செய்தி: காயல்பட்டினம் ரயில்வே நிலையம் நிலுவை பணிகள் குறித்து நகர்மன்றத் தலைவர் - தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரிடம் மனு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ஜெயதுரை -ஜெயசிங்-ஜெயலலிதா posted bymackie noohuthambi (chennai)[24 June 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 35580
நாடாளுமன்ற உறுப்பினர்கள் - நாடாளும் முதல்வர் பெயர்கள் என்னவோ ஜெய ஜெயா என்று இருக்கிறது, ஆனால் நமதூர் ரயில் நிலையத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் அக்கறை என்னவோ அய்யோ அய்யோ என்ற பரிதாபத்தில்தான் இருக்கிறது.
அம்மா கைகாட்டும் நபர் ஆட்சியில் அமரவில்லை. அம்மாவே ஆட்சியில் அமர்வார்கள் என்ற கனவும் பொய்த்து போனது. யாருடைய தயவும் எங்களுக்கு தேவை இல்லை என்று விஸ்வரூபம் எடுத்து நிற்கும் இந்த ஆட்சியில் நமது கோரிக்கைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை.
கடந்த ஆட்சியில் 13 அமைச்சர்கள் வேட்டி கட்டிய தமிழர்கள் ஆட்சியில் முக்கிய பதவிகளை தங்கள் கைவசம் வைத்துக் கொண்டு இருந்தபோதே இந்த தமிழகம் இருண்டு கிடந்தது, காயல்பட்டினம் ரயில் நிலையம் இருளில் மூழ்கி இருந்தது, இப்போதா விழித்துக் கொள்ளப் போகிறது...
ஹூம், ஜெயசிங் அவர்களும் ஜெயலலிதா ஆபிதா அவர்களும் 2016இல் மீண்டும் ஒரு தேர்தல் இருக்கிறது என்று மத்திய அரசிடம் நினைவூட்டி நமதூர் ரயில் நிலைய தேவைகளை நிறைவேற்றி தர ஆவன செய்வார்கள் என்று நம்புவோமாக - நம்பிக்கைதானே வாழ்க்கை. மற்றப்படி ரயில் நிறுத்த போராட்டம், சிறை நிரப்பு போராட்டம் என்பதெல்லாம் வெறும் கண்கட்டி வித்தைதான்.அரசியல் அஸ்திரங்கள்தான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross