சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, மனித உயிர்களுக்குக் கேடு விளைவிக்கும் வகையில், காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையை மூடக் கோரி, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA ஒருங்கிணைப்பில், இம்மாதம் 20ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம், மனித சங்கிலி போராட்டம், விளக்கப் பொதுக்கூட்டம் ஆகியன நடைபெறவுள்ளன.
காயல்பட்டினம் சுற்றுச்சூழலை மாசுகளிலிருந்து காத்திடவும், மக்கள் நலனைக் காத்திடவும் நடத்தப்படும் இப்போராட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டத்தில், அனைவரும் கடமையெனக் கருதி கலந்துகொள்ளுமாறு, KEPA தலைவர், செயலர், நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து KEPA சார்பில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரம் வருமாறு:-
இத்தகவலை, KEPA செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தெரிவித்துள்ளார்.
KEPA தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |