அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[24 June 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35578
சௌதி மன்னர் என்று சொல்லிக்கொண்டிருந்த தன்னை இனி அப்படி அழைக்கவேண்டாம் புனித மக்கா,மதினா ஆகிய இரண்டு புண்ணிய இடங்களின் பாதுகாப்பு சேவகன் என்று அழைத்தால் போதும் என்று அடக்கத்துடன் கூறிய அரசன் எத்தனையோஏழை இஸ்லாமிய நாட்டிலுள்ள லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு வாரிவழங்கிய வழங்க்கிகொண்டிருக்கின்ற ஓர் நாட்டின் ஆட்சிபுரிந்த மன்னரை,இஸ்லாத்திற்காக கோடிக் கணக்கான டாலர்களை செலவிட்ட ஒரு மன்னரை,அவரின் அந்தரங்க வாழ்கையை அருகில் உட்கர்ந்து பார்த்ததுபோல்,ஆபாசம் நிறைந்த வார்த்கைகளால் வர்ணித்து வாசிக்கும் வேற்று மததவர்கள் முதல் முஸ்லிம்கள் வரை முகம் சுழிக்கும் அளவற்கு கட்டுரை என்ற பெயரில் ஆதாரமற்றவைகளை அள்ளித்தெளித்திருக்கும் அவரின் எழுத்தின்தரத்தை அத்தரதிற்க்கேற்றவாறு ஒரு வரியில் சொல்ல வந்தால் அதை "விமர்சனம்" என்று கூறி வெட்டி விட்டீர்கள்!
இன்னும் சொல்லவந்தால்,மோடி அரசு சிறுபான்மையருக்கான சிறப்பு சலுகையை மறுபரிசீலனை செய்வதுபோன்ற சிலேடை செயல்களை புரிந்துகொண்ட சௌதி அரசு தங்கள் அரசாங்க அதிகாரிகள் கூட்டத்தில் எடுத்த முடிவு என்ன தெரியுமா?
இந்திய முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் அடிப்படை தேவைகளை செய்ய தயாராக இருக்கிறோம் என்று பெருந்தன்மையோடு பிரகடனம் செய்த ஒரு புண்ணிய நாட்டை ஆண்ட ஒரு அரசனை ஒரு இந்திய முஸ்லிம் கட்டுரை என்ற பெயரில் அவரின் பெயருக்கு களங்கம ஏற்படுத்துவதுபோல் எழுதியுள்ளதை சற்று கடினமுடன் கண்டித்தால் அதை "விமர்சனம்" என்று வெட்டி விடுகிறீர்கள்! நீங்கள் நடுநிலமையோடோ அல்லது எந்த தனிமனித வாழ்கை பயணத்தில் தலைகுணிவு ஏற்படாதவாறு,மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை சொல்லுகின்ற ஒரு கட்டுரையை பிரசுரித்து இருந்தாலோ எந்த எதிர்மறை விமர்சன்களும் வராது, இப்படிப்பட்ட தரக்குறைவான கட்டுரையை பிரசுரிக்கும் நீங்கள் அதற்குறிய விமர்சனத்தையும் பிரசுரித்தால்தான் உங்களின் நடுநிலைமையை நாலுபேர்கள் மெச்சும்படியாக இருக்கும்!
மறைந்துவிட்ட ஒருவரின் மாண்புகளை மிகைப் படுத்த வேண்டுமே தவிர அவரின் அந்தரங்க வாழ்கையை ஆபாசமாக விமர்சித்து வெட்டவெளில் உலகுக்கு தெரியும்படி தூற்றுங்கள் என்று நம் மார்க்கம் சொல்லித்தரவில்லை.. மறைந்து விட்டவர் தெரிந்தோ தெரியாமலோ செய்துவிட்ட பாவங்களை அவர் செய்த புண்ணிய காரியங்களுக்கு பகரமாக மன்னித்து ஆகிரத்தில் நற்பதவி வழங்கிடு யா அல்லாஹ் என்றுதான் எந்த ஒரு உண்மையான முஸ்லிமும் முன்னோனாம் மேலோனிடம் வேண்டிக்கொள்வான்!
பெரும்பாலானவர்களின் வேண்டுகோளிக்கிணங்க இந்த கட்டுரையை எங்கள் இணையதளத்திலிருந்து நீக்கிவிட்டோம் என்ற அறிவிப்பு வரும் என்று என் போன்றவர்களெல்லாம் அதாவது உங்கள் இணையதளத்தின் மீது மரியாதையையும், மதிப்பையும் நடுநிலையாடு இயங்கும் என்ற எண்ணத்தையும் வைத்திருப்பவர்களின் எதிர்பார்ப்பாகும்,ஆனால் அந்த
எண்ணத்திற்க்கெல்லாம் நேர்மாற்றமாக என் விமர்சனத்தை வெட்டி விட்டீர்கள்! பரவாயில்லை.இமயமலைபோல் வளர்ந்துவிட்ட உங்கள் இணையதளத்தில் நான் ஒரு கடுகளவு கனமுடைய கல்தான் அதனால் தான் தங்கள் கண்ணில் பிரதானமாக படவில்லை போலும்!
உங்களுக்கு கட்டுரையாளர்கள் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் உங்கள் இணையதளத்தின் வாசகர்கள், அவர்கள் உங்கள் இதயஇரத்த நாளங்களைப்போலுள்ளவர்கள்.
அவர்களை மதிப்பதும்,முன்னிலைப்படுத்துவதும் உங்கள் பெருந்தன்மையும் ,நடுநிலைமையும் கலந்த எண்ணத்தின் எதிரொலியே.(அந்த எண்ணம் உங்களிடம் எதிரொலிக்கு மேயானால் என்னுடைய இந்த கருத்துக்கு கத்திரி போடாமல் பிரசுரிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்)
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
=முஹம்மது ஆதம் சுல்தான்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross