எனதருமைக் காயலர்களே! posted bykavimagan kader (dubai)[26 March 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3556
சகோதரர் சட்னி செய்யத் மீரான் அவர்களது வேண்டுகோளை ஏற்று, தேர்தல் முடியும் வரை அரசியல் கருத்துக்கள் எதையும் பதிவு செய்வதில்லை என்ற முடிவோடு இருந்தேன். ஆனால், இங்கு ஒரு சகோதரர், என்ன நடக்கிறது, தான் என்ன எழுதுகிறோம் என்பதனை அறியாமலேயே கருத்து ஒன்றை பதிவு செய்திருக்கின்றார்.
எந்தவித சட்டத்தையும் பின்பற்றாமல், அநியாயமான முறையில், தொகுப்பு வீடுகள் என்ற பெயரில், அந்நியர்களை குடியேற்றி,நம் தலைமுறைக்கே கேடு விளைவிக்கும் ஒரு பாரதூரமான சம்பவத்தை, தடுத்து
நிறுத்த, தேர்தல் புறக்கணிப்பு என்ற ஓரங்க நாடகத்தை நடத்திய ஐக்கியப்பேரவை, பின்னர் வழக்கம்போல் அர்த்தமற்ற பேரவையாகி, நகரத்தின் நலனை நட்ட நடுவீதியில் நட்டி விட்டுப் போன கதையை, காயல்.காம் ஒவ்வொரு காயலனுக்கும் புரியும் வகையில், பாகம் பாகமாக வெளியிட்டு வருகிறது.
இதில் ஆச்சர்யம் என்னவெனில், இதைப் படித்து விட்டு அரசியல் அக்கிரமவாதிகளுக்கு எதிராக பொங்கி எழுவதற்குப் பதிலாக, உண்மையை வெளிக்கொணரும் ஊடகத்தின் மீது பாய்ந்திருப்பது வெட்கக்கேடானதும், வேதனை மிக்கதுமாகும். ஊழல் அரசியல்வாதிகளுள் யார்தான் யாருக்கு நண்பர் இல்லை? எமர்ஜென்சி என்ற போர்வையில், இயக்கத்தின் ஒன்றரை லட்சம் வாலிபர்கள் ஊனமுறக் காரணமாக இருந்த இந்திரா அவர்களை, நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!! என்று கருணா அழைக்கவில்லையா?
அவ்வளவு ஏன்? கொலைகாரன் மோடியுடன், கயவன் கருணா கொஞ்சி மகிழ்ந்ததை இந்த நாடு பார்க்கவில்லையா?
நேற்றுவரை துரோகி என்று வர்ணித்த வைகோவை, இந்திரஜித் என்று கூறி, வரிப்புலி வரிசையே வா! என்று தேர்தல் சுயலாபத்திற்காக கருனாநிநிதி அழைப்பு விடுத்து ஆறு நாட்களே ஆகிறது.
குடிகாரன் விஜயகாந்தும் ஊற்றிக்கொடுத்த ஜெயாவும்(அவர்களே பரஸ்பரம் சொல்லிக்கொண்டது)ஒரே கூட்டணியில் கொஞ்சிக் குலவ வில்லையா? அ.தி.மு.க.வும், மு.லீக்கும் ஒரே அணியில், அதுவும் ஜெயா முன்னிலையில், வாய்பொத்தி கைகட்டி நின்றதை நாம் பார்க்க வில்லையா?
இவையனைத்தும் அரசியல் குப்பைகள். இவற்றுக்காக,
அரசியல் லாபங்களுக்காக மரம் விட்டு மரம் தாவும் அனிதாக்களுக்காக, ஐக்கியப் பேரவை தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் பட்சத்தில், நாம் அடுத்து செய்ய வேண்டியது என்ன என்பதை ஆக்கபூர்வமாக கருத்துரையுங்கள் நண்பர்களே!
அதை விடுத்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க அறிவுரை தராதீர்கள்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross