செய்தி: ரமழான் 1435: பிறை தென்பட்ட தகவல்கள் கிடைக்காததால், இன்று நோன்பு இல்லை! மஹ்ழரா, ஜாவியா உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிப்பு!! (இறுதிச் செய்தி!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மிக மிக நூதனமான பிக்ஹு சட்டம் posted byT.M.RAHMATHULLAH (Kayalpatnam)[29 June 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 35676
بسم الله الرحمن الرحيم
பிளைட்டில் பறந்து கொண்டிருக்கும்போது போது பிறை கண்டால் , அந்தப் பிறை அந்த பிளைட்டின் நேர் கீழ் உள்ள
நாட்டின் பார்வையாளருக்கு உரித்தாக ஆகாது .
மௌலாநா குரூப் இன்று 2014 ஜூன் 28 ஜூன் மாலை பார்த்த பிறை மதுரை - சென்னை வழித்தடத்தின் நேர் மேற்கே சுமார் +- 4000 கி மீட்டருக்குள்ள தூரத்தில் தரையில் உள்ளவர்களுக்குத்தான் உரித்தான மக்களின் பர்வைக்குட்பட்டதாகும் . ஆனால் மவ்லானா குருப் பார்த்த அதே நேரம் அதே பிளைட்டின் கீழ் உள்ள தரையில் உள்ள மக்களுக்கு அந்தப் மறைந்தே இருக்கும்.
எனவே மறைந்த பிறையை கணக்கில் சேர்ப்பதில்லை.இதனால்தான் நமக்குத் தெரிந்த வரை இலங்கை,மலேசியா , ஹங்கங்க்கில் கூட ப்ளைட்டில் சென்று பிறை பார்க்க எவ்வளவோ வசதி இருந்தும் அந்த நாட்டு உலமாக்கள் மேலே சென்று பிறை பார்த்தால் அனுமதிக்க மாட்டார்கள்.ஒப்புகொள்ளவும் மாட்டார்கள்.
இது 60,70வருடங்களில் நாம் கண்ட அனுபவமாகும். இதன்படி மவ்லானா குரூப் பார்த்த அதே பிறை இந்தியா வையும் தாண்டி அரபிக் கடலுக்கும் மேற்கே உள்ள அரேபியன் தீபகற்ப மக்களுக்கு உரித்தானதாகும். இந்திய மக்களுக்கு இன்றைக்குள்ள தலைப்பிறை ஆகாது.இதுவே அக்காலம் முதல் சுன்னத் வல் ஜமாஅத் பின் பற்றும் பிக்ஹு சட்டம்மாகும். இதற்க்கு உதாரணமாக திருக்குர்ஆ னில் لو اانزلنا هذالقران على جبل எனும் ஆயத்துக்களின் தொடர்சியில் விரிஉரைககளைப்பார்கும்பொழுது நன்றாய் விளங்கும் பூமியில் உள்ளோர் ர்களுக்ககு த்தான் திருக்குர் ஆன் ,ஹத்தீ துகளின் சட்டம் பொருந்தும் .எனவே மவ்லானா அவர்கள் பார்த்த பிறை இன்றைய சுண்ணத்வல் ஜமாத்துக்கு கட்டுப்பட்டதா? என கேட்டு விளங்கிக்கொள்ளவும்.
இன்னும் ஒரூ உதாரணம் பாருங்கள் சென்ற சில வருடங்களுக்கு முன் துபாயில் உள்ள புரூஜ் அல் கலிஜ் எனும் சுமார் 740 அடி உயரம் ஆன கோபுரத்தில் உள்ள மூன்றடுக்கு களிலும் மூன்று விதமான நேரங்களில் இப்தார் ஏற்படும் செய்தியும் நெட்டில் பார்த்தோம். இதுவும் பூமியில் இருந்து உயரத்தால் ஏற்படும் நேர வித்தியாசமே.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross