காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம், நூருல் இஸ்லாம் மருத்துவமனை ஆகியன இணைந்து, மருத்துவ இலவச முகாமை, இம்மாதம் 21ஆம் நாள் சனிக்கிழமையன்று, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தின.
இருதயம், குடல், கல்லீரல், சிறுநீரகம், எலும்பு - மூட்டு ஆகிய நோய்களுக்கு அந்தந்த துறை சார்ந்த மருத்துவ நிபுணர்களான டாக்டர் ராமகிருஷ்ண குமார், டாக்டர் சிஜில், டாக்டர் ரஜனீஷ், டாக்டர் ப்ரசாத், டாக்டர் சுபாஷ் ஆகியோர் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
முன்பதிவு அடிப்படையில் நடைபெற்ற இம்முகாமில், இருதய பிரிவில் 58 பேரும், எலும்பியல் பிரிவில் 83 பேரும், நரம்பியல் - சிறுநீரகம் பிரிவில் 51 பேரும், குடல் பிரிவில் 64 பேரும் என மொத்தம் 256 பேர் மருத்துவ ஆலோசனைகளையும், இலவச பரிசோதனைகளையும் பெற்றனர்.
பின்னர் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், மருத்துவக் குழுவினருக்கு ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினர்.
முகாம் ஏற்பாடுகளை, எல்.கே.துவக்கப் பள்ளியின் பணி நிறைவு பெற்ற ஆசிரியர் நா.பீர் முஹம்மத் தலைமையில், எம்.எல்.ஹாரூன் ரஷீத், ஏ.எஸ்.புகாரீ, பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, கலாமீ யாஸர் உள்ளிட்டோரடங்கிய குழுவினர் செய்திருந்தனர்.
தகவல்:
A.S.புகாரீ
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
ஐக்கிய விளையாட்டு சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |