சென்ற கல்வியாண்டில் நடைபெற்ற தேர்வுகளில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு, காயல்பட்டினம் புதுப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையில் பரிசளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையில் இந்த கல்வியாண்டின் முழு ஆண்டுத் தேர்வு 08-06-2014 முதல் துவங்கி 22-06-2014ம் தேதியுடன் நிறைவுற்றது. நிறைவு தினத்தின் போது வழமை போல் சென்ற கல்வியாண்டில் வகுப்பு வாரியாக முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன் சென்ற வருடம் நோன்பு நோற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நோன்பு நோற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மத்ரஸாவிற்கு விடுப்பு எடுக்காமலும், விடுப்பு குறைவாக எடுத்து அதிக நாட்கள் மத்ரஸாவிற்கு வருகை தந்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
மாணவர்களுக்கான பரிசுகளை மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் முதல்வர் A.H.M.A. மிஸ்கீன் சாகிபு ஆலிம் ஃபாஸி அவர்களும், மத்ரஸாவின் செயலாளர் ஹாஃபிழ் பாளையம் நயீம் உதுமான் அவர்களும், இணைச் செயலாளர் K.V. ஹபீப் முஹம்மது B.Sc., அவர்களும், மத்ரஸாவின் ஆசிரியர் மௌலவி ஹாபிழ். M.T. முஹம்மது அப்துல் காதர் ஆலிம் அவர்களும், மத்ரஸாவின் நிர்வாகக் குழு உறுப்பினரும் முஹ்யித்தீன் டி.வி.யின் நிர்வாக இயக்குனருமான J.M. அப்துர் ரஹீம் B.E., அவர்களும் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்கள்.
முன்னதாக பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு முன்னர் ரமழான் மாதத்தின் சிறப்புகள் பற்றியும் ரமழான் மாதத்தில் செய்ய வேண்டிய நல்லமல்கள் பற்றியும் மத்ரஸா முதல்வர் A.H.M.A. மிஸ்கீன் சாஹிப் ஆலிம் ஃபாஸி அவர்கள் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்கள். ஹாஃபிழ். P.M.S. நயீம் உதுமான் அவர்கள் துஆ பிரார்த்தனையோடு நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவுற்றது.
புனித ரமழான் மாதம் முழுவதும் மத்ரஸா விடுமுறையளிக்கப்பட்டு மீண்டும் ரமழான் நோன்பிற்குப் பிறகு மத்ரஸா ஆரம்பமாகும் என்ற அறிவிப்பும் செய்யப்பட்டது.
நிகழ்ச்சிகள் யாவையும் மத்ரஸாவின் நிர்வாகக் குழு உறுப்பினரும் எல்.கே.மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியருமான கலீஃபா சதக்கத்துல்லாஹ் B.Sc.,B.Ed.,அவர்கள் நெறிப்படுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மத்ரஸா மாணவர்களும் மத்ரஸா நிர்வாகிகளும் அபிமானிகளும் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மத்ரஸா நிர்வாகிகளான A.A.L. அப்துல் அஜீஸ் லெப்பை B.Com., W.S.S. மரைக்கார் B.Sc., முஹம்மது அலி சாஹிபு B.Sc., ஆகியோர் செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையில் கடந்தாண்டு நடைபெற்ற பரிசளிப்பு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |