செய்தி: DCW தொழிற்சாலையை மூடக் கோரி, ஜூன் 20 அன்று - கருப்புக்கொடி, மனித சங்கிலி போராட்டம்! 19.00 மணிக்கு விளக்கப் பொதுக்கூட்டம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...DESTROYING COMMON WEALTH posted bymackie noohuthambi (chennai)[20 June 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 35543
DCW...it is Destroying Common Wealth. மக்களின் சுகாதாரத்தை பறிக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் மக்களின் பொதுவான செல்வதை அபகரிப்பதாகவே கருதப்படும்.
அந்த வகையில் DCW என்று அழைக்கப்படும் - சாவை உண்டாக்கும் சாவுபுரம் எல்லையில் இயங்கும் இந்த நச்சு ஆலை நமது நகராட்சிக்கு தரவேண்டிய முறையான வரியையும் தராமல் நமதூர் மக்களின் உடல் நலத்துக்கும் கேடு விளைவித்துக் கொண்டு தொடர்ந்து தொல்லை தந்து கொண்டிருக்கிறது. ஆரம்பிக்கும்போது எல்லாமே நல்ல நோக்கத்தோடுதான் ஆரம்பமாகிறது. ஆனால் காசாசை, பணத்தாசை என்று வரும்போது அவை காணாமல் போகிறது.
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பதிலே ...என்று ஒரு கவிஞன் பாடுவான். DCW க்கும் அது பொருந்தும். இவ்வளவு காலமாக அந்த நிறுவனம் பொருளீட்டியது போதும்.தலைமுறை தலைமுறைக்கும் அவர்கள் தாம் ஈட்டிய செல்வம் குவிந்து கிடக்கிறது.
இப்போது இந்த பகுதி மக்களின் நலனுக்காக அந்த நிறுவனம் மூடப் பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையுடன் இன்று முன்னெடுத்து செல்லப்படும் மனித சங்கிலி போராட்டம் பொதுக் கூட்டம் எல்லாம் நாம் ஜனநாயக நெறியில் நின்று போராடுபவர்கள், எங்களுக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை என்பதை காட்டுவதாகவே அமையும். இதை நமது பலவீனமாக DCW நிர்வாகம் கருதுமானால் வட மாநிலங்களில் இந்த மாதிரி மாசு உண்டாக்கும் நிறுவனங்களை நிர்மூலமாக்கும் வேலைகளில் இளைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டு தீவிர போக்கை முன்னெடுத்து அதில் அரசுக்கும் நெருக்கடி கொடுத்து தங்கள் உரிமைகளை நிலை நாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாடறியும். அந்த நிலைக்கு இந்த இளைஞர்களை தள்ள வேண்டாம் என்று DCW நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறோம்.
எங்களை உங்கள் தலைமேல் ஏற்றிவையுங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. எங்கள் தலைமேல் ஏறி நிற்காதீர்கள் என்றுதான் உங்களை கேட்டுக் கொள்கிறோம்.
சாத்வீகமான இன்றைய போராட்டத்துக்கு, ஊரில் உள்ள எல்லா மக்களும் ஆதரவு தெரிவித்து இவற்றில் கலந்து கொண்டு இளைஞர்களின் கரங்களை வலுப்படுத்துங்கள். அவர்களுக்கு வழி காட்டுங்கள். நாம் கோடு போட்டால் அவர்கள் ரோடு போடுவார்கள் நாம் புள்ளி வைத்தால் அவர்கள் கோலம் போடுவார்கள். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் பெரியவர்களின் நல்லாசியும் அங்கீகாரமும்தான்.
வளமான தமிழகம் - வலிமையான இந்தியா மாசுக்கள் சுற்றுப்புற சூழல் கேடுகள் இல்லாத சுகாதாரமான - சுகமான வாழ்வு தரும் காயல்பட்டினம்.
காவல் நிலையம் இல்லாத ஊர் - திரை அரங்கு இல்லாத ஊர் - மதுக்கடை இல்லாத ஊர் - சுற்றுப்புற சூழல் சிறப்பாக அமைந்த ஊர் - காயல்பட்டினம் என்ற நிலையை உருவாக்க நாம் எல்லோரும் மனித சங்கிலியாக இணைந்து நிற்போம் வாருங்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross