காயல்பட்டணம்.காம் இணையதளத்தை நிர்வகித்தும், காயல்பட்டினம் நகரில் பல்வேறு கல்விப் பணிகளைச் செய்தும் வருகின்ற தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்பின் 6 அறங்காவலர்களுள் ஒருவரான - காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவைச் சேர்ந்த எம்.டி.ஷகீல் ரஹ்மான், சஊதி அரபிய்யா ஜித்தாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 45. அன்னார்,
மீராத்தம்பி என்பவரின் மகனும்,
மர்ஹூம் எம்.டி.செய்யித் அஹ்மத், எம்.டி.கலீலுர்ரஹ்மான் (ஜித்தா) ஆகியோரின் சகோதரரும்,
கீழக்கரை தாஸிம் பீவி அப்துல் காதர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலப் பிரிவு துறைத் தலைவர் ஜுலைஹாவின் கணவரும்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளை நிர்வாகிகளுள் ஒருவரான ‘ஜப்பான்’ சுலைமானின் (கைபேசி எண்: +91 90428 69396) மனைவியின் சகோதரரும் ஆவார்.
இவரது மகன் வாஸிஃப் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
நல்லடக்கம் குறித்த விபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
மறைந்த எம்.டி.ஷகீல் ரஹ்மான், பி.ஃபார்ம். பயின்று, ஜித்தாவில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. Re:...இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன் posted bymohideen thambi sam (jeddah)[19 June 2014] IP: 5.*.*.* | Comment Reference Number: 35467
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன் . எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.
4. மிகவும் அதிர்ச்சி... posted byS.K.Salih (Kayalpatnam)[19 June 2014] IP: 61.*.*.* India | Comment Reference Number: 35470
ஷகீல் காக்காவின் மரணச் செய்தி என்னை மிகவும் அதிர்ச்சியடையச் செய்தது.
அனைவரிடமும் மிகவும் அன்பாகப் பழகக் கூடியவர். அவரது முகத்தைப் பார்த்தாலே இரண்டு சொற்களேனும் பேசத் தோன்றும்.
நமது காயல்பட்டணம்.காம் இணையதளத்தை நிர்வகித்து வரும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட்டின் அறங்காவலர்களுள் ஒருவராக இருந்து, இவ்விணையதளத்தின் வளர்ச்சிக்கு இன்றளவும் முதுகெலும்பாகத் திகழ்ந்து வந்தவர்.
அவரது மனைவி அவர்கள் என் சகோதரியின் கல்லூரி ஆசிரியையும், பின்னர் சக ஆசிரியையுமாவார்.
சிறு வயதில் மகன் இருக்கிறார். இந்நிலையில் இவரது மரணம் என்பது தாங்க முடியாத வலியைத் தரக்கூடியதாக உள்ளது.
கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப் பிழைகளைப் பொருத்தருளி, மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது மனைவி உள்ளிட்ட யாவருக்கும் அல்லாஹ் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக...
அனைவருக்கும் எனதன்பான அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
14. انا لله وانا اليه راجعون posted bys.s.md meerasahib (TVM)[19 June 2014] IP: 223.*.*.* India | Comment Reference Number: 35482
அஸ்ஸலாமு அலைக்கும்.
أللهــــــم اغـفـــــــر لـه وارحمـــــه واجعل قبره روضة من رياض الجنة ولاتجعل قبره حفرة من حفر النيران امين
அன்னாரின் பிழைகளை பொறுத்து கபுருடைய வாழ்வையும், மறுமை வாழ்வை சுவன வாழ்வாக ஆக்கியருள வல்லோனிடம் பிரார்த்திக்கிறேன். அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.
17. Re:... posted byசாளை பஷீர் (சென்னை)[19 June 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 35486
என் பள்ளி பருவத்து நண்பன். அரைக்கலுசன் போட்டுக்கொண்டு பாட நூல்கள் அடங்கிய அலுமினிய பெட்டியை இரண்டு கைகளாலும் முதுகின் பக்கம் பெட்டியை சேர்த்து பிடித்துக் கொண்டு வயிற்றை தள்ளிக் கொண்டு நடப்பான். ஸ்போர்ட்டிவ்வான மனிதன்.
சம வயது நண்பர்களின் இறப்பானது நமக்கும் அதிக நாட்கள் மிச்சமில்லை என்பதை அழுத்தமாக நினைவூட்டுகின்றது.
யா அல்லாஹ் ! அவனது பாவங்களை ,மன்னித்து சுவனச்சோலையில் நிம்மதி பெறச் செய்வாயாக ! அவனது இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கு நிலைகுலையாத தன்மையையும் மன வலிமையையும் சிறந்த பகரத்தையும் கொடுப்பாயாக!!
27. Re:...துக்கம் தோய்ந்த செய்திகள் தொடர்கிறதே.. posted bymackie noohuthambi (chennai)[19 June 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 35500
சமீப நாட்களாக துக்கம் தோய்ந்த செய்திகள் நமது தூக்கத்தை தொலைத்து, நமது இரத்த நாளங்களை முறுக்கேற்றி விடுகிறது, நீ எப்போது என்று கேட்கிறது...அல்லாஹ்வே இந்த மரணத்தின் பிடியில் அகப்படாமல் யாரும் தப்ப முடியாது என்று நீ சொல்லி இருக்கும் வசனங்களை நாங்கள் நம்புகிறோம் அல்லாஹ், இருந்தாலும் திடீர் திடீரென நடக்கும் இந்த மௌத்துகளை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை அல்லாஹ்.
இப்படி இருக்க அவர்கள் குடும்பத்தாருக்கு நாங்கள் எவ்விதம் ஆறுதல் சொல்ல முடியும் அல்லாஹ். உனது களா கத்ருக்கு நாங்கள் தலை வணங்குகிறோம் அல்லாஹ். இந்த இழப்புகளை சகித்துக் கொள்ளும் பொறுமையையும் அதற்கான நற் கூலியையும் இந்த குடும்பத்தினருக்கு நீ கொடுத்திடு அல்லாஹ். மறைந்தவர்களுக்கு உனது மக்ஹ்பிரத்தையும் மறுமையில் சுவர்க்க வாழ்வையும் கொடுத்திடு அல்லாஹ் என்று உன்னிடம் கை ஏந்துவதை தவிர எங்களால் ஒன்றும் செய்ய முடியாது அல்லாஹ்.
இந்த பிறப்பையும் இறப்பையும் உன் கை வசம் வைத்திருக்கிறாய், எந்த செல்வத்தாலும் நிவர்த்தி செய்ய முடியாது, எந்த மருத்துவராலும் இதற்கு மருந்து கொடுக்க முடியாது அல்லாஹ். இந்த இழப்புகளை நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் அல்லாஹ். ஏனெனில் நீதான் மரணத்தையும் வாழ்வையும் நிர்ணயிக்கிறாய்.
KHALAQAL MOUTHA WAL HAYAATHA LIYABLUVAKUM AYYUKUM AHSANU AMALAA..உனது இந்த வசங்களை புரிந்து நல் அமல்கள் செய்பவர்களாக எங்களை ஆக்கிவை அல்லாஹ்.மர்ஹூம்களின் சந்ததிகளையும் ஆக்கிவை அல்லாஹ்.ஆமீன்.
29. Re:... posted byMaminakar (Kayalpatnam)[19 June 2014] IP: 59.*.*.* India | Comment Reference Number: 35503
நண்பர் ஷக்கீல் உடைய மரண செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக!
அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு பொறுமையை கொடுத்தருள்வானாக. அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹ்.
30. Re:... posted byM.N.SULAIMAN (RIYADH)[19 June 2014] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35504
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
எல்லாம் வல்ல நாயன் மர்ஹும் அவர்களின் அனைத்து பிழைகளையும் பொறுத்து. அவனின் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் மிகவும் மேலான சுவனபதியை, மர்ஹும் அவர்களுக்கு கொடுத்தருல்வானாகவும் ஆமீன்.
மர்ஹும் அவர்களின் குடும்பத்தினர்கள் யாவர்களுக்கும் வல்ல நாயன் அவனின் சபூர் என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.
34. Re:... posted byகே எஸ் முகமத் ஷூஐப் (காயல்பட்டினம். )[19 June 2014] IP: 61.*.*.* India | Comment Reference Number: 35508
அருமைச் சகோதரர் அவர்களின் மறைவு மனம் கலங்கச் செய்கிறது. முன்பு ஒருமுறை ரியாத் பாண்டா சூப்பர் மார்க்கெட்டில் அவரோடு உரையாடியது ஞாபகம் வருகிறது.
அதிர்ந்து கூட பேசாத இனிய நண்பர்.
அன்னாரை இழந்து தவிக்கும் அவரது மனைவி, குழந்தைகள், மற்றும் அன்னாரது குடும்பத்தினர் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா என்னும் அழகிய பொறுமையைக் கொண்டு உபதேசம் செய்வோம் ...
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!.
என்ன இது .அதிர்ச்சியான மௌத் செய்தி அடுக்கடுக்காய் வந்துகொண்டிருக்கிறது! அனைத்தையும் ஆழும் அல்லாஹ்வே எங்கள் அனைவரின் ஆயுழையும் நீடித்து நோய் நொடில்லாமல், நிறைவான வாழ்வைப்பெற்று நிம்மதியுடன் இந்த நிகழ்கால உலகைவிட்டு நீங்கி என்றும் நீடித்து நிர்மானிக்கும் உன்உலகை அடைந்து எங்களை உன்னுடன் சேர்த்துவைப்பாயாகா!
தம்பி சகீலின் மரணச்செய்தி தொலைபேசிமூலமாக கேட்டு
கதிகலங்கி போனேன்.வாழ்கையின் பல நல்ல வழிகாட்டுதலை பலமுறை அறியுரையாய் எமக்கு சொன்ன மரியாதைக்குறிய மர்ஹூம் மீராத்தம்பி காக்கா அவர்களின் மகன் என்று முறையில் மிகவும் மதிப்புடன் சகீலை பார்க்கும்போதெல்லாம் நலம் விசாரித்து கொள்வேன்,விசாரிக்கும் போதெல்லாம் சிரித்த முகமுடம் பதிலளிக்கும் பேரன்புடைய தம்பி.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமுடைய பாவங்களை மன்னித்து ஆகிரத்தில் நற்பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்!
அன்னாரின் பிரிவுத்துயரில் வதங்கும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் குறிப்பாக நண்பர்களான மெய்னாகாதர், மரைக்ககா ஆகியோர்களுக்கு அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்!
மர்ஹூம் குடும்பத்தார் அனைவர்களுக்கும் என்னுடைய ஆழந்த அனுதாபம்அடைங்கிய ஸலாத்தினைத்தெரிவித்துக்
கொள்கிறேன்!அஸ்ஸலாமு அழைக்கும்!
37. Re:... posted bynetcom buhari (chennai)[19 June 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 35511
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன் .
எங்கள் உயிர் நண்பன் மட்டும் எங்கள் டிரஸ்ட் (The kayal first trust உடைய நிருவாகியும்மான சகீல் ரகுமான் மரணம் செய்தி அறிந்து பெரும் அதிர்தி அடைதேன்
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.
புஹாரி & family
மட்டும் the kayal first trust நிறுவாகிகள்
39. Re:... அஸ்ஸலாமு அலைக்கும். posted byS.H. SEYED IBRAHIM (RIYADH. K.S.A.)[19 June 2014] IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35513
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல் அமல்களை ஏற்று அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக. ஆமீன்!!!
للهــــــم اغـفـــــــر لـه وارحمـــــه
நல்ல உள்ளத்துக்கு சொந்தக்காரர், பலஹுவதர்க்கு மிஹவும் இனிமையானவர். முதன் முதலில் ஈரோட்டில் சந்தித்தேன். குமாரபாளையத்தில் உள்ள கல்லூரியில் பீ. பாம். படித்தவர். இப்பொழுது நம்மிடம் இல்லை என்பது மனதிற்கு கவலை.
மர்ஹூம் அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக, ஆமீன். ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!!!
ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.
41. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் posted byyahya mohiadeen (dubai)[19 June 2014] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35515
மறைந்த நண்பர் ஷகீல் ரஹ்மான் என் பால்ய நண்பரும், வகுப்புத் தோழருமாவார். படிக்கும் காலங்களில் எங்களிடையே நடந்த இனிமையான சம்பவங்கள் இப்போது மனத் திரையில் ஓடுகின்றன.
இவருடைய மரணச் செய்தி மிகுந்த கவலையும், அதிர்ச்சியையும் தந்தபோதிலும், "எல்லா ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமை பட்டிருக்கிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் சிறிய, பெரிய பாவங்களை மண்ணித்து, அவர்களின் நல் அமல்களை அங்கீகரித்து, அவர்களின் மண்ணறையை ஒளிவாக்கி, நாளை மஹ்ஷரில், நல்லடியார்களுடன் எழுப்பச்செய்து மேலான சுவனத்தில் வீற்றிருக்க செய்வானாக ஆமீன்.
மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.
42. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[19 June 2014] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35517
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இனிய நண்பன், என்னுடைய கருத்துக்களுக்கு ரசிகன், சிரித்த முகம், பி பார்ம் படித்து இருந்தாலும் இயற்கை வைத்தியத்தில் நாட்டம் கொண்டு நல்ல அட்வைஸ் கொடுக்க்கூடியவன். இவனின் மறைவு செய்தி, ஏற்கனவே கலங்கிய என் மனதில் மீண்டும் ஒரு கல்லை எரிந்து கலங்க வைத்து விட்டது.
வல்ல இறைவன் இவனுடைய அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் நல்ல பதவியை அருள்வானாக.
மனைவி, குழந்தை, பெற்றோர்கள், Kayal First trust மற்றும் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை தருவானாக.
கடந்த ஒரு வாரமாக மறைவு செய்திக்கு கமெண்ட்ஸ் எழுத வைத்து விட்டான் இறைவன்.
" நிச்சயம் மரணம் வரும், நீ ஒருநாள் இறந்திடுவாய் ... " என்ற பாடல் தான் காதில் ரீங்காரமிட்டுக்கொண்டே...டே இருக்கின்றது.
46. Re:... posted byD.S.ISMAIL (HONGKONG)[19 June 2014] IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 35525
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ஷகீல் எல்கே மேல்நிலைப்பள்ளித் தோழன். மரணம் எந்த வயதிலும் நம்மை வந்தடையலாம். மறுமைக்கான முதலீடுகளை அதிகம் மேற்கொள்வோம். குறிப்பாக வரும் ரமலானில். இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹ் அவனது பிழைகளை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்க பிரார்த்திக்கிறேன்.
52. Re:...Condolences posted byAhamed Mustafa (Dubai)[19 June 2014] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35532
அஸ்ஸலாமு அழைக்கும், அருமை நண்பர் ஷகீல் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. Shakeel was one of our early stage buddies with a smiling face & good characters. Haven't had a chance to meet him for years.
Infact during my recent trip to Jeddah I enquired about him but really unfortunate for not having met him.
His passing away was a great shock this morning. May allah forgive his sins & place him in the top most avenues of Jannah Al Firdhouse. Deepest condolences to Bro. Khaleel & all the family members. Rest in Peace Shakeel !
அல்லாஹ் அவரது பிழைகளை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்கி , அவர் விட்டு சென்று இருக்கும் குடும்பத்திற்கும் பொறுமையையும், இரு உலக பாக்கியங்களையும் அளித்து அருள் புரிவான்
54. சத்தமில்லாமல் சமூகச் சேவை செய்தவர்...!!! posted byS.K.Shameemul Islam (Chennai)[19 June 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 35534
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இன்று காலையில் முழிழ்த்தவுடன் இன்னுமொரு அதிர்ச்சி செய்தி.
புன்முறுவல் பேர்வழி சகோதரர் ஷக்கீலின் மறைவுச் செய்தி.
சத்தமில்லாமல் சமூகச் சேவை செய்தவர்.
நன்மைகளுக்கு முந்திக் கொண்டு துணை நின்றவர்.
எனக்கு ஓராண்டு மூப்பெனினும் பால்யவயது நெருங்கிய நண்பர்.
வாழ்வில் பல நாள் இன்னொரு மூலையில் கழித்தவர் இனி ஊரோடு வருவதற்கு கொஞ்சம் காலம் தான் என்று என்னும் போது உலகையே துறந்துவிட்டார்.
அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து கப்ரின் வாழ்வை சிறந்ததாக்கி மறுமையில் உயரிய சுவனச்சோலையில் நுழையச் செய்வானாக. அவரது இழப்பை தாங்கிடும் வலிமையை அவரின் குடும்பத்தார் அனைவருக்கும் தந்தருள்வானாக. ஆமீன்.
திடீர் பிரிவுகளும் தொடரும் மரணமும் சில நினைவுகளும்.
------------------------------------------------------------------------------------------
அடுத்தவர் யாரோ என்னும் அளவு மரித்தோர் உலகு பெருகி கொண்டே போகிறது.
உறவுகளைப் பேணுவது வாழ்நாளை அதிகரிக்குமாம். ஒரு நபி மொழி எனக்கு ஞாபகம் வருகிறது.
உதுமான் பின் அஃப்ஃபான் (ரழி) அவர்கள் கபுருஸ்தானை காணும்போதெல்லாம் தேம்பித் தேம்பி அழுவார்களாம். மறுமை குறித்து பேசும் போதெல்லாம் அந்தளவு அழுகாத நீங்கள் ஏன் கப்ரைக் காணும்போது அழுகிறீர்கள் எனக் கேட்கப்பட்டால் கப்ர் மனிதனின் மறுமைக்கான முதல் படி. அதில் ஒருவர் வென்றுவிட்டால் அவரின் மறுமை வாழ்வு முழுதும் வெற்றி தான். அதை வெல்ல வேண்டுமே என்றுதான் அழுகிறேன் என்பார்களாம்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவரிவர் முனாஃபிக்குகள் என்றொரு ரகசியப் பட்டியலை ஹுதைஃபதுப்னுல் யமான் (ரழி) அவர்களிடம் சொல்லி இருக்க உமர் ஃகத்தாப் (ரழி) அவர்களோ எனக்கு மற்றவர் பற்றி ஒன்றும் கூறவேண்டாம். ஆனால் அப்பட்டியலில் நான் இருக்கின்றேனா என்பதை மட்டும் பார்த்துச் சொல்லுங்கள் என்றனராம்.
மறுமை என்றே வாழ்ந்தவர் நிலை இவ்வாறிருக்க மிகவும் சுருங்கிப்போன ஆயுள் காலத்தை பெரிதாக எண்ணி வாழும் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்.
"நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்விடம் கலப்பற்ற முறையில் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! உங்கள் இறைவன் உங்கள் தீமைகளை அழித்து விடக்கூடும். உங்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான் (அல் குர்ஆன் 66:8)" என்ற இறைவசனத்திற்கேற்ப அல்லாஹ்வை நெருங்குவோம். அனுதினமும் தவ்பாவும் இஸ்திஃக்ஃபாரும் செய்வோம். நொடிப்பொழுதில் காற்றில் கலந்து போகும் இந்த நிலையற்ற வாழ்க்கையில் கொண்டு போவது நன்மையைத் தவிர வேறில்லை. வல்லவனான அல்லாஹ் நம் அனைவரின் பாவங்களையும் மன்னித்து கப்ரிலும் மறுமை வாழ்விலும் உயரிய ஜன்னதுல் ஃபிர்தவ்சுல் அஃலாவில் நம் அனைவரையும் ஒன்று சேர்ப்பானாக. ஆமீன்.
55. انا لله وانا اليه راجعون posted bykabeer (Chennai)[19 June 2014] IP: 220.*.*.* India | Comment Reference Number: 35536
May Allah in his mercy grant him rest , may his grave be an abode of light and not darkness.May Allah(SWT) make him pass successful in all the stages of the life after death (ameen)
56. Re:... posted byS.A. ASARAF MOOSA (MADINA)[19 June 2014] IP: 82.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35537
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன் .
நண்பன் சகீல் ரகுமான் மரணம் செய்தி அறிந்து பெரும் அதிர்தி அடைதேன்
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக ஆமீன்
மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.
59. இரங்கல் posted bynizar (kayalpatnam)[20 June 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 35541
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தொடர்ந்து வரும் நெஞ்சை பதறவைக்கும் செய்திகளால் கவலையில் ஆழ்ந்துள்ளது காயல்நகரம்.சகோதரர் சகீல்
அவர்களின் மரணசெய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இன்பமுகம் கொண்ட இனியவரின் மறைவு அவரது
குடும்பம் தாண்டி நண்பர்கள் வட்டம் என அனைவரையும் கவலையில் ஆழ்த்தி இருக்கிறது.
எல்லோரிடம் இனிமையாக
பழகும் அந்த சகோதரரின் நினைவுகள் நெஞ்சை தொடுகின்றன.
அவரிடம் அதிகமாக பேசியதில்லை ஏன் தெரியுமா?அவரை பார்த்தவுடன் தருகின்ற அழகிய சிறுபுன்னகை அனைத்தையும் நிரப்பிவிடும்.
இறைவனின் நாட்டத்துக்கு கட்டுபடுவதை தவிர
வேறு என்ன செய்யமுடியும்?எல்லாம் வல்ல அல்லாஹ்
மர்ஹூம் அவர்களின் நல் அமல்களை ஏற்று அவர்களை
ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக.
மர்ஹூம் அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெர்வித்து கொள்கிறேன்.இறைவன் குடும்பத்தாருக்கு அவரின் நெருங்கிய நண்பர்களுக்கும் என் இதயமார்ந்த நண்பன் கலீல்ரஹ்மான் அவர்களுக்கும்
பொறுமையை வழங்குவானாக, ஆமீன்,,,
61. Shocked posted byBAZULHAMEED (Dubai)[20 June 2014] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35544
Inna lillahi wa Inna Ilaihi Raji’un (Surely we belong to Allah and to Him shall we return).
To Brother Khaleel & Family:
I am deeply saddened by the news of Brother Shakeel Rahman's loss.My thoughts and prayers are with you and your family. May Almighty Allah bless and comfort you and your family during this time of grief . We all are with you in this hour of grief and sorrow.
May Almighty Allah dwell him in Jannatul Firdaus (the most beautiful paradise). Ameen!
63. Re:...Deeply socked and saddened posted byPadmanathan.m (Dubai)[20 June 2014] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35547
I am deeply socked and saddened by the news of my(scool/class6th-12th) friend/Brother Shakeel Rahman's loss.
This is an non recoverable permanent loss to me ,as our friendship starts with our school journey with our new Bycycle given by our father Haji Meerathambi ,as i sits in back of our bycycle, with our books while shakkil rides.
He is a Great Man for Brotherhood,kindness,I'll never ever forget his kindness, Rahman is Real Rahman.
Last 12 years i am trying to meet him in our home in each vacation but it not happen ,I pray The Almighty Please Give me the Precious moment to meet my friend/Brother in your world, Ameen..
My thoughts and prayers are with the family especially to my mother, Brother kaleel and sister Samu.
May Almighty bless and comfort the family during this time of grief .. May Almighty Allah dwell him in Jannatul Firdaus (the most beautiful paradise). Ameen!
65. சுவனத்தில் நிலையான தங்கும் தளம் கொடு யா அல்லாஹ் ! posted byK.V.A.T. HABIB MOHAMED (QATAR)[20 June 2014] IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 35549
கொஞ்ச நாட்களாகவே மனதில் ஒருவகையான நிம்மதியின்மை! தொடர்ந்து மரண செய்திகள் ! பிறந்த அனைவருக்கும் மரணம் என்பது உறுதி. ஆனால் , பாமர மனிதனின் இதயம் அந்த செய்திகளை தாங்கும் சக்தி பெறவில்லை போலும்.
மரணித்தவர் வயதில் பெரியவரோ அல்லது இளையவரோ, அது இல்லை இப்போ விவகாரம். நம்மவர் , நம் சமூகத்தில் உள்ளவர் , நமக்கு நன்கு பரீட்சமானவர் , நம்மோடு நெருங்கி பழகியவர் இப்படிஎல்லாம் என்னும் போது தான் , நம் இதயம் கனக்கிறது.
இறைவனின் நாட்டத்துக்கு அனைவரும் தலை சாய்த்து , ஏற்க கடமைப்பட்டுள்ளோம். மரணம் யாரையும் விட்டு வைக்காது. இந்த உலகமும் நமக்கு ஒரு நிரந்தர தங்கும் இடமும் கிடையாதுதான்.
இருந்தாலும் அருமை நண்பர் , ஷகீல் அவர்களின் திடீர் மரணம் நம்மை எல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. முகம் காணவில்லை... தொலைபேசியில் அடிக்கடி பேசும் வாய்ப்பை அருமை சகோதரர் அபுல்ஹசன் டாக்டர் அவர்களின் மகன் கலீல் மூலம் கிடைத்தது.
பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். பேசிக்கிட்டே இருக்கலாம் என்கிற அளவுக்கு பேச்சில் ஒரு வகையான உணர்வு இருக்கும் . குணத்தாலும் சிறந்தவர். நட்புக்கு ஒரு இலக்கணம் என்று கூட சொல்லலாம். பிறருக்கு உதவும் பண்பாளர்.
இந்த சிறிய வயதில் அவருடைய மரணத்தால் ஏற்பட்ட இழப்பு தான் நம்மால் தாங்கிக்கொள்ள முடிய வில்லை. அல்லாஹ்வின் கலா கதருக்கு அனைவரும் கட்டுப்பட கடமைப்பட்டுள்ளோம்.
மர்ஹூம் ஷகீல் அவர்களின் அறிந்தும் அறியாமலும் செய்துவிட்ட பாவப் பிழைகளை வல்ல ரஹ்மான் மிகவும் கருணையோடு மன்னித்து, கப்ரில் அல்லாஹ்வின் நூரைக்கொண்டும் பிரகாச மாக்கி , மறுமையில் மேலான சுவன பதி அடைய இருகரம் ஏந்தி து ஆ செய்கிறோம். ஆமீன்.
அன்னவரை பிரிந்து துயரத்தால் வாடும் அவரின் மனைவி , மகன் மற்றும் குடும்பத்தார்கள் , காயல் ஃ பஸ்ட் டிரஸ்ட் நிறுவனத்தார்கள் அனைவருக்கும் ,வல்ல ரஹ்மான் , இந்த துயரத்தை தாங்கும் அழகிய பொறுமையை கொடுத் தருள்வானாகவும்.ஆமீன்.
யா அல்லாஹ் , எங்கள் நகரில் வாழும் மக்களையும் , நாடு விட்டு நாடு சென்று வாழுகின்ற ஏனைய எங்கள் ஊர் மக்களையும் உன்னுடைய ரஹ்மத்தால் பாதுகாப்போடு , சரீர சுகத்தோடு , நீடித்த ஆயுளோடு , நிறைவான செல்வத்தோடு , நீ ( அல்லாஹ்), உன்னுடைய ரசூல் காட்டித்தந்த சீரிய மார்க்க்கத்தில் நெறி தவறாது வாழ துணை செய்வாயாக என்ற இந்த பிரார்த்தனையையும் எங்கள் ஊர் மக்கள் சார்பாக உன்னிடம் வேண்டுகிறோம். நீ மிகவும் கருணையோடு அருள் புரிவாய் யா அல்லாஹ்...ஆமீன்.
தாங்க முடியாத துயரத்துடன் ,
கே.வீ.ஏ. டி. கபீர்
கே .வீ.ஏ .டி. ஹபீப்
K.V.A.T. குடும்பத்தினர்.
குறுக்குத்தெரு
காயல்பட்டணம் மற்றும் கத்தார்.
67. Re:... posted byAbdul Hadhi (JEDDAH . Al Ruwais)[21 June 2014] IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35551
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன் .
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.
69. Re:...மர்ஹூம் சகீல் குடு பம் சார்பாக நன்றி தெரிவிப்பு posted bynetcom buhari (kayalpatnam)[22 June 2014] IP: 115.*.*.* India | Comment Reference Number: 35562
அஸ்ஸலாமு அழைக்கும்
எங்கள் குடுபத்தை சேர்ந்த M .T .சகீல் ரகுமான் அவர்கள் கடந்த 19அம் திகதி JEDDAH வில் வைத்து வபாத் ஆனார்.
"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்"
அன்னாரின் ஜனஷா கடந்த வெள்ளி கிழமை அண்டு ஜும்மா தொழுகை கு பின் JEDDAH வில் அங்கு உள்ள காயல் மக்கள் உதவி உடன் நல் அடக்கம் செய்யபட்டது.
அல்லாஹுவின் நாட்டப்படி நாங்கள் அனை வரும் சபூர் செய்து கொண்டோம், அதை போல் நீங்களும் மர்ஹூம் அவர்களின் மறுமை வாழ்க்கை பிரகாசமாக அமைய நீங்களும் துவா செய்து சபூர் செய்து கொளவும்.
எங்களுக்கு வலை தளம் மூலமாக ஆறுதல் சொன்ன நல் உள்ளகளுகும் மட்டும் jeddha வில் மர்ஹூம் அவர்களின் அடக்கம் வரை நிண்டு உதவி புரிந்த அனைத்து காயல் நல் உள்ளகளுகும் எங்கள் நன்றி இனை தெரிவித்து கொள்கின்றோம்
இப்படிக்கு
சகீல் family மெம்பெர் சார்பாக
KATTA MARAIKAR அவர்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் இளம் வயதில் மரணத்தை சுவைத்த அன்பு சகோதரர் ஷகீல் அவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவத்தை மன்னித்து அவர்கள் செய்த நல்ல அமல்களை ஏற்று வல்ல அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவனபதியை கொடுப்பானாக . ஆமீன் .
மேலும் அன்னாரின் இழப்பால் வாடும் உற்றார் உறவினர்களுக்கு வல்ல அல்லாஹ் சப்ருன் ஜமீலா என்ற பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்.
72. நாம் இழந்தோம் ஒரு நல்ல மனிதரை.. posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[22 June 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 35569
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன்.. .
ஒரு நல்ல சகோதரரை நாம் இழந்து இருக்கிறோம்.
இவரின் தூய சமூக பணியால் பல நல்ல பயன்களை நகரின் மாணவர்கள் அனுபவித்து வருவதை மறுபதற்கில்லை.
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் எம்.டி.ஷகீல் ரஹ்மான் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக ஆமின் -
மேலும் அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் "தி காயல் ஃபர்ஸ்ட்" நிர்வாகிகள், மற்றும் குடும்பத்தார்களுக்கும் சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக ஆமீன்..
73. Re:...நண்பனின் மறைவு posted byஅ.ஜாபர் சாதிக் (பண்ருட்டி)[23 June 2014] IP: 59.*.*.* India | Comment Reference Number: 35572
சகீலை எனக்கு கடந்த 18 வருடங்களாக தெரியும். ஒரே கம்பெனியில் வேலை செய்தோம். 6 வருடங்கள் ஒரே அறையைப்பகிர்ந்து கொண்டோம். அவன் மரணச்செய்தியை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை. எல்லோருக்கும் உதவ நினைப்பவன். அவன் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும்.
அல்லா அவன் பாவங்களை மன்னித்து அவனுக்கு சுவர்க்கத்தை அளிப்பானாக. அவனின் குடும்பத்தார்க்கு மன தைரியத்தை அளிப்பானாக,
74. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (KAYALPATNAM)[23 June 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 35574
அஸ்ஸலாமு அலைக்கும்
>>>> இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் <<<<
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹும்.. ஷகீல் ரஹ்மான் அவர்களின் எல்லா பிழைகளையும் பொறுத்து. மர்ஹும் ஷகீல் ரஹ்மான் அவர்களுக்கு மிகவும் உன்னதமான '' ஜன்னத்துல் பிர்தவ்ஸ் '' என்னும் சுவனபதியை, வல்ல இறைவன் மர்ஹும் ஷகீல் ரஹ்மான் அவர்களுக்கு கொடுத்தருல்வானாகவும் ஆமீன்.
மர்ஹும் அவர்களை இழந்து வாடும் மர்ஹும் ஷகீல் ரஹ்மான் அவர்களின் குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் வல்ல இறைவன் அவனின் சிறப்பான '' சபூர் '' என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.
நான் சவுதி .ஜெட்டாவில் இருந்த போது அருமை சகோதரர் மர்ஹும். ஷகீல் ரஹ்மான் அவர்கள் நானும் .... எம் நண்பர் A.H. ABUL HASSAN KALEEL அவர்களும் ஒன்றாக இருந்த ரூம்புக்கு வாரம் தோறும் வந்து எங்களோடு ஒன்றாக .இருந்து . நாங்கள் உரையாடுவதை நான் இப்போது நினைத்து பார்க்கும் போது எம் கண்ணில் நீர் கோர்த்து....மனதுக்கு வேதனையளிக்கிறது .........
எம் அருமை நண்பர் ஹாஜி .. A.H.ABUL HASSAN KALEEL அவர்களுக்கு யாம் எப்படி தான் ஆறுதல் சொல்லுவது என்றே தெரிய வில்லை ....அருமை எம் நண்பர் மனதைரியத்துடன் இருந்து வர வேணும் என்று நான் வல்ல இறைவனிடம் மனம் உருகி துவா கேட்கிறேன் ..... வஸ்ஸலாம்.
75. அன்புள்ள ஷகீல் மச்சான் posted byMeeran (Chennai )[24 June 2014] IP: 122.*.*.* India | Comment Reference Number: 35575
அசலாமு அழைக்கும் வரஹ்........
அனைவருக்கும் நன்றி எனது அன்பு மச்சான் ஷகீல் ரஹ்மானுக்கு . துஅ பன்னற்றக்காக எங்களது குடும்பத்தின் சார்பாக எங்களது நன்றிஎனை சமர்பிக்குறோம்.
Dear Machan still we could not able to believe you are in some where . our entire family waiting for meet you in Mahsar . இன்ச்தல்லாஹ் ..... வஸ்ஸலாம் ................
76. Re:... posted byMauroof (Dubai)[24 June 2014] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35576
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.
மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.
77. inna lillahi wa inna ilaihi raajiwoon posted byismail (jeddah)[24 June 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35577
என் அருமை நண்பன் ஷகீல் ரஹ்மான் மர்ஹூமாஹி விட்டான் என்ற அதிர்ச்சியில் இருந்து இன்னும் என்னால் மீள முடியா விட்டாலும் அல்லாஹ்வின் கட்டளைப்படி நடந்த காரியத்திற்கு நாம் சபூர் செய்தே ஆஹவேண்டும் என்ற மன பக்குவத்தோடு சபூர் செய்து கொண்டேன் .
எல்லாம் வல்ல அல்லாஹ் என் அருமை நண்பனின் எல்லா பிழைஹளையும் பொருத்து ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை தந்தருளி அவன் குடும்பர்த்திர்க்கும் எனக்கும் அவன் இழப்பை தாங்கக்கூடிய சக்தியை தருவானாக ஆமீன்
78. Re:... posted byASHIKRAHMAN (MIKHWA,AL BAHA,K.S.A)[24 June 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35584
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக -
அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross