செய்தி: காயல்பட்டினம் ரயில்வே நிலையம் நிலுவை பணிகள் குறித்து நகர்மன்றத் தலைவர் - தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரிடம் மனு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
விரைவில் நல்லது நடக்க வல்லோன் அல்லாஹ்வை பிரார்த்திக்கிறோம்...!!! posted byS.K.Shameemul Islam (Chennai)[25 June 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 35591
சமீபத்தில் மே மாதம் நான் ஊருக்கு வரும்போது செந்தூர் எக்ஸ்ப்ரஸில் எஸ் 3 -இல் பயணம் செய்து காயல்பட்டணம் இரயில் நிலையத்தில் இறங்கினேன். எஞ்சினுக்கு மிக அருகில் எனது கோச் இருந்ததால் இறங்கும் போது பிளேட்ஃபார்ம் இல்லாத இடத்தில் கருங்கல் குவிக்கப்பட்ட பரப்பில் நான் இறங்க வேண்டியதாக இருந்ததால் என் கால் சுளுக்கி கீழே விழுந்து எழுந்ததை எஞ்சின் டிரைவர் கூட பரிதாபமாகப் பார்த்தார். அதன் வலி பத்து நாட்களுக்கும் மேலாக எனக்கு இருந்து கொண்டே இருந்தது.
ஆனால் அதுக்கும் மேலாக இன்னொரு பாட்டி அடுத்த கோச்சில் இருந்து இறங்க கீழிருந்து ஒருவரும் வண்டியில் இருந்து இருவரும் கைத்தாங்கலாக பொறுமையுடன் இறக்கி விட வண்டி புறப்பட்டு விடுமோ என பயந்து கொண்டே அந்த மூதாட்டி இறங்குவதைப் பார்க்க மிகவும் வேதனையாக இருந்தது.
இவ்விஷயத்தில் நமதூர் முஸ்லிம் லீக் கட்சியினர் பற்பல முயற்சிகளை மேற்கொண்டு வந்த போதிலும் ஏன் இன்னும் ஒரு முறையான பிளேட்ஃபார்ம் நமக்கு கிடைத்த பாடில்லை என நினைக்கும் போது ஒரு புரியாத புதிராகவே உள்ளது.
சென்ற வார இறுதியில் நான் பொதிகை எக்ஸ்ப்ரஸில் புளியங்குடி சென்றபோது சின்னஞ்சிறு ஊர்களிலெல்லாம் பிளேட்ஃபார்ம் இருப்பதை கண்டேன். இதே பிளேட்ஃபாரத்தை நமதூரில் மட்டும் அமைப்பதற்கு அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஏன் தான் மனமில்லையோ.
இன்னும் பலரது கால்கள் பழுதாகு முன்னரும் முதியோர்களும் ஐம்பது வயதுக்கு மேற்பட்டோரும் பெண்கள் குழந்தைகளும் குலை நடுங்க இறங்குவதை இனிமேலும் தவிர்த்திடவும் இம்மனுவைப் பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் உதவுவாரானால் காயல்பட்டணத்து மக்களின் மனங்களில் நீங்காது இடம்பிடிப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
விரைவில் நல்லது நடக்க வல்லோன் அல்லாஹ்வை பிரார்த்திக்கிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross