செய்தி: இந்திய பொருளாதாரம் வலிமை பெற இஸ்லாமிய வங்கி முறை அவசியம்! ஜன்சேவா துவக்க விழா பொதுக்கூட்டத்தில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இஸ்லாமிய வங்கி முறை posted bymackie noohuthambi (chennai)[28 June 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 35661
அல்லாஹ்வுக்கும் அவனது ரசூலுக்கும் மிக விருப்பமான பெயர் அப்துர் ரஹ்மான். அதனால்தானோ என்னவோ, அவர்கள் வலியுறுத்தும் ஓர் நல்ல திட்டம் திறப்புவிழா காணவும் அவர்கள் வெறுக்கும் ஒரு திட்டம் மூடு விழா காணவும் இந்த பாராளுமன்ற உறுப்பினர் அப்துர் ரஹ்மான் அவர்களை தேர்ந்தெடுத்து அல்லாஹ் இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பி உள்ளான் போலும். ஜவாஹிருல்லாஹ், ரஹ்மத்துல்லாஹ் என்ற பெயர்களும் இங்கு பொருத்தமாக இணைந்திருக்கிறார்கள்.
பெயரில் என்ன இருக்கிறது என்று கேட்பவர்களுக்கு ஒரு செய்தி. நபிகள் நாயகம் எதிரிகளிடம் தூது அனுப்ப ஒரு ஆளை தேர்ந்தெடுக்க முனைந்தபோது ஒருவர் எழுந்து நின்று நான் போகிறேன் என்றாராம். உங்களது பெயர் என்ன என்று கேட்டதற்கு, "கடுகடுப்பானவர்"என்ற அர்த்தம் கொண்ட பெயரை அவர் கொண்டிருந்ததால், அவரை உட்கார சொல்லி விட்டு வேறு ஆளை தேர்ந்தெடுத்தார்கள் என்ற செய்தி நான் கேள்வி பட்டிருக்கிறேன். இலங்கையில் ஒருவர் தன பிள்ளைக்கு பெயர் வைக்க வேண்டும், Z என்ற ஆங்கில எழுத்தில் ஆரம்பிக்கும் ஒரு பெயரை சொல்லுங்கள் என்று ஒரு ஆலிமிடம் சொன்னபோது, அவர் ZOO என்று பெயர் வையுங்கள் என்று சொன்னாராம். ஆக பேர் வைப்பதும் இஸ்லாத்தின் பார்வையில் மிக முக்கியம்.
இந்த வட்டி இல்லா கடன் வங்கி நமதூரில் ஆரம்பிக்கப் பட வேண்டிய அவசியத்தை அப்துர் ரஹ்மான் அவர்கள் மிக தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். EXAMPLE IS BETTER THAN PRECEPT என்று ஆங்கிலத்திலே சொல்வார்கள். நடை முறை சாத்தியம் என்று அதை நடத்திக் காட்டிக் கொண்டிருப்பவர்கள் இதை சொல்கிறார்கள். வெறும் வாய் சொல் வீரர்கள் அல்ல இவர்கள். எனவே, நமக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் நமக்கு விளக்கி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார்கள். முதன் முறையாக கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு சுமப்பது ஒரு சுகமாக இருந்தாலும் அவள் அந்த பத்துமாதங்களில் அனுபவித்து வரும் வேதனையும் பிரசவ வலியும் அவளுக்கு தான் தெரியும். அதை அனுபவித்து உணர்ந்தவள் மற்ற பெண்களுக்கு தைரியம் சொல்வார்கள். இது இயற்கை.
பாடு பட்டு சேர்த்த பணத்தை இப்படி வட்டி இல்லா வங்கி என்ற புதிய அனுபவத்தில் எப்படி முதலீடு செய்வது என்று எல்லோருமே ஒரு கணம் யோசிக்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த ஜனசேவா கூட்டுறவு கடன் சங்கம் நிர்வாகிகள், அப்துர் ரஹ்மான் அவர்கள் சொன்னபடி வீடு வீடாக பெண்களிடம் இதுபற்றி எடுத்து சொல்ல, கேட்க கேட்க - திருப்பி திருப்பி சொல்லி - அவர்களை திருப்திபடுத்தக் கூடிய பொறுமைசாலிகளை நியமித்து இந்த பணியை ஆரம்பித்து செயல்படுத்த முன்வரும்படி பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.
காலப் போக்கில் இந்த நாட்டின் புதிதாக அமைந்துள்ள அரசுகூட இதை செய்ய முன்வரலாம். அல்லாஹ் யாரை வைத்து இந்த வேலையை செய்ய நாடியுள்ளானோ யார் அறிவார்கள் இஸ்லாத்துக்கு விரோதியாக இருந்த உமர், அபூ சுப்யான் போன்றவர்கள் நபி தோழர்களாக மாறியது எப்படி. விட்டுக் கொடுக்கும் தன்மையும் தட்டிக் கொடுக்கும் தன்மையும் கொண்ட நபிகள் நாயத்தின் நற்பண்புகள்தான் என்பதை மறுக்க முடியுமா.. இந்த நற்பண்புகள் நபிகள் நாயகத்தை போற்றி புகழ்வதற்கு மட்டுமல்ல, அதை நாமும் வாழ்வில் நடைமுறையில் கொண்டு வந்தால் அவர்கள் பெற்ற வெற்றி நமக்கும் கிடைக்கும் என்ற உண்மையை உணர்ந்து செயல்படுவதற்குத்தான் சொல்லப்படுகிறது..
அப்துர் ரஹ்மான் அவர்கள் இந்த ஆட்சியாளர்களுடன் இணக்கம் காண - சொல்லும் நிபந்தனைகள் நமதூரில் எல்லா ஜமாத்தினரும் பாகுபாடில்லாமல் நாங்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே குடையின்கீழ் இணைந்து நின்று இந்த வட்டி இல்லா கடன் வங்கி செயல்பட ஏற்றம் பெற சொல்லும் நல்ல முன்னுதாரணம் .
காவல் நிலையம் இல்லாத ஊர் - திரை அரங்கு இல்லாத ஊர் - மதுக் கடை இல்லாத ஊர் காயல்பட்டினம் என்ற பெயருடன் வட்டிக் கடை இல்லாத ஊர் காயல்பட்டினம் என்ற பெயரையும் தக்க வைத்துக் கொள்வோமாக.
வட்டிக் கொடுமையால் தினமும் நடக்கின்ற கொலை கொள்ளை தற்கொலை கணவன் மனைவி குடும்ப உறவுகளில் ஏற்படும் நெருக்கடி நிம்மதி இன்மை - இவைகளுக்கு ஒரே தீர்வு வட்டி இல்லா கடன் வங்கிதான் என்ற உண்மையை உணர்ந்து இந்த அரசே அதற்கு அங்கீகாரம் வழங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
மாஷா அல்லாஹ், அப்துர் ரஹ்மான் அவர்கள் சொல்வதுபோல் எத்தனை செல்வந்தர்களை வல்ல ரஹ்மான் இந்த ஊருக்கு தந்திருக்கிறான். அவர்கள் கடைக் கண்பார்வையில் - கட்டை விரல் அசைவில் - ஆள்காட்டி விரல் ஆணையில் இந்த வட்டி இல்லா கடன் வங்கி காயல்பட்டினத்தில் ஒரு பெரும் விருட்சமாக வளர முடியும். ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தி பக்கத்திலுள்ள பட்டி தொட்டிகளுக்கும் இது பரவி வட்டியின் கோரப்பிடியில் இருந்து முஸ்லிம் சமுதாயம் மட்டுமல்ல - சகோதர சமுதாயமும் மீண்டு நல்வாழ்வு வாழ அது பேருதவியாக இருக்கும்.அல்லாஹ் அருள் புரிவானாக.ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross