தரம் மிக்க மருத்துவ நிறுவனங்களை கொண்டு மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்த DCW ஏன் முன்வருவதில்லை...? posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[11 June 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 35236
KEPA வின் இந்த முன் எச்சரிக்கை வேண்டுகோள் நமக்காகவும், நாளை நமது சந்ததிகளுக்காகவும் விடப்படும் சரீர நலத்துக்கான வேண்டுகோளாக கருதுகிறேன் - முன் அறிவிப்பு செய்த KEPA நல்லுள்ளங்களுக்கு பாராட்டுக்கள்..
அடையாறு புற்றுநோய் மையம் மற்றும் வேலூரிலுள்ள CMC ஆகிய இரு மருத்துவ நிறுவனங்களை கொண்டு மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்த DCW ஏன் முன்வருவதில்லை..?
DCW ஆலையின் அமில இரசாயன (மெர்க்குரி) கழிவின் வெளியேற்றத்தால் நகரில் பாதிக்கப்பட்ட நபர்களான (குழந்தைகள் - ஆண்கள் - பெண்கள்) நோயாளிகளின் எண்ணிக்கை மிக துல்லியமாக கண்டறியப்பட்டு தனது DCW வின் கொடிய இராசயன கழிவுகளால் சுற்று வட்டார மக்களின் மீதான பாதிப்பு அது வெளியுலகத்திற்கு அறிந்து விடுமோ..! என்ற காரணத்தினால் பொதுவான வெளிப்படை மருத்துவ நிறுவனங்களின் மூலம் மருத்துவ பரிசோதனை ஆய்வு முகாம் நடத்திக்கொள்ள இந்த கொடிய இரசாயன ஆலை முன்வருவதில்லை என்பதை நகர் மக்கள் நன்கு அறிவார்கள்..
தனக்கு விசுவாசமாக (எலும்பு துண்டுக்காக) தனக்கு வேண்டிய மருத்துவ குழு கொண்டு வந்து சும்மா பேருக்கு (DCW) நாங்களும் நகரில் மருத்துவ முகாம் நடத்தினோம் யாருக்கும் எந்த பாதிப்பும் எங்கள் DCW இரசாயன கழிவினால் நோய்களும் நோயாளிகளும் நகரில் இல்லை என உண்மைக்கு புறம்பாக அறிக்கை தயார் செய்து அரசாங்கத்திற்கு சமர்ப்பித்து நாங்கள் DCW ஆலை நிர்வாகம் யோக்கியர்கள்.. நியாயமானவர்கள்.. புண்ணியவான்கள்... என்ற மகுடத்தை (நற்சான்றிதல்) பெற முயற்சிப்பது தெளிவாகிறது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது..
அன்பார்ந்த அணைத்து சமுதாய சகோதரர்களே.. நகரின் பொதுநல அமைப்பின் நிர்வாகிகளே..! இன்று நமது நகரில் மிக வேகமாக பரவி வரும் கொடிய நோயை மறைப்பதற்கு - உண்மைக்கு மாற்றமாக செய்திகளை வெளியில் வெளியிட பல வகைகளில் இந்த DCW கொடிய இரசாயன ஆலை நிர்வாகம் முயற்சித்து வருகிறது அதற்க்கு நாம் நம்மை அறியாமலே DCW வின் மருத்துவ முகாமிற்கு துணை புரிந்து விடாமல் - விலை போகாமல் ஓரணியில் கடைசிவரை நாம் ஒன்றிணைந்து நின்று KEPAவின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர்களுக்கு நாம் பக்க பலமாகவும் மேலும் நல்ல ஆலோசனைகளையும் அளிப்போமாக..
கடந்த தலைமுறை இதன் ஆபத்தை (நோயை) உணரவில்லை.. இன்றைய தலைமுறை இதன் ஆபத்தை (நோயை) அனுபவிக்கிறார்கள்...! நாளைய நமது புதிய தலைமுறைகளுக்காக அந்த ஆபத்தை (நோயை) பரவ விடாமல் தடுக்க KEPA உடன் இணைந்து நம்மால் இயன்ற முயற்சியை மேற்கொள்வோம்..!
சரீர நலத்துக்காக...! இன்றே உணருவோம் நாளை நமது தலைமுறைக்காக...!
எனக்கேன்னே...! உனக்கேன்னே...! நமக்கேன்னே..! இந்த கொடிய இராசயன கழிவின் பாதிப்பு நாளை நமக்கே திரும்பலாம்..!
இறைவன் நம்மையும் மற்றும் அணைத்து சமுதாய மக்களையும்.. அணைத்து சமுதாய மக்களின் தலைமுறைகளையும் பாதுகாப்பானாக.. ஆமின்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross