Re:...கண்ணியமும் புண்ணியமும் மிக்க ரமலானே வருக.. posted bymackie noohuthambi (chennai)[24 June 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 35581
எது எப்படியோ, பழைய காலம் மலை ஏறிவிட்டது. அறிவியலும் விரிவடைந்து விட்டது. அறிவாளிகளும் நிறைந்து விட்டார்கள். ஒரு தலைவருக்கு கட்டுப் படுவது என்ற காலமும் காலாவதி ஆகி விட்டது. மூன்று நாள்கள் வேறு வேறு நாளில் நோன்பு நோற்க, பெருநாள் கொண்டாட என்பதற்கு எல்லோரிடமும் நபி வழியில் ஆதாரம் அவர்கள் கைகளில் தயாராக உள்ளது. எனவே இவற்றை சர்ச்சை செய்வதில் அர்த்தமில்லை. அவரவர்கள் பின்பற்றும் கொள்கை, அவரவர்கள் பின்பற்றும் ஆலிம்கள் அவர்களை பின்தொடர்ந்து தக்பீர் கட்ட வேண்டியதுதான்.
நோன்புக்கு கூலி அல்லாஹ்வே தன சொந்தமாக தருவதாகவும் அவனே கூலியாகி விடுவதாகவும் உலமாக்கள் சொல்வதால், நம்மை போன்ற சாமானியர்கள் இதை தர்க்கம் செய்வதை விட்டு விட்டு நல அமல்கள் செய்ய தயார் ஆகுவோம்.
குறிப்பாக மிக பெறுமதியான சஹர் வேளையில் சஹர் ஒலிபரப்பு - சஹர் ஒளி பரப்பு என்ற தொலைகாட்சி .IDIOT BOX முன்னால் உட்கார்ந்து பொன்னான நேரத்தை வீணடிக்காமல். தஹஜ்ஜத் தொழுகை, குர்ஆன் திலாவது, சலவாத்து, இஸ்திக்பார், துஆக்கள் கேட்டு நமது அமல்களை பயனுள்ளதாக ஆக்கி கொள்ள அல்லாஹ் கிருபை செய்வானாக.
பிறரை பற்றி புறம் பேசாமல், கோள் சொல்லாமல், அடுத்தவர் உள்ளம் புண்படும்படி பேசாமல் இருந்து நம் நோன்பை பாதுகாத்துக் கொள்ளவும் அல்லாஹ் தவ்பீக் செய்வானாக.ஆமீன். கண்ணியமும் புண்ணியமும் மிக்க ரமலானே வருக, எங்களுக்கு நல் பாக்கியம் தருக.என்று இந்த ரமலானை வரவேற்போம்.
நபிகள் நாயகம் அவர்கள் ரஜப் மாதத்திலேயே ரமலானை வரவேற்க தயாராகி விடுவார்கள். நாம் ஷாபான் இறுதியிலே இப்படி சர்ச்சை செய்ய தயாராகி விடுகிறோம். என்ன வேதனையான செய்தி. அல்லாஹ் போதுமானவன், அவனே மிக்க அறிந்தவன்.
SUB'HAANAKA LAA ILMA LANAA ILLAA MAA ALLAMTHANAA...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross