செய்தி: DCW ஆலை விரிவாக்கத்திற்கு அரசு அனுமதியளித்ததைக் கண்டித்து ஜூன் 20 அன்று மனித சங்கிலி போராட்டம்! KEPA நடத்திய கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
புண்ணிய நோக்கத்தின் படிக்கட்டுகள்!. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[08 June 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35219
வித விதமான போராட்ட வகைகளை அறிவிப்பது ஒருபுறம் இருக்கட்டும்,அதன்படி போராடவும் செய்வோம். அதே நேரத்தில் மக்களுக்கு இந்த போராட்டத்தின் முக்கியத்துவத்தை முதலில் தெளிவுபடித்திட வேண்டும்.
யாருக்காக போராடுகிறோம் ,எத்தனை சகோதர சகோதிரிகளை இழந்ததின் பாதிப்பினால் நாம் போராடுகிறோம்,இன்னும் நம்மை அழிக்க துடிக்கும் நாசகார ஆலையின் பேராபத்தின் துன்பங்களை துடைத்தெரியவேண்டுமென்ற வீரியத்தில் நாம் போராடுகிறோம்! ஒவ்வொரு காயல் குடிமகனும் இலகுவாக புரிந்து கொள்ளும் அளவிற்கு நம் போராட்டத்தின் முக்கியத்துவம் அவர்களின் மனதில் ஆழமாக பதிந்திடல் வேண்டும் இது தான் நமது முதல் தலையாய கடமை!
தெருவில் கூவி "வாடா"விற்கும் மூதாட்டி முதல் வைரம் விற்கும் அதிர்பர்கள்வரை ஒட்டுமொத்தமாக இந்த எதிர்ப்பணி போராட்டத்தின் தார்பரியத்தையறிந்து எப்பொழுது நடத்த போகிறீர்கள்? நாங்கள் களம் இறங்க தயார் என்ற வீர உணர்ச்யுடன் ஒன்றிணைந்தால், இந்த ஒரு ஆலை என்ன, ஓராயிரம் ஆலைகளும் இவர்கள் முன்னால் இலவம்பஞ்ச்சே!
எனதன்பு தியாகமிகு "KEPA " குழு கொள்கை வீரர்களே,
நாம் எடுத்து வைக்கும் முயற்சியின் செயல்பாடுகள் நன்றாக சிந்தித்துணர்ந்து சிறப்புமிகு கட்டமைப்பின் வெளிப்பாடாக
வெளிவருமேயானால் வெற்றி இலக்கை எல்லாம் வல்ல அல்லாஹ் இலகுவாக நமக்கு தந்தருல்வானான் ஆமீன்!
புண்ணிய நோக்கத்தின் பாதையில் நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் வல்ல அல்லாஹ் உங்களுக்கும் உங்களுக்க துணையாக வரும் அத்துணை இதயங்களுக்கும் நற்பலனை நல்கிடுவானாக ஆமீன்!.
என் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை "KEPA "வுக்கு காணிக்கையாக்குகிறேன்!அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross