால் அடித்தும் திறக்கலாம். அதன் இதயபகுதியில் ஒரு சிறிய சாவியால் மயிலிறகுபோல் வருடியும் திறக்கலாம். நாம் எதை பயன்படுத்துகிறோம்... ஐந்து விரல்களால் அணைக்கவும் செய்யலாம், அதே ஐந்து விரல்களால் காயம்பட அடிக்கவும் செய்யலாம். நாம் எதை பயன்படுத்தி நம்மை சாதனயாளர்களாக அடையாளம் காட்ட முனைகிறோம்.
இதை முன்னெடுத்து செல்லும் சகோதரர்கள் கடை கடையாக -வீடு வீடாக சென்று அவர்களிடம் சிகரட், பீடி யின் பிடியிலிருந்து மக்களை விடுவிக்க உதவி செய்யும்படி வேண்டிக் கொள்ளலாம் - உணர்வுகள் காயப் படாமல். - மென்மையான அணுகுமுறை - நிதானமான பேச்சுமுறை மூலம் இந்த நல்ல விஷயத்தை நமது மக்களுக்கு எடுத்து சொல்லலாம் - குத்பா மேடைகளில் - திருமண மேடைகளில் - பட்டமளிப்பு விழாக்களில் எங்கும் இதை சொல்லாலாம்.
அல்லாஹ் இந்த புகையிலை மதுவின் தீமைகளில் இருந்து இந்த முஸ்லிம் சமுதாயத்தை மட்டுமல்ல, இந்த நாட்டு மக்களையே காப்பாற்றுவானாக. உங்கள் நல்ல முயற்சிகளை அல்லாஹ் கபூல் செய்வானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross