காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்தவர் மறைந்த பாடகர் ஸாலிஹ் அவர்களின் மகன் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.உமர் ரிழ்வானுல்லாஹ் ஜமாலீ. சிங்கப்பூர் மஸ்ஜித் அப்துல் கஃபூர் பள்ளியில் இமாமாகப் பணியாற்றி வருகிறார்.
சென்னையிலிருந்து, தன் குடும்பத்தாருடன் வாகனத்தில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தபோது, எட்டையபுரம் அருகில் வாகனம் திடீரென விபத்துக்குள்ளானதில், அவருடன் பயணம் செய்த காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்த கே.ஓ.ஸூஃபீ என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
மற்றவர்கள், காயங்களுடன் தப்பினர். தூத்துக்குடியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1. Re:... posted byK.M. Seyed Ahamed (Hong Kong)[18 June 2014] IP: 223.*.*.* Hong Kong | Comment Reference Number: 35430
Assalamu Alaikkum,
Deeply shocked to know the news.
My heartfelt condolence on the unexpected demise of beloved Janab K.O. Sufi kaka. Innalillahi wa inna ilahi rajioon. May Allah forgive Marhoom's sins and place him in Jannah, Aameen. May Allah give enough strength to the bereaved family to bear this irreparable loss.
May Allah help Hafiz S.M.S. Omer Rilwan Alim and rest of the injured family members to get well soon and provide them with long life. Aameen.
4. Re:... posted byomer anas (DOHA QATAR.)[18 June 2014] IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 35434
இந்த கோர விபத்து செய்தியை அறிந்ததும், மனதிற்கு பெரும், அதிர்ச்சியும், வேதனையுமானது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.
விபத்தில் சஹீத் ஆனா சூபி மச்சான் அவர்களின் மக்பிரத்துக்காக வல்ல நாயனிடம் பிர்ராத்திக்கின்றோம். ஆமீன்.
விபத்தில் காயமுற்ற மகனார் ஆலிம் உமர் ரிளுவானுல்லாஹ் ஜமாலி ,& மனைவி,மற்றும் தம்பி மனைவி (மருமகள்கள்) ஆகியோர் பூரண குணம் அடைந்து வீடு திரும்ப பிராத்திக்கின்றோம்.. ஆமீன்.
8. Re:... posted byMohamed Omer K.M.S.L. (Bangalore / Kayalpatnam)[18 June 2014] IP: 121.*.*.* India | Comment Reference Number: 35438
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து அவர்களுக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை வழங்குவானாக மேலும் மர்ஹூம் அவர்களின் குடும்பத்தாருக்கு பொறுமையை வழங்குவானாக ஆமீன். வஸ்ஸலாம்
இறைவன் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவர்கத்தின் மேலான பதவியை அளிப்பானாக ஆமீன் .சிகிச்சை பெற்று வரும் மற்ற உறவினர் அனைவரும் பூரண குணம் அடைந்து வீடு திரும்ப இறைவன் கிருபை செய்வானாக ஆமீன்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலஹி ராஜஹூன்.
மர்ஹூம் அவர்களின் மறைவை (பிஹ்ஸ பிஹீல் மௌத்தாக பதிவு செய்து) வல்ல அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற மேன்மையான இடத்தில சேர்த்தருள்வானாக ஆமீன்!
மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார்களுக்கு அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக.அன்னாரின் குடும்பத்தார்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபம் கலந்த ஸலாத்தினை தெரிவிக்கிறேன்.அஸ்ஸலாமு அழைக்கும்! காயமுற்றவர்களும் விரைவில் குணமுடைய வல்ல அல்லாஹ்வை வேண்டிக்கொள்கிறேன்!
எந்த இடத்திற்கு எதை செய்யணும் என்ற ஒரு விவஸ்த்தை இல்லா நாடுதான் நம் நாடு என்ற வெட்க உணர்வுடன் ஒரு சில வார்த்தைகளை கூற விளைகிறேன்.
பழைய கரடு முரடான பாதையைத்தான் இன்னும் பயன்படுத்துவேன் என்று அடம்பிடிக்கும் பல அறிவீணர்கள் இருக்கும் வரை இந்த சாலை விபத்துகளைத் தவிர்க எந்த சக்தியாலும் முடியாது!
வெளிநாட்டிற்கு ஈடாக ஏன் அதைவிட அற்புதமாக் நாற்க்கரக சாலை அமைத்து சென்னையை எட்டு மணியிலிருந்து பத்து மணி நேரத்திற்க்குள்ளாக அடைந்துவிடக்கூடிய வசதிகள் செய்து கொடுத்திருந்தாலும் அந்த அற்புத ரோட்டை எப்படி பயன்படுத்துவது,அதன் அடிப்படை விதிகள் என்ன என்பதைக்கூட அறியாயாத வாகன ஓட்டிகளின் விதி மீறலாலும் ,விதிகளை மதிக்காததாலும் ஏற்ப்படும் விபத்துக்கள் தான் அதிகம்!
விரைவு சாலையில் சென்று கொண்டிருக்கும்பொழுது எதிரே வரும் வாகனங்கள் அவர்களுக்குள்ள அடுத்த பாதையை உபயோகிக்காமல் அதே பாதையில் நேருக்கு நேராக வரும் அந்த ஐந்தறிவு வாகன ஓட்டி ஜீவன்களாலும், சாலையில் பழுதாகி நின்றுகொண்டிருக்கும் வாகனத்திற்கு தமக்கு பின்னால்
வந்துகொண்டிருக்கும் வாகனத்திற்க்காக எந்த அபாய குறியோ,எந்த சிகப்பு விளக்கு எச்சரிக்கையோ இல்லாமல் நிற்கும் வாகனத்தாலும், எந்த இடத்தில சாலையை கடக்கணும் என்ற அறிவில்லாமல் எல்லா விரைவு சாலையிலும் சற்றேனும் சிந்திக்காமல் சாலையை கடப்பவர்களாலும் அதிகதிகமான விபத்துக்கள் நடைபெறுகின்றன!
இந்த சாலைவிதி மீறலை கடுமையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல் துறையின் கடமையாகும்! ஆனால் அவர்களோ.......யாருக்கோ வந்த விதியென்று இருக்கிறார்கள்.விபத்து நடந்த இடத்திற்கு பலமணிநேரம் கழித்து விபத்து புகாரை பதிவு செய்வதோடு சரி. இது எதனால் நடந்தது என்று கிஞ்சிற்றும் கவலை கொள்ளா காவல் துறைவீரர்கள் தான் நம் வீரர்கள்.முதலில் இவர்களுக்குத்தான் சாலை விதியை படித்துக்கொடுக்க வேண்டும்!
ஓரிடத்தில் நானே பார்த்தேன்,நாங்கள் போகும் பாதைக்கு நேராக (அடுத்த பாதையை உபயோகிக்காமல்) எங்களுக்கு எதிராகவே போக்குவரத்து காவல்துறை பிரிவு வாகனம் வந்து கொண்டிருந்தது. அதில் காவலர்கள் சிரிப்போடும்,
மகிழ்வோடுமிருந்த அசைவுகளை எங்களை கடக்கும்பொழுது பார்க்கமுடிந்தது.எந்த அபாய அவசரத்திற்க்காகவோ அவர்கள் செல்லவில்லை என்பது தெள்ளத்தெளிவாக உணர முடிந்தது!ஆக, சாலை விதிகளை கண்காணிப்பவர்களே அதன் விதியை மீறும்பொழுது ஒரு சாதாரண சாமானிய வாகன ஓட்டியிடம் அதை எப்படி எதிர்பார்க்க முடியும்!
இது நம் நாட்டின் சாபக்கேடுதான்.எந்த அரசாங்கம் வந்தாலும் இதே கதிதான்.அரசாங்கம்தான் மாறுகிறேதே தவிர,அதிகாரிகள்
அதே அலட்சிய அகங்க்காரத்தோடுதான் இருக்கிறார்கள் இருப்பார்கள் எதிர்த்து கேட்க எந்த தனி மனிதனாலும் முடியாது.ஏனனில் அவனுக்கு பாதுகாப்பு இல்லை!
17. Re:...condolence posted bys.d.segu abdul cader (quede millath nagar)[18 June 2014] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35449
CONDOLENCE
Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous.
I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.
அஸ்ஸலாமு அலைக்கும்
20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.
Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.
ஜனாப் கே.ஓ.ஸூஃபீ அவர்களின் வபாத் செய்தி மிகவும் , அதிர்ச்சியாகவும், கவலையான செய்தியாகவும் உள்ளது இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ..
அனைத்துமே அல்லாஹ்வின் ஏற்பாடு என்ற ரீதியில் நாம் சப்று செய்துக் கொண்டோம் .
மர்ஹூம் அவர்களின் குற்றங்கள், குறைகள் யாவற்றையும் வல்ல நாயன் அல்லாஹுத்தஆலா மன்னித்து , அவர்களின் கேள்வி கணக்கை இலேசாக்கி , மண்ணறையை வெளிச்சமாக்கி, ஜன்னது பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் அவர்களை சேர்த்து வைப்பானாக !
அன்னாரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தார்கள், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் .
விபத்தில் காயமுற்ற அருமை சகோதரர் அல்ஹாஜ் , அல்ஹாபில் உமர் ரிளுவானுல்லாஹ் ஆலிம் ஜமாலி ,& மனைவி,மற்றும் தம்பி மனைவி ஆகியோர் பூரண குணம் அடைந்து வீடு திரும்ப பிராத்திக்கின்றேன் . வல்ல அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் நல்ல சரீர சுகத்தை கொடுத்து , மன அமைதியையும் நிம்மதியையும் வழங்குவானாக!
மீண்டும் ஆலிம் அவர்கள் பூரண சுகம் பெற்று இறைவனருளால் சிங்கப்பூர் வந்து மஸ்ஜிதில் வழமைபோன்று அவரின் சன்மார்க்கப் பணிகளை துவங்க வேண்டுமென வல்ல நாயனிடத்தில் இருகரமேந்தி இறைஞ்சுகிறேன் .. ஆமீன். யா ரப்பல் ஆலமீன்!!!!!!!!!!!!!!
23. Re:... அஸ்ஸலாமு அலைக்கும். posted byS.H. SEYED IBRAHIM (RIYADH. K.S.A.)[18 June 2014] IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35459
"அஸ்ஸலாமு அலைக்கும்,"
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன்!!! . எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.
ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம் எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.
27. Re:... posted byP.S. ABDUL KADER (KAYALPATNAM)[18 June 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 35463
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன் .
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.
28. இரங்கல் posted byNIZAR (KAYALPATNAM)[19 June 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 35464
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல் அமல்களை ஏற்று அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக.நெஞ்சை பதறவைக்கும் கொடுமையான சாலை விபத்துக்களில் இருந்து இறைவன் நம்மை காப்பானாக,,,,,
மர்ஹூம் அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக,,,,,,
30. இன்னா லில்லாஹி... posted byS.K.Salih (Kayalpatnam)[19 June 2014] IP: 61.*.*.* India | Comment Reference Number: 35469
ஸூஃபீ காக்கா அவர்களின் திடீர் வஃபாத் செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியுற்றேன்.
அண்மையில் செய்துங்கநல்லூரில் நடைபெற்ற அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழாவிற்கு ஒரே வாகனத்தில் அவருடன் நானும் சென்றேன். அப்போததான் எனக்கு அவருடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.
வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, பொதுவான அரட்டையில் நாங்கள் அனைவரும் இருக்கையில், அவரோ கையில் திருமறை குர்ஆனை வைத்துக்கொண்டு ஓதியவாறு அமைதியாகப் பயணித்தார். அவரது மார்க்கப் பற்றை அதில் அறிந்துகொண்டேன்.
வெள்ளந்தியான மனிதர். சில மாதங்களுக்கு முன்புதான் அதிர்ச்சிகரமான முறையில் அவர்களது மனைவி வஃபாத்தாகி இருக்கிறார்கள். தற்போது இவர்களும் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹும்மஃக்ஃபிர் லஹூ வர்ஹம்ஹூ.
இவற்றைத் தாங்கும் பொறுமையை வல்ல அல்லாஹ் அவர்களது குடும்பத்தாருக்குத் தந்தருள்வானாக...
விபத்தில் காயமுற்றுள்ள அன்புத் தம்பி மவ்லவீ ஹாஃபிழ் உமர் ரிழ்வானுல்லாஹ் ஜமாலீ மற்றும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் வெகு விரைவில் பூரண உடல் நலனை வழங்கியருள்வானாக, ஆமீன்.
ஒரு சிறிய வேண்டுகோள்:
நடந்த நிகழ்வை விதியென்று எடுத்துக்கொண்டாலும், கூடுமான வரை சொந்த வாகனங்களில் நெடுந்தொலைவுக்கு பயணிப்பதைத் தவிர்த்துக்கொள்வோம். சொந்த வாகனத்தில் பயணிப்பது அனைவருக்கும் ஆசையான ஒன்றுதான். ஆனால்... (அல்லாஹ் காப்பாற்றட்டும்!) அதனால் ஏதேனும் தீய விளைவுகள் ஏற்பட்டால் அது மிக மிகக் கொடுமையானது.
இந்த விபத்தின்போது, தேவையான முதலுதவி உள்ளிட்ட ஏற்பாட்டுப் பணிகளை குறித்த நேரத்தில் சென்று செய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எட்டையபுரம் கிளை அங்கத்தினர் மற்றும் இதர சகோதரர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம். ஜஸாக்குமுல்லாஹு கைரா...
துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
32. Re:... posted byT.S.A. ABOO THAHIR (chennai)[19 June 2014] IP: 101.*.*.* India | Comment Reference Number: 35473
அன்பு நிறைத்த சூபி காக்கா அவர்களின் மரண செய்தி மிகுந்த வருத்தத்திற்குரியது வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து உயர் பதவியை வழங்குவானாக.
அன்பு நண்பர் உமர் ரிழ்வான் ஆலிம் அவர்களுக்கு அல்லாஹ் விரைவில் பூரண நலனை வழங்குவானாக. ஆமீன்,
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களுக்கு மேலான சுவனபதியை வழங்கி அருள்புரிவானாக . அன்னார் குடும்பத்தினருக்கு அழகான பொறுமையை வழங்கி அருள்புரிவானாக ஆமீன்.
என் அன்பிற்குறிய உமர் ரிள்வான் ஆலிம் அவர்களுக்கு சீக்கிரமாகவே குணமடைந்து எங்கள் நாடு திரும்ப எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக ! ஆமீன். வஸ்ஸலாம்
35. Re:...சூபி காக்காவா.... posted bymackie noohuthambi (chennai)[19 June 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 35502
எனக்கு துபாயிலிருந்து செய்தி வந்தபோது, இந்த நிழல்படத்தை பார்த்தபோது, ஒரு அதிர்ச்சி.
புகாரி ஷரீப் து ஆ தினம் அது. முன் வரிசையில் முன் கூட்டியே வந்து அமர்ந்து இருந்தார்கள். அவர்களுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டதே, நமதூர் பையன் ஒருவனை எங்கள் aristo jewellers நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்து விடும்படி சிபார்சு செய்யும்போது ஏற்பட்டது. அல்லாஹ் உதவியால் அந்த பையன் இன்று ஒரு பெரிய கம்பெனியில் வெளி நாட்டில் நல்ல சம்பளத்தில் பணி புரிந்து கொண்டிருக்கிறார். ஆனால் என்னை காணும்போதெல்லாம் சூபி காக்கா எனக்காக து ஆ செய்வார்கள்.
உன்னால் அல்லவா அந்த பையன் நல்ல நிலையில் இருக்கிறான், குடும்பத்தை அணைத்து பிடித்திருக்கிறான் என்று மனம் நிறைந்து கூறுவார்கள். சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர். எப்போதோ நடந்த ஒரு சிறிய உதவியை இப்போதும் நினைத்து என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். இதை தவிர அவர்களிடம் எனக்கு எந்த உறவும் இல்லை. இந்த நல்ல குணம் நன்றி மறக்காத குணம் இருப்பவர் மற்றவர்களுடன் எவ்வளவு அன்பாக இருந்திருப்பார்கள் என்று நினைத்து பார்க்கிறேன் . எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் மண்ணறையை வெளிச்சமாக்கி வைப்பானாக் அவர்கள் பாவங்களை பொறுத்து அருள்வானாக.அவர்கள் நல அமல்களை பொருந்திக் கொள்வானாக. அவர்களுக்கு மேலான சொர்க்க பதியை நசீபாக்கி வைப்பானாக.அவர்கள் குடும்பத்தார்களுக்கு பொறுமையை கொடுத்தருளவானாக.
எனது அன்புக்கும் கண்ணியத்துக்கும் உரிய உமர் ரில்வான் மௌலவி அவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் நல்ல சுகம் பெற்று கூடிய விரைவில் ஊர் திரும்ப அல்லாஹ் அருள்புரிவானாக.
37. அல்லாஹ்விற்காக சப்ரு செய்துக் கொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறேன்...!!! posted byS.K.Shameemul Islam (Chennai)[19 June 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 35535
கே.ஓ.ஸூஃபீ காக்கா அவர்களின் வஃபாத் செய்தி மிகவும் , அதிர்ச்சியாகவும், கவலையான செய்தியாகவும் உள்ளது இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ..
அனைத்துமே அல்லாஹ்வின் ஏற்பாடு என்ற ரீதியில் நாம் அனைவரும் சப்று செய்து கொள்வோமாக.
மர்ஹூம் அவர்களின் குற்றங்கள், குறைகள் யாவற்றையும் வல்ல நாயன் அல்லாஹுத்தஆலா மன்னித்து , அவர்களின் கேள்வி கணக்கை இலேசாக்கி , மண்ணறையை வெளிச்சமாக்கி, ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் அவர்களை சேர்த்து வைப்பானாக!
அன்னாரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தார்கள், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் .
விபத்தில் காயமுற்ற அருமை சகோதரர் அல்ஹாஃபிள் உமர் ரிளுவானுல்லாஹ் ஆலிம் ஜமாலி ,& மனைவி,மற்றும் தம்பி மனைவி ஆகியோர் பூரண குணம் அடைந்து வீடு திரும்ப பிராத்திக்கின்றேன் . வல்ல அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் நல்ல சரீர சுகத்தை கொடுத்து , மன அமைதியையும் நிம்மதியையும் வழங்குவானாக! ஆமீன்.
38. Re:... posted byAbdul Hadhi (JEDDAH . Al Ruwais)[21 June 2014] IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35552
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன் .
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross