இன்னாலில்லாஹி வ இன்ன இலஹி ராஜஹூன்.
மர்ஹூம் அவர்களின் மறைவை (பிஹ்ஸ பிஹீல் மௌத்தாக பதிவு செய்து) வல்ல அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற மேன்மையான இடத்தில சேர்த்தருள்வானாக ஆமீன்!
மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார்களுக்கு அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக.அன்னாரின் குடும்பத்தார்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபம் கலந்த ஸலாத்தினை தெரிவிக்கிறேன்.அஸ்ஸலாமு அழைக்கும்! காயமுற்றவர்களும் விரைவில் குணமுடைய வல்ல அல்லாஹ்வை வேண்டிக்கொள்கிறேன்!
எந்த இடத்திற்கு எதை செய்யணும் என்ற ஒரு விவஸ்த்தை இல்லா நாடுதான் நம் நாடு என்ற வெட்க உணர்வுடன் ஒரு சில வார்த்தைகளை கூற விளைகிறேன்.
பழைய கரடு முரடான பாதையைத்தான் இன்னும் பயன்படுத்துவேன் என்று அடம்பிடிக்கும் பல அறிவீணர்கள் இருக்கும் வரை இந்த சாலை விபத்துகளைத் தவிர்க எந்த சக்தியாலும் முடியாது!
வெளிநாட்டிற்கு ஈடாக ஏன் அதைவிட அற்புதமாக் நாற்க்கரக சாலை அமைத்து சென்னையை எட்டு மணியிலிருந்து பத்து மணி நேரத்திற்க்குள்ளாக அடைந்துவிடக்கூடிய வசதிகள் செய்து கொடுத்திருந்தாலும் அந்த அற்புத ரோட்டை எப்படி பயன்படுத்துவது,அதன் அடிப்படை விதிகள் என்ன என்பதைக்கூட அறியாயாத வாகன ஓட்டிகளின் விதி மீறலாலும் ,விதிகளை மதிக்காததாலும் ஏற்ப்படும் விபத்துக்கள் தான் அதிகம்!
விரைவு சாலையில் சென்று கொண்டிருக்கும்பொழுது எதிரே வரும் வாகனங்கள் அவர்களுக்குள்ள அடுத்த பாதையை உபயோகிக்காமல் அதே பாதையில் நேருக்கு நேராக வரும் அந்த ஐந்தறிவு வாகன ஓட்டி ஜீவன்களாலும், சாலையில் பழுதாகி நின்றுகொண்டிருக்கும் வாகனத்திற்கு தமக்கு பின்னால்
வந்துகொண்டிருக்கும் வாகனத்திற்க்காக எந்த அபாய குறியோ,எந்த சிகப்பு விளக்கு எச்சரிக்கையோ இல்லாமல் நிற்கும் வாகனத்தாலும், எந்த இடத்தில சாலையை கடக்கணும் என்ற அறிவில்லாமல் எல்லா விரைவு சாலையிலும் சற்றேனும் சிந்திக்காமல் சாலையை கடப்பவர்களாலும் அதிகதிகமான விபத்துக்கள் நடைபெறுகின்றன!
இந்த சாலைவிதி மீறலை கடுமையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல் துறையின் கடமையாகும்! ஆனால் அவர்களோ.......யாருக்கோ வந்த விதியென்று இருக்கிறார்கள்.விபத்து நடந்த இடத்திற்கு பலமணிநேரம் கழித்து விபத்து புகாரை பதிவு செய்வதோடு சரி. இது எதனால் நடந்தது என்று கிஞ்சிற்றும் கவலை கொள்ளா காவல் துறைவீரர்கள் தான் நம் வீரர்கள்.முதலில் இவர்களுக்குத்தான் சாலை விதியை படித்துக்கொடுக்க வேண்டும்!
ஓரிடத்தில் நானே பார்த்தேன்,நாங்கள் போகும் பாதைக்கு நேராக (அடுத்த பாதையை உபயோகிக்காமல்) எங்களுக்கு எதிராகவே போக்குவரத்து காவல்துறை பிரிவு வாகனம் வந்து கொண்டிருந்தது. அதில் காவலர்கள் சிரிப்போடும்,
மகிழ்வோடுமிருந்த அசைவுகளை எங்களை கடக்கும்பொழுது பார்க்கமுடிந்தது.எந்த அபாய அவசரத்திற்க்காகவோ அவர்கள் செல்லவில்லை என்பது தெள்ளத்தெளிவாக உணர முடிந்தது!ஆக, சாலை விதிகளை கண்காணிப்பவர்களே அதன் விதியை மீறும்பொழுது ஒரு சாதாரண சாமானிய வாகன ஓட்டியிடம் அதை எப்படி எதிர்பார்க்க முடியும்!
இது நம் நாட்டின் சாபக்கேடுதான்.எந்த அரசாங்கம் வந்தாலும் இதே கதிதான்.அரசாங்கம்தான் மாறுகிறேதே தவிர,அதிகாரிகள்
அதே அலட்சிய அகங்க்காரத்தோடுதான் இருக்கிறார்கள் இருப்பார்கள் எதிர்த்து கேட்க எந்த தனி மனிதனாலும் முடியாது.ஏனனில் அவனுக்கு பாதுகாப்பு இல்லை!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross