காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நகராட்சியால் வினியோகிக்கப்படும் குடிநீரை சட்ட விரோதமாக மின் மோட்டார் மூலம் உறிஞ்சுவோரின் மின் மோட்டார் கருவிகள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பறிமுதல் செய்யப்படுவதோடு, அதன் உரிமையாளர்களுக்கு ரூபாய் 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும்,
வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளை சாலைகளில் திரிய விடக்ககூடாது என்றும், வரும் ஜூலை 01ஆம் நாள் முதல் அவ்வாறு திரியும் கால்நடைகள் நகராட்சி ஊழியர்களால் பிடிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என்றும், உரிமை கோரப்படாத கால்நடைகள் கோசாலைகளில் விடப்படும் என்றும் காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ் அறிவித்துள்ளார்.
இவ்வறிவிப்பு, இன்று நகர் முழுக்க வாகன ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் அருணாச்சலபுரம் பகுதியில் இம்மாதம் 16ஆம் நாளன்று திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதில், சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட மின் மோட்டார்கள் சில பறிமுதல் செய்யப்பட்டன.
நேற்று (ஜூன் 17) ஆஸாத் தெரு பகுதியில் திடீர் சோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |