Re:... posted byVilack SMA (kayalpatnam)[08 June 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 35213
மக்களின் ஒத்துழைப்பு அறவே இல்லை . இதுதான் முக்கிய காரணம் . ஆனால் இதையே எத்தனை காலத்திற்குத்தான் சொல்லி புலம்பிகொண்டிருப்பது !
இந்த விசயத்தில் நகராட்சி மிகக்கடுமையான சட்டதிட்டங்கள் இயற்றி , அதை செயல்படுத்த வேண்டும் . இல்லையேல் ஊர் இப்படித்தான் நாறும் .
1. குப்பை தொட்டி இருக்கும் இடங்களில் குப்பை தொட்டியில் மட்டும்தான் குப்பையை கொட்ட வேண்டும் . மீறுவோர் கண்டறியப்பட்டால் மிகக்கடுமையான நடவடிக்கைகளை (தண்ணீர் , மின்சாரம் துண்டிப்பு எதிர்கொள்ள நேரிடும் .
2. குப்பை லாரி வரும்போது அவர்களிடம் நேரில் கொடுக்கப்படும் குப்பைகள் மட்டுமே பெற்றுகொள்ளபடும் . தெருவில் கொட்டப்படும் குப்பைகளை அவர்கள் அள்ள மாட்டார்கள் . மேலும் தெருவில் கிடக்கும் குப்பைகள் யாருடையது என்று கண்டறியப்பட்டு , அதிகபட்ச அபராதம் மற்றும் மின்சாரம் , தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்படும் .
3. வீட்டின் மரங்களை வெட்டி தெருவில் போடுதல் , உடைத்தெடுத்த கட்டிட பொருட்கள் இவைகள் குப்பைகள் அல்ல. இவைகள் தெருவில் கிடந்தாலும் குப்பை லாரியில் வருபவர்கள் இவற்றை அள்ள மாட்டார்கள் . சம்பத்தப்பட்டவர்கள் கூலிக்கு ஆட்களை வைத்து அதை அப்புறப்படுத்த வேண்டும் . மீறுவோர் மீது அபராதத்துடன்கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ள படும் .
நகராட்சி இதுபோன்ற சட்டதிட்டங்களை இயற்றி அதை நடைமுறைபடுத்தி பார்க்கலாம் . நிச்சயம் வெற்றி கிடைக்கும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross