சுனாமி குடியிருப்புக்களால் ஒரு சுனாமி posted byJaved Nazeem (Chennai)[26 March 2011] IP: 14.*.*.* India | Comment Reference Number: 3564
அவசியமான தொடர், மிகவும் சரியான நேரத்தில் தந்தமைக்கு நன்றியும் பாராட்டுக்களும்.
தேர்தல் என்பது கட்சி அரசியலின் மிக முக்கிய அங்கமாகும். ஊரின் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய, மற்றும் செயல் படுத்த வேண்டிய நிலையில் இருப்பவர்கள், பெரும்பாலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்சி அரசியலை சார்ந்தவர்களாக இருக்கின்றார்கள். இத்தகைய நிலையில், தேர்தல் புறக்கணிப்பு என்பது ஒரு அப்பாவித்தனமான எதிர்பார்ப்பாக அமைந்து விடுமோ என்கிற ஐயம் எழுகிறது.
நம் உயிரோடும் உணர்வோடும் விளையாடுகின்ற பிரச்சினைகளில், அரசியல் மற்றும் சுய விருப்பு வெறுப்புகளை புறந்தள்ளிவிட்டு, பிரச்சினைகளை முன் வைத்து சரியான முடிவுகளை எடுத்து செயல்படுத்த, தலைவர்கள் உட்பட அனைவரும் முன் வர வேண்டும். தேர்தல் புறக்கணிப்பு என்பது இன்று நமக்கு கிடைத்துள்ள சரியான அஸ்திரம் - தவற விட்டோமானால் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்துதான் அடுத்த தேர்தல் வரும்.
தேர்தலை நாம் புறக்கணித்தால் நாமே புறக்கணிக்கப்படுவோம் என்று Dr. KVS அவர்கள், சென்னை கூட்டத்தில் கூறினார்கள். இது சரியான கருத்தல்ல என்று எண்ணுகிறேன். முப்பதினாயிரம் பேர் புறக்கணிக்க முடிவு செய்தால் அது நிச்சயம் அரசின் கவனத்தை ஈர்க்கும், நம் பிரச்சினையின் தீவிரத்தை காட்டும், துரிதமான தீர்வு கிடைக்க வழி பிறக்கும். அனால் இந்த அருமையான அஸ்திரத்தை வீணடித்து விடுவோம் போல் தோன்றுகிறது. அத்தகைய சூழ்நிலையில் வேறு இரண்டு வழி முறைகளை கையாள வாய்ப்பு உள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross