Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:37:18 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13863
#KOTW13863
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுன் 5, 2014
காயல்பட்டினம் உட்பட தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளிலும் விரைவில் அம்மா உணவகம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3023 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் உட்பட தமிழகத்தின் 124 நகராட்சிகளில் விரைவில் "அம்மா" உணவகங்கள் துவக்கப்படவுள்ளன. இது குறித்து தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

“குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசினை நானிலமே போற்றும்” என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க, தமிழகத்தின் தேவைகளையும், தமிழ்நாட்டு மக்களின் நாடித் துடிப்பையும் தெளிவாக உணர்ந்து, அதற்கேற்றபடி திட்டங்களைத் தீட்டி செயல்படுத்துகின்ற அரசாக எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு விளங்கிக் கொண்டு இருக்கின்றது.

அந்த வகையில், விலைவாசி உயர்வு என்னும் கொடூரத் தாக்குதலிலிருந்து தமிழக மக்கள், குறிப்பாக ஏழை, எளிய மக்கள், உழைக்கும் வர்க்கத்தினர் விடுபட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, மலிவு விலையில் தரமான உணவினை ஏழை எளிய மக்கள் வயிறார உண்ணும் வகையில், 15 அம்மா உணவகங்களை சென்னை மாநகராட்சி பகுதிகளில் 19.2.2013 அன்று நான் திறந்து வைத்தேன். பின்னர், இந்தத் திட்டம் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் விரிவாக்கப்பட்டது.

மக்களின் விருப்பத்தினைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள பிற மாநகராட்சிப் பகுதிகளிலும், சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையிலும் “அம்மா உணவகங்களை” காணொலிக் காட்சி மூலம் நான் திறந்து வைத்தேன். தற்போது சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 203 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், சென்னை கீடிநப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை, கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனை வளாகங்களில் அம்மா உணவகங்கள் அமைப்பதற்கான கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மதுரை மாநகராட்சியில் 11 அம்மா உணவகங்களும், இதர மாநகராட்சிகளில் தலா 10 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. ஆக மொத்தம் தற்போது 294 அம்மா உணவகங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன.

இந்த அம்மா உணவகங்களில், காலை 7 மணி முதல் 10 வரை இட்லி, சாம்பார் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும் , தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் , விற்பனை செய்யப்படுகின்றன.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில், காலை சிற்றுண்டியின் போது, இட்லி தவிர, பொங்கல், சாம்பார் ஐந்து ரூபாய்க்கும்; மதிய உணவின் போது, எலுமிச்சை சாதம் அல்லது கறிவேப்பிலை சாதம் 5 ரூபாய்க்கும்; மாலை வேளைகளில் இரண்டு சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள், அன்றாட கூலி வேலை புரிபவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

விலைவாசி உயர்விலிருந்து ஏழை, எளிய மக்களைப் பாதுகாக்கும் இந்த அம்மா உணவகங்கள் குறித்து அகில உலக அளவில் பேசப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல், பிற மாநிலங்களும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

ஏழை, எளிய மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் அம்மா உணவகங்களின் பயன் பிற நகர்ப்புற மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, அடுத்தகட்டமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் கூடுதலாக தலா ஒரு அம்மா உணவகம் வீதம், 200 அம்மா உணவகங்கள்; ஏற்கெனவே அம்மா உணவகங்கள் நிறுவப்பட்ட மதுரை, வேலூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி தவிர்த்து, ஏனைய மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் தலா ஒன்று வீதம் 27 அம்மா உணவகங்கள், 124 நகராட்சிகளில் 129 அம்மா உணவகங்கள்; திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சிகளில் தலா ஒன்று வீதம், 2 அம்மா உணவகங்கள்; கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகராட்சிகளில் கூடுதலாக தலா ஒன்று வீதம் 2 அம்மா உணவகங்கள் என மொத்தம் 360 புதிய அம்மா உணவகங்களை திறக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த அம்மா உணவகங்கள் விரைவில் செயல்படத் துவங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கெனவே தமிழ் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அம்மா உணவகங்களுடன், இவற்றையும் சேர்த்து, மொத்தம் 654 அம்மா உணவகங்கள் மக்களின் தேவையை நிறைவு செய்யும்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கை, மலிவான விலையில் தரமான உணவை மேலும் பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் பெற வழி வகுக்கும்.

ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை,
சென்னை - 9..


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by syedahmed (GZ,China) [05 June 2014]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 35189

this scheme is highly appreciated in all among the countries ,which eagerly getting much benefits to the poverty people. we express our gratitude to our honourable chief minister and put forth core of thanks for adequate similar features in order to make several benefits attaining only for the poor people in our state.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [06 June 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 35197

வரவேற்கவேண்டியவை. நல்ல தரமான, நியாய விலை, மலிவுடனும் சுவையாகவும் இருக்கும். இட்லிக்கு இனி பஞ்சம் இல்லை.

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா வாழ்க

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYALPATNAM) [06 June 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35200

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் தமிழக முதல்வர் அம்மா அவர்களின் இந்த விரிவாக்க திட்டம் '' அனைத்து '' நலிந்த '' + நடுத்தர மக்களின் பிராத்தனைகள் .....அம்மா அவர்களுக்கு நிச்சயம் உண்டு .......

நமது ஊருக்கும் இத்திட்டம் கண்டிப்பாக தேவையே ......

இது போன்ற நம் அம்மா அவர்களின் ஏழை மக்களுக்கான '' நற்பல காரியங்கள் தொடரட்டும் .....

>>>> நாம் வாழ்த்துவோம் ....தொடரட்டும் மக்களுக்கான தங்கள் சேவை <<<< வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved