இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுடன் இணைந்து கத்தர் காயல் நல மன்றம் 5ஆவது ஆண்டாக நடத்தும் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி, இம்மாதம் 22ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 17.00 மணிக்கு, காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் - கே.எஸ்.ஸி. மைதானத்தில் நடைபெற்றது.
காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய 7 பள்ளிகளிலிருந்து, அணிக்கு மூவர் வீதம் 113 அணிகளாக 339 மாணவ-மாணவியர் இப்போட்டியில் பங்கேற்றனர்.
காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி முதல் இரண்டிடங்களைத் தக்க வைத்தது. மூன்றாமிடத்தை சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி அணி பெற்றது.
முதலிடம் பெற்ற அணிக்கு ரூபாய் 5 ஆயிரம் பணப்பரிசு, பதக்கங்கள், சான்றிதழ்களும், அவர்கள் சார்ந்த எல்.கே.மேனிலைப்பள்ளிக்கு பரிசுக் கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பெற்ற அணிக்கு ரூபாய் 3 ஆயிரம் பணப்பரிசு, சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன. மூன்றாமிடம் பெற்ற அணிக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. இறுதிப்போட்டி வரை முன்னேறிய அனைத்து அணிகளுக்கும் சிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இப்போட்டியில், பார்வையாளர்களிடமும் கேள்விகள் கேட்கப்பட்டு, சரியான விடையளித்தோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
காயல்பட்டினம் நகரின் பொதுநல ஆர்வலர் ஹாஜி எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ அவர்கள் தலைமையேற்ற இந்நிகழ்வில், புதுயுகம் தொலைக்காட்சியில் பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டியை தயாரித்து நடத்தும் - கோவை நடராஜன் கிருஷ்ணசாமி கலந்துகொண்டு, போட்டியை நடத்தினார்.
படங்களுடன் கூடிய விரிவான செய்தி விரைவில்...
படங்கள்:
ஹுஸைன் ஹல்லாஜ்
உறுப்பினர் - கத்தர் காயல் நல மன்றம்
கடந்தாண்டு (2013) நடத்தப்பட்ட “நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |