Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:03:40 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13946
#KOTW13946
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுன் 24, 2014
காயல்பட்டினம் ரயில்வே நிலையம் நிலுவை பணிகள் குறித்து நகர்மன்றத் தலைவர் - தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரிடம் மனு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2890 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



நிலுவையில் உள்ள காயல்பட்டினம் ரயில்வே நிலையப்பணிகள் துரிதமாக நிறைவேற்றிட - நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் உட்பட நகர அ.தி.மு.க.வினர் - தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசிங் நட்டர்ஜியிடம் ஜூன் 14 அன்று வழங்கினர். இது குறித்து - நகர்மன்றத் தலைவர், தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:

சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் வெற்றிபெற்ற திரு ஜெயசிங் நட்டர்ஜி அவர்களை ஜூன் 14 - சனிக்கிழமை அன்று தூத்துக்குடியில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். அப்போது - நிலுவையில் உள்ள காயல்பட்டினம் ரயில் நிலைய பணிகள் குறித்து மனு வழங்கினேன். இப்பணிகள் நிறைவுற அனைத்து உதவிகளும் புரிவதாக அவர் வாக்குறுதி அளித்தார்.







இவ்வேளையில் அ.தி.மு.க. நகர இணைச் செயலாளர் அருணாச்சல கனி அம்மாள், அ.தி.மு.க. நகர மேலவை பிரதிநதி மற்றும் 13வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். சம்சுதீன், 7வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜே.அந்தோணி, நகர கழக பொருளாளர் எஸ்.எம்.ஜின்னாஹ், 1வது வார்டு செயலாளர் செந்தமிழ் செல்வன், நகர அம்மா பேரவை புரட்சி சங்கர், 12வது வார்டு செயலாளர் மங்களவாடி சுயம்பு, கழக பேச்சாளர் எம்.எல். இல்யாஸ், 13வது வார்டு அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆறுமுக நெய்னார் மற்றும் தொண்டர்கள் பெருமாள், சேது முருகன், வி.முருகன், வேலு மற்றும் காதர் ஆகியோர் உடன் இருந்தனர்.





இவ்வாறு நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக்கின் முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தகவல் மற்றும் புகைப்படங்கள்:
நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபித் சேக் உடைய முகநூல் பக்கம் (https://www.facebook.com/aabidha.shaik)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...ஜெயதுரை -ஜெயசிங்-ஜெயலலிதா
posted by mackie noohuthambi (chennai) [24 June 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35580

நாடாளுமன்ற உறுப்பினர்கள் - நாடாளும் முதல்வர் பெயர்கள் என்னவோ ஜெய ஜெயா என்று இருக்கிறது, ஆனால் நமதூர் ரயில் நிலையத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் அக்கறை என்னவோ அய்யோ அய்யோ என்ற பரிதாபத்தில்தான் இருக்கிறது.

அம்மா கைகாட்டும் நபர் ஆட்சியில் அமரவில்லை. அம்மாவே ஆட்சியில் அமர்வார்கள் என்ற கனவும் பொய்த்து போனது. யாருடைய தயவும் எங்களுக்கு தேவை இல்லை என்று விஸ்வரூபம் எடுத்து நிற்கும் இந்த ஆட்சியில் நமது கோரிக்கைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை.

கடந்த ஆட்சியில் 13 அமைச்சர்கள் வேட்டி கட்டிய தமிழர்கள் ஆட்சியில் முக்கிய பதவிகளை தங்கள் கைவசம் வைத்துக் கொண்டு இருந்தபோதே இந்த தமிழகம் இருண்டு கிடந்தது, காயல்பட்டினம் ரயில் நிலையம் இருளில் மூழ்கி இருந்தது, இப்போதா விழித்துக் கொள்ளப் போகிறது...

ஹூம், ஜெயசிங் அவர்களும் ஜெயலலிதா ஆபிதா அவர்களும் 2016இல் மீண்டும் ஒரு தேர்தல் இருக்கிறது என்று மத்திய அரசிடம் நினைவூட்டி நமதூர் ரயில் நிலைய தேவைகளை நிறைவேற்றி தர ஆவன செய்வார்கள் என்று நம்புவோமாக - நம்பிக்கைதானே வாழ்க்கை. மற்றப்படி ரயில் நிறுத்த போராட்டம், சிறை நிரப்பு போராட்டம் என்பதெல்லாம் வெறும் கண்கட்டி வித்தைதான்.அரசியல் அஸ்திரங்கள்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. விரைவில் நல்லது நடக்க வல்லோன் அல்லாஹ்வை பிரார்த்திக்கிறோம்...!!!
posted by S.K.Shameemul Islam (Chennai) [25 June 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35591

சமீபத்தில் மே மாதம் நான் ஊருக்கு வரும்போது செந்தூர் எக்ஸ்ப்ரஸில் எஸ் 3 -இல் பயணம் செய்து காயல்பட்டணம் இரயில் நிலையத்தில் இறங்கினேன். எஞ்சினுக்கு மிக அருகில் எனது கோச் இருந்ததால் இறங்கும் போது பிளேட்ஃபார்ம் இல்லாத இடத்தில் கருங்கல் குவிக்கப்பட்ட பரப்பில் நான் இறங்க வேண்டியதாக இருந்ததால் என் கால் சுளுக்கி கீழே விழுந்து எழுந்ததை எஞ்சின் டிரைவர் கூட பரிதாபமாகப் பார்த்தார். அதன் வலி பத்து நாட்களுக்கும் மேலாக எனக்கு இருந்து கொண்டே இருந்தது.

ஆனால் அதுக்கும் மேலாக இன்னொரு பாட்டி அடுத்த கோச்சில் இருந்து இறங்க கீழிருந்து ஒருவரும் வண்டியில் இருந்து இருவரும் கைத்தாங்கலாக பொறுமையுடன் இறக்கி விட வண்டி புறப்பட்டு விடுமோ என பயந்து கொண்டே அந்த மூதாட்டி இறங்குவதைப் பார்க்க மிகவும் வேதனையாக இருந்தது.

இவ்விஷயத்தில் நமதூர் முஸ்லிம் லீக் கட்சியினர் பற்பல முயற்சிகளை மேற்கொண்டு வந்த போதிலும் ஏன் இன்னும் ஒரு முறையான பிளேட்ஃபார்ம் நமக்கு கிடைத்த பாடில்லை என நினைக்கும் போது ஒரு புரியாத புதிராகவே உள்ளது.

சென்ற வார இறுதியில் நான் பொதிகை எக்ஸ்ப்ரஸில் புளியங்குடி சென்றபோது சின்னஞ்சிறு ஊர்களிலெல்லாம் பிளேட்ஃபார்ம் இருப்பதை கண்டேன். இதே பிளேட்ஃபாரத்தை நமதூரில் மட்டும் அமைப்பதற்கு அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஏன் தான் மனமில்லையோ.

இன்னும் பலரது கால்கள் பழுதாகு முன்னரும் முதியோர்களும் ஐம்பது வயதுக்கு மேற்பட்டோரும் பெண்கள் குழந்தைகளும் குலை நடுங்க இறங்குவதை இனிமேலும் தவிர்த்திடவும் இம்மனுவைப் பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் உதவுவாரானால் காயல்பட்டணத்து மக்களின் மனங்களில் நீங்காது இடம்பிடிப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

விரைவில் நல்லது நடக்க வல்லோன் அல்லாஹ்வை பிரார்த்திக்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved