இந்திய ஹஜ் குழு மூலம் இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள - மத்திய அரசின் வெளியுறவு துறை அமைச்சகம், கூடுதலாக 2737 இடங்கள் ஒதுக்கியுள்ளது. இவ்விடங்கள் - ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள இஸ்லாமியர்களின் விகிதாசார அடிப்படையில் பகிர்ந்து கொடுக்கப்படவுள்ளது.
அதன்படி, தமிழகத்திற்கு 100 இடங்கள் கூடுதலாக வழங்கப்படுகிறது. காத்திருப்போர் பட்டியலில் முதல் 100 இடத்தில உள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பெறுவர். துவக்கமாக தமிழகத்திற்கு 2361 இடம் ஒதுக்கப்பட்டது. பின்னர் கூடுதலாக 311 இடங்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தேர்வாகியுள்ள பயணியர் - ஜூன் 9 க்குள், 81,000 ரூபாய் செலுத்தியதற்கான ரசீது, பாஸ்போர்ட், வண்ணப்புகைப்படம் ஆகியவற்றை - மாநில ஹஜ் குழுவிடம் சமர்ப்பிக்கவேண்டும்.
2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி - இந்தியாவில் உள்ள மொத்த இஸ்லாமியர் எண்ணிக்கை - 95,354,825. தமிழக இஸ்லாமியர்கள் எண்ணிக்கை - 34,70,647. இந்தியாவில் உள்ள மொத்த இஸ்லாமியர்களில், 3.6397 சதவீதத்தினர் தமிழகத்தில் உள்ளனர்.
|