காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளின் சார்பில், வழமை போல இவ்வாண்டும் நேற்று (21.06.2014) சனிக்கிழமையன்று, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2014” நிகழ்ச்சிகள் காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) மைதானத்தில் நடத்தப்பட்டன.
நேற்று மாலையில் சாதனை மாணவியுடன் எஸ்.சுஷாந்தியுடன், நமது காயல்பட்டினம் நகர பள்ளிகளின் மாணவ-மாணவியர் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று 19.00 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலீ, தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் பா.ரெத்னம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
அவ்விழாவில், மாநிலத்தின் முதன்மாணவிக்கும், நமதூரிலிருந்து 10, 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளை எழுதி பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ள மாணவ-மாணவியருக்கும் பணப்பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அத்துடன், நகரின் சிறந்த பள்ளிகளுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.
படங்களுடன் கூடிய விரிவான செய்திகள் விரைவில்...
இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |