ஹிஜ்ரி கமிட்டி காயல்பட்டினம் நகர கிளை சார்பில் - ரமழான் விளக்கப் பொதுக்கூட்டம், இன்று (ஜூன் 21) 19.00 மணிக்கு, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெறவுள்ளது.
அப்துல் ஜலீல் தலைமை தாங்க, எஸ்.ஐ.அபூபக்கர் முன்னிலை வகிக்க, முதல் அமர்வில் “சர்வதேச பிறை - ஓர் உண்மை விளக்கம்” எனும் தலைப்பில் மவ்லவீ அப்துர்ரஷீத் ஸலஃபீ உரையாற்றுகிறார்.
இஷா தொழுகையைத் தொடர்ந்து நடைபெறும் இரண்டாவது அமர்வில், “ஹிஜ்ரீ கமிட்டி சொல்வதென்ன?” எனும் தலைப்பில் ஏ.எம்.ஜி.மஸ்ஊத் உரையாற்றுகிறார்.
கூட்ட ஏற்பாடுகளை, ஹிஜ்ரா கமிட்டி காயல்பட்டினம் கிளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர். பொதுக்கூட்டம் குறித்து வெளியிடப்பட்டுள்ள பிரசுரம்:-
ஹிஜ்ரி கமிட்டி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |