இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுடன் இணைந்து கத்தர் காயல் நல மன்றம் 5ஆவது ஆண்டாக பெருமகிழ்வுடன் நடத்தும் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி, இம்மாதம் 22ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 16.30 மணிக்கு, காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் - கே.எஸ்.ஸி. மைதானத்தில் நடைபெறவுள்ளது.
காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவ-மாணவியர் பங்கேற்கும் இப்போட்டியில், வெற்றிபெறும் அணிகளுக்கு பணப்பரிசு, கோப்பை, முதலிடம் பெறும் அணி சார்ந்த பள்ளிக்கு விருது உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளன.
இப்போட்டியில், பார்வையாளர்களிடமும் கேள்விகள் கேட்கப்பட்டு, சரியான விடையளிப்போருக்கு அழகிய பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
காயல்பட்டினம் நகரின் பொதுநல ஆர்வலர் ஹாஜி எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ அவர்கள் தலைமையேற்கும் இந்நிகழ்வில், புதுயுகம் தொலைக்காட்சியில் பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டியை தயாரித்து நடத்தும் - கோவை நடராஜன் கிருஷ்ணசாமி அவர்கள் கலந்துகொண்டு, போட்டியை நடத்தவுள்ளார்.
வினாடி-வினா போட்டி தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விளக்கப் பிரசுரம்:-
இத்தகவலை, கத்தர் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு (2013) நடத்தப்பட்ட “நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |