ஷஃபான் மாதத்தின் 15ஆம் இரவு நிஸ்ஃபு ஷஃபான் (ஷஃபானில் பாதி) என்று அழைக்கப்படும். ‘ஷபே பராஅத்’, ‘பராஅத் இரவு’ என்ற பெயர்களிலும் அழைக்கப்படும் இந்நாள் இரவில், நீண்ட ஆயுளை வேண்டியும், தீவினைகளிலிருந்து பாதுகாப்பு வேண்டியும், படைத்தவனைத் தவிர்த்து படைப்பினங்களின் உதவிகளிலிருந்து தேவைற்றிருக்கச் செய்திடக் கோரியும் திருமறை குர்ஆனின் யாஸீன் அத்தியாயத்தை 3 முறை ஓதி, பிரார்த்திப்பது வழமையாக இருந்து வருகிறது.
காயல்பட்டினத்திலுள்ள புதுப்பள்ளி, காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி, மஸ்ஜித் மீக்காஈல், குருவித்துறைப் பள்ளி, மஹ்ழரா, ஜாவியா உள்ளிட்ட பல இடங்களில் வழமை போல இவ்வாண்டும் பராஅத் இரவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அனைத்திடங்களிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், அந்தந்த மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த ஆண்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
காயல்பட்டினம் ஜாவியாவில் நேற்று 20.00 மணியளவில் நிகழ்ச்சி துவங்கியது. கலீபத்துல் குலஃபா மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.முத்துவாப்பா ஃபாஸீ தலைமை தாங்கினார். பராஅத் இரவின் மகத்துவம் மற்றும் மார்க்கக் கல்வியின் அவசியம் குறித்து, ஜாவியா அரபிக் கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ சிறப்புரையாற்றினார்.
துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. இந்நிகழ்ச்சியில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவில் அனைவருக்கும் நேர்ச்சை வினியோகிக்கப்பட்டது.
தகவல்:
ஹாஃபிழ் M.S.முஹம்மத் ஸாலிஹ்
நகரில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நடைபெற்ற பராஅத் இரவு நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஜாவியா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |