வாக்காளர் பட்டியல்களின் தொடர் திருத்தம் தற்போது நடைபெற்று வருகின்றது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பு வருமாறு:
வாக்காளர் பட்டியல்களின் தொடர் திருத்தம் தற்போது நடைபெற்று வருகின்றது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட வேண்டும் என்று விரும்பும் தகுதியுள்ள நபர்கள்
www.elections.tn.gov.in/eregistration என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
2. வாக்காளர் பட்டியல்களில் பெயர் சேர்க்கப்பட விரும்பும் தகுதியுள்ள நபர்கள் படிவம் 6-இலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களிலோ (அதாவது வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சிகள்) அல்லது வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களிலோ (மாநகராட்சிப் பகுதிகளில் மண்டல அலுவலகங்கள், மற்ற பகுதிகளில் வருவாடீநுக் கோட்டாட்சியர் அலுவலகங்கள்) சமர்ப்பிக்கலாம். வட்டாட்சியர் அலுவலகங்களிலுள்ள தலைமையிடத் துணை வட்டாட்சியர், வருவாடீநுக் கோட்டாட்சியர் அலுவலகங்களிலுள்ள தலைமை உதவியாளர், மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களிலுள்ள அலுவலக மேலாளர் ஆகியோர் இந்த தொடர் திருத்தத்தில் விண்ணப்பங்களைப் பெற
நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
படிவம் 6-உடன் தங்கள் வசிப்பிட முகவரிக்கான சான்றுடன் அவர்களிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டும். 18-24 வயதுடையோர் தங்கள் விண்ணப்பத்துடன் தங்கள் வயதிற்கான சான்றினையும்
சமர்ப்பிக்கவேண்டும். விண்ணப்பங்களின்மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வாக்காளர்
பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டோருக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும்.
இதேபோல், தங்கள் பெயர் மற்றும் விவரங்களில் திருத்தங்கள் செடீநுயப்பட விரும்புவோர் படிவம் 8-லும் , பெயர் நீக்கலுக்காக படிவம் 7-லும் விண்ணப்பிக்கவேண்டும்.
தலைமைத் தேர்தல் அதிகாரி,
தமிழ் நாடு.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை,
சென்னை - 9..
|