ஜன்னதுல் ஃபிர்தவ்சில் அஃலாவில் அவர்களை நல்லோர்களுடன் ஒன்று சேர்ப்பானாக...!!! posted byS.K.Shameemul Islam (Chennai)[28 June 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 35665
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
என் நெருங்கிய நண்பன் சீனாவின் தந்தையான மர்ஹூம் ஷாகுல் ஹமீத் மாமா அவர்கள் குடும்பத்துடன் மூன்று தலைமுறையாக எனக்கு நெருக்கம் உண்டு.
அவர்களின் தந்தை மர்ஹூம் சீனா அப்பா அவர்கள் என் வாழ் நாளில் மறக்க முடியாத அளவு எங்களிடம் மிகவும் அன்பாகவும் பாசமாகவும் இருப்பார்கள். என் பள்ளி நாட்களில் அவர்கள் வீட்டின் தெருப்படியில் அமர்ந்து நிறைய சம்பவங்களை அவர்களுக்கே உரிய அழகு தமிழில் கூற நங்கள் கேட்டுக்கொண்டே இருப்போம்.
அவர்களின் பிரிவு என் மனதை மிகவும் வாட்டியபோது இது போன்ற கமாண்ட்ஸ் எழுத அப்போது இப்படிப்பட்ட இணைய தளங்கள் இருக்கவில்லை.
அடுத்து, தற்போது தாருல் பஃகா அளவில் மீண்டுள்ள ஷாகுல் ஹமீத் மாமா அவர்கள் தம் தந்தையைப் போன்றே பேச்சும் மென்மையும் கொண்டவர்கள்.
வாழ்வின் பல காலம் தொழில் துறையில் இருந்து விட்டு சில காலம் முன்பு தான் ஊரில் ஓய்வு எடுக்க ஆரம்பித்தார்கள்.
தம் தொழில் துறை அனுபவங்களையும் தாம் கடந்து வந்த பாதையையும் மிகுந்த அடக்கத்துடன், நான் மயிலாடுதுறையில் இருந்த போது, என்னிடம் அவர்கள் சொன்னது அவர்களுடன் எனக்கு இன்னும் அதிக மதிப்பையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தியது.
தொழுகையில் மிகவும் பேனுதலோடு இருந்ததுடன் யாரிடமும் மென்மையாகவும் கடுஞ்சொல் கூறாதவர்களாகவும் தமது வாழ்நாளைக் கழித்தவர்கள்.
தம் வாழ்வின் ஆரம்பம் முதலே தொழில் செய்து குடும்பத்தை முன்னேற்றியவர்கள்.
சில காலமாக உடலில் சில பிரச்னைகள் இருந்து வந்த போதிலும் சாதாரணமாக வாழ்ந்து வந்த நிலையில் அவர்களின் திடீர் மரணம் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன்.
மேலோன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்கள் அனைத்தையும் பொறுத்தருளி கப்ரின் வாழ்வை ஒளிமயமாக்கி மறுமையில் மேலான சுவனபதியாகிய ஜன்னதுல் ஃபிர்தவ்சில் அஃலாவில் அவர்களை நல்லோர்களுடன் ஒன்று சேர்ப்பானாக, ஆமீன்.
அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் என் அருமை நண்பன் சீனாவுக்கும் அவனது தயார், தங்கை, மாமிமார், மச்சான்மார், மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகுந்த மன அமைதியையும் பொறுமையையும் தந்தருள்வானாக, ஆமீன்.
எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்,
& குடும்பத்தார்,
சென்னை & காயல்பட்டணம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross