செய்தி: DCW தொழிற்சாலையை மூடக் கோரி, கருப்புக்கொடி - மனித சங்கிலி போராட்டம்! தாயிம்பள்ளி முதல் பேருந்து நிலையம் வரை மக்கள் திரட்சி!! விளக்கப் பொதுக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிறப்புரை!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மாஷா அல்லாஹ்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[25 June 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35589
மாஷா அல்லாஹ் புகைப்படங்களைப் பார்க்க பெருமையாக இருக்கிறது.கண்ணியமிகு காயலர்களின் கரங்கள் மட்டும் கோர்க்கப்படவில்லை,கட்டுக்கோப்பானகருத்தொற்றுமையும் கோர்வையாகியுள்ளதை உணரமுடிகிறது!
அன்பு நண்பர் சாமுஹாஜிஅவர்களே,இருபுரமுள்ளவர்களின் கரங்களைப்பிடிப்பதற்க்கு பதிலாக,உணர்ச்சி வசப்பட்டு உங்கள் கரத்தை உயர்த்தி வீர வசனம் பேசும் உங்கள் அசைவு நிழற்படத்தில் நேரடி அறைகூவல்போல் அமைந்துள்ளது!
தன்னால் முடியாவிட்டாலும் மூன்றாவது கோல் துணையுடன் இம் மனித சங்கிலியில் கலந்து கொண்ட மரியாதைக்குறிய முத்து ஹாஜியைப்பார்க்கும் பொழுது எந்த அளவிற்கு இந்த ஆலைக்கழிவுகளால் பாதிக்கப்பட்டவர் களால் இவரின் உள்ளம் பதபதைப்புக்கு ஆளாகி இருக்கும், இதற்க்கு எப்படியும் ஒரு முடிவுகட்ட வேண்டும் என்ற வைராக்கியத்தில் தங்களால் முடியாத நிலையிலும் முன்னின்று முத்து ஹாஜியைப்போன்ற பல முத்தான இதயமுடைய முதியவர்களை புகைப்படத்தில் பார்த்து பூரிப்படைகிறேன்.அல் ஹம்திலில்லாஹ்!
காயல்பட்டணத்தை கருமைநிற கொடித்தோரணங்கள் ஆர்பரித்து அணிவகுத்து சென்றுகொண்டிருக்கிறது.அடியெது முடிவெது என்று தெரியாமல் முழு ஊரையும் வலம் வரும் அந்த ஒருங்கிணைந்த காட்சியைக்கண்டு இதயம் சற்று கனத்தாலும் காலத்தின் கட்டாயமே!
பொதுமேடை திடல் கூட்டத்தில் சில இருக்கைகள் காலியாக கிடப்பதைப்பார்த்து என் போன்றோர்களின் நெஞ்சங்கள் சற்று நெருடலாகியது! இது கட்சி கூட்டமோ, கச்சேரி கூட்டமோ அல்ல.ஒவ்வொரு காயலருடைய உயிர் பாதுகாப்புபற்றியது
இந்த ஏற்பாட்டை எவ்வளவு சிரமப்பட்டு "KEPA " மற்றும் அதற்க்கு ஆதரவான அன்புள்ளங்கள் ஏற்பாடு செய்திருப்பார்கள், அவர்களுக்கு ஆதரவும்,அரவணைப்பும் அளிக்கும் முகமாக முண்டியடித்துக்கொண்டு கூட்டம் மொயந்திருக்கவேண்டாமா?
அரபு நாட்டில் A /C யில் உட்கார்ந்துகொண்டு இலகுவாக எழுதிக்கொண்டிருக்கிறாய் என்று எவரும் எள்ளளவும் எண்ணிவிடவேண்டாம்.என் போன்றவர்களின் உடல்தான் இங்கிருக்கிறதே தவிர உயிரோ உங்களோடுதான் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் எதார்த்தமான உண்மையுடைய உணர்வு.
என்போன்றவர்கள் பொருளாதார தேட்டதிற்க்காக பல் ஆயிரம் மையில்களுக்கப்பால் வந்து குடும்பம்,உறவினர் ,நண்பர்களைப் பிரிந்து பொருளீட்ட வந்திருக்கும் துர்பாக்கியவதி நாங்கள்.
என் போன்றவர்கள் ஊரில் இருந்தால் இப்போராட்டத்தில் முதன்மை பிரிவில் எங்கள் பதிவு இருந்திருக்கும்! . .
வல்ல அல்லாஹ்வின் உதவியால் குடும்ப சரிதமாக தங்கள் நாட்டிலேயே சிறப்புடன்வாழும் உங்களைவேண்டிக்
கொள்வது எங்களுடைய கடமை இல்லையா?
இவ்வாலை நட்சிக்கிருமியினால் பரவிய உயிர் கொல்லி நோயின் காரணமாக நம்மில் பலர் தங்கள் குடும்பத்தார் களையும்,உறவுகளையும்,அன்பு நண்பர்களையும் இழந்து தவித்துக் கொண்டிருகின்ற அந்த கொடூரத்தின் காரணமாகத்தான் இந்த வேண்டுகோளை இங்கிருந்து உங்களுக்கு வைக்கிறோம்.இந்த அதி பயங்கர அவலத்தை எண்ணி ஒவ்வொரு வீட்டிலுள்ளவர்களும் தங்கள் தங்கள் மனதிற்குள் ஓசையின்றி ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross