காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளின் சார்பில், வழமை போல இவ்வாண்டும் எதிர்வரும் 21.06.2014 சனிக்கிழமையன்று, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2014” நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
அன்று மாலையில் சாதனை மாணவியுடன், நமது காயல்பட்டினம் நகர பள்ளிகளின் மாணவ-மாணவியர் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
அன்று 19.00 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது. அதில், மாநிலத்தின் முதன்மாணவிக்கும், நமதூரிலிருந்து 10, 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளை எழுதி பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ள மாணவ-மாணவியருக்கும் பணப்பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன், நகரின் சிறந்த பள்ளிகளுக்கான விருதுகளும் வழங்கப்படவுள்ளன.
இந்த நிகழ்ச்சிக்கு காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் தலைமை தாங்குகிறார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.எம். அக்பர் அலி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்கிறார். தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் பா.ரத்தினம் முன்னிலையாளராக பங்கேற்கிறார்.
இந்நிகழ்ச்சியில் - பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற கிருஷ்ணகிரி மாணவி எஸ்.சுஷாந்தி மற்றும் காயல்பட்டினம் நகர அளவில் சாதனைகள் புரிந்த மாணவ - மாணவியர் கௌரவிக்கப்படுகின்றனர்.
நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் குறித்து, அவ்வமைப்புகளின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழ் மற்றும் விளக்கப் பிரசுரம் வருமாறு:-
தகவல்:
இக்ராஃ கல்விச் சங்கம் & தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பாக,
N.S.E.மஹ்மூது
மக்கள் தொடர்பாளர்
இக்ராஃ கல்விச் சங்கம்
கடந்தாண்டு நடைபெற்ற “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2013” நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகள் அடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 12:45 pm / 17.06.2014] |