சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, மனித உயிர்களுக்குக் கேடு விளைவிக்கும் வகையில், காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையை மூடக் கோரி, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA ஒருங்கிணைப்பில், இன்று (ஜூன் 20 வெள்ளிக்கிழமை), நகரின் பேருந்து போக்குவரத்துள்ள சாலைகள் அனைத்திலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
மனித சங்கிலி போராட்டம், இன்று 17.15 மணிக்குத் துவங்கியது. காயல்பட்டினம் தாயிம்பள்ளி சந்திப்பில் துவங்கி, கே.டி.எம். தெரு, பிரதான வீதி, தைக்கா பஜார் வழியாக பேருந்து நிலையம் வரை - நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த - அனைத்து மதங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இடைவெளியின்றி கைகோர்த்து நின்றனர். ஒரு மணி நேரம் நடைபெற்ற இப்போராட்டம் 18.15 மணிக்கு நிறைவுற்றது.
இன்று 19.30 மணிக்கு, விளக்கப் பொதுக்கூட்டம் - காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.
நிகழ்ச்சிகள் குறித்த விளக்கப் பிரசுரம் வருமாறு:-
படங்களுடன் கூடிய விரிவான செய்தி விரைவில் வெளியிடப்படும்.
KEPA தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |