Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:28:58 PM
செவ்வாய் | 21 மே 2024 | துல்ஹஜ் 1755, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4012:2003:4206:3507:48
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:58Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்16:43
மறைவு18:30மறைவு04:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4205:0905:35
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5319:1919:45
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13970
#KOTW13970
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுன் 28, 2014
ரமழான் 1435: பிறை தென்பட்ட தகவல்கள் கிடைக்காததால், இன்று நோன்பு இல்லை! மஹ்ழரா, ஜாவியா உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிப்பு!! (இறுதிச் செய்தி!)
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 11132 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ரமழான் தலைப்பிறை குறித்து முடிவு அறிவிப்பதற்கான - மஹ்ழரா, ஜாவியா உலமாக்கள் கூட்டுக் கூட்டம், மஹ்ழரா அரபிக்கல்லூரி வளாகத்தில் இன்று (ஜூன் 28 சனிக்கிழமை) மஃரிப் தொழுகைக்குப் பின், 19.15 மணியளவில், மவ்லவீ ஏ.கே.அபூ மன்ஸூர் மஹ்ழரீ தலைமையில் நடைபெற்றது.ரமழான் தலைப்பிறை காணப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெறாததையடுத்து, இன்று ஷஃபான் 30ஆம் இரவு என்றும், நாளை ரமழான் முதல் இரவு என்றும், ஜூன் 30 அன்று முதல் நோன்பு நோற்க வேண்டுமென்றும் - மஹ்ழரா, ஜாவியா உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஜ்ரீ 1435 ரமழான் தலைப்பிறை தொடர்பான அறிவிப்பும், கூட்டத்தில் கலந்துகொண்ட மார்க்க அறிஞர்களின் கைச்சான்றுப் பதிவுகளும் வருமாறு:-

காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.

கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) ரமழான் தலைப்பிறை தொடர்பான அறிவிப்பு அடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

[செய்தியில் கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன @ 21:22 / 28.06.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Moosa Sahib (Abu Dhabi) [28 June 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35673

Ramadan Crescent has been sighted today 28.06.2014 (saturday) between 6.55 PM and 7.05 PM by Moulana Shamsudeen Qasimi, Janab Abul Hassan IAS and Janab Mohideen Ibrahim While they were flying in Madurai to Chennai Spice Jet Flight. Alhamdulillah. So it is declared that the first taraweeh will be held today 28.06.2014 at 9.15 PM in Makkah Masjid Chennai.

அஸ்ஸலாமு அலைக்கும் ,

ரமழான் முதல் பிறை இன்று சனிக்கிழமை 28.06.2014 அன்று 6.55 PM மணியளவில் மௌலானா ஷம்சுதீன் காசிமி, ஜனாப் அபுல் ஹசன் IAS மற்றும் ஜனாப் மொஹிதீன் இப்ராஹிம் ஆகியவர்கள் மதுரை-சென்னை விமானத்தில் வரும்பொழுது பார்த்தார்கள். அல்ஹம்துலில்லாஹ் . தராவீஹ் தொழுகை இன்று சனிக்கிழமை இரவு 9.15 மணியளவில் நடத்தப்படும் இன்ஷா அல்லாஹ்.

https://www.facebook.com/Imam.MSQ?fref=nf


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [28 June 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35674

ஒன்றுமே புரியவில்லையே.!!

பிறை தென்பட்ட தகவல்கள் கிடைக்காததால் என்று இவர்கள் சொல்லுகிறார்கள்..

ஆனால், மார்க்க அறிஞ்சர் மௌலானா ஷம்சுதீன் காசிமி அவர்கள் பார்த்துள்ளார்கள், பொறுப்புள்ள பதவியில் உள்ள ஒரு அதிக்கரி ஜனாப் அபுல் ஹசன் IAS அவர்கள் பார்த்ததாக கூறுகிறார்கள் மற்றும் ஜனாப் மொஹிதீன் இப்ராஹிம் அவர்களும் சாட்சி சொல்லுகிறார்கள். வேறு என்ன வேண்டும்..?

இல்லை.. இல்லை.. விமானத்தில் பறக்கும் போது பார்த்ததாக சொல்லுவது இடிக்கின்றதா.!!!

அருகில் இருக்கும் இலங்கையில் பிறை பார்த்தது என்ற தகவல், உங்களுக்கு தகவலாக தெரியவில்லையா.!! அல்லது மிக மிக அருகில் இருக்கும் மல்லேகான் என்ற ஊரில் பிறை தென்படவில்லையா. ?

எங்களை மாதிரி மக்கள் தலையை சொறிந்து கொள்ளுவதை தவிர வேறு என்ன செய்ய.

வல்ல அல்லாஹ் அனைத்தையும் நன்கு அறிந்தவன்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. மிக மிக நூதனமான பிக்ஹு சட்டம்
posted by T.M.RAHMATHULLAH (Kayalpatnam) [29 June 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35676

بسم الله الرحمن الرحيم

 பிளைட்டில் பறந்து கொண்டிருக்கும்போது  போது பிறை  கண்டால் , அந்தப் பிறை அந்த பிளைட்டின்  நேர் கீழ் உள்ள நாட்டின்  பார்வையாளருக்கு  உரித்தாக    ஆகாது   . மௌலாநா குரூப் இன்று 2014 ஜூன்  28 ஜூன் மாலை பார்த்த பிறை மதுரை - சென்னை வழித்தடத்தின் நேர் மேற்கே சுமார்   +-  4000 கி  மீட்டருக்குள்ள  தூரத்தில் தரையில் உள்ளவர்களுக்குத்தான் உரித்தான மக்களின் பர்வைக்குட்பட்டதாகும் .  ஆனால் மவ்லானா குருப் பார்த்த அதே நேரம் அதே பிளைட்டின்  கீழ் உள்ள தரையில் உள்ள மக்களுக்கு அந்தப்  மறைந்தே  இருக்கும்.

எனவே மறைந்த பிறையை கணக்கில் சேர்ப்பதில்லை.இதனால்தான் நமக்குத் தெரிந்த வரை இலங்கை,மலேசியா , ஹங்கங்க்கில் கூட ப்ளைட்டில் சென்று பிறை பார்க்க எவ்வளவோ வசதி இருந்தும் அந்த நாட்டு உலமாக்கள் மேலே  சென்று பிறை பார்த்தால் அனுமதிக்க மாட்டார்கள்.ஒப்புகொள்ளவும் மாட்டார்கள்.

இது 60,70வருடங்களில் நாம் கண்ட அனுபவமாகும். இதன்படி மவ்லானா குரூப் பார்த்த அதே பிறை  இந்தியா வையும் தாண்டி அரபிக் கடலுக்கும் மேற்கே உள்ள அரேபியன் தீபகற்ப மக்களுக்கு உரித்தானதாகும். இந்திய மக்களுக்கு  இன்றைக்குள்ள  தலைப்பிறை ஆகாது.இதுவே அக்காலம் முதல் சுன்னத் வல்  ஜமாஅத்  பின் பற்றும் பிக்ஹு  சட்டம்மாகும். இதற்க்கு உதாரணமாக திருக்குர்ஆ னில் لو اانزلنا  هذالقران على جبل எனும் ஆயத்துக்களின் தொடர்சியில் விரிஉரைககளைப்பார்கும்பொழுது நன்றாய் விளங்கும் பூமியில் உள்ளோர் ர்களுக்ககு த்தான் திருக்குர் ஆன் ,ஹத்தீ துகளின் சட்டம்  பொருந்தும் .எனவே மவ்லானா அவர்கள் பார்த்த  பிறை  இன்றைய சுண்ணத்வல் ஜமாத்துக்கு   கட்டுப்பட்டதா?  என கேட்டு விளங்கிக்கொள்ளவும்.

இன்னும் ஒரூ உதாரணம் பாருங்கள் சென்ற சில வருடங்களுக்கு முன் துபாயில் உள்ள புரூஜ் அல் கலிஜ் எனும் சுமார் 740 அடி உயரம் ஆன கோபுரத்தில் உள்ள மூன்றடுக்கு களிலும் மூன்று விதமான நேரங்களில் இப்தார் ஏற்படும் செய்தியும் நெட்டில் பார்த்தோம். இதுவும் பூமியில் இருந்து உயரத்தால் ஏற்படும் நேர வித்தியாசமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Fareed (Dubai) [29 June 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35681

Salam.

Here i want to register my small doubts.

Some 15 years back the Aalims from KPM accepted the moon seen at srilanka and kerala and declare in KPM for Ramadan start or EID celebration.

After the moon discussion started by hijra committee and Thowheed jamath, the same Aalims from KPM is not ready to accept the moon seen from srilanka and kerala. Even nagarkoil muslims is not accepting the decision of kerala muslims which is very close to them

Pls clear my doubts -why double standard followed by this Aalims and their students. What is the benefits they received and who is held responsible for this act.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [29 June 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 35682

முழு நிலவு அன்று நிலவானது பூமிக்கு மிக அருகில் இருக்கும். இதை வான் ஆராய்சியாளர்கள் PERIGEE என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். அமாவசை அன்று நிலவானது பூமிக்கு மிக தொலைவில் இருக்கும். இதை வான் ஆராய்சியாளர்கள் APOGEE என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

சரி விசயத்திற்கு வருவோம், சம்சுதீன் கசிமி அவர்கள் பார்த்த நிலவு மேற்கே இருந்தது, எப்பொழுது என்றால் மாலை 06:30 மணிக்கு மேல். அவர்களே கலை பொழுதில் விமானத்தில் பறந்து கொண்டு இருந்தால் கிழக்கே தெரிந்து இருக்கும், சூரிய வெளிச்சத்தின் காரணமாக அல்லது பிறை வளர்ச்சியை கொண்டு தெரியாமல் இருக்கலாம். அப்பொழுது அது ஜப்பான் மற்றுள் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு என்று வைத்து கொள்ளுவோம்.

உங்கள் கூற்று படி இந்தியாவிற்கு பிறை தெரிய வேண்டும் என்றால் நண்பகலில் தான் பிறையை தேட வேண்டும். இதை நீங்கள் பறந்து தேடுவீர்களோ இல்லை நடந்து தேடுவீர்களோ. உங்கள் விருப்பம். நீங்கள் மாலையில் தான் தேடுவோம் என்றால் பிறை மறுபடியும் மேற்கே ஓடிவிடும். கவனம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Mohideen (Jeddah) [29 June 2014]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35686

பிறையை பார்த்ததாக சொல்லுபவர் நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by seyed mohamed (Ksa) [29 June 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35688

விமானத்தில் பிறை பற்றி ரஹ்மத்துல்லாஹ் ஹாஜியார் தெளிவாக விளக்கம் தந்துள்ளார்கள்.

உலமாக்கள் நபிர்மார்கள் வாரிசு , அவர்களின் ஒட்டு மொத்த கருத்தை ஏற்கிறோம் .

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by zubair rahman-AB. (Doha-Qatar) [29 June 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 35694

ரஹ்மத்துல்லாஹ் ஹாஜியாருக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்யட்டும்,

விமானபிறையை விடுங்கள் , இலங்கை பிறை என்னவாயிற்று?

மலேசியா உலமா சிங்கப்பூர் போனால் பிறை பார்த்துதான் நோன்பு பிடிப்பாரோ? அல்லாஹ் நம்மை காக்க வேண்டும்.

நான் எந்த தனிப்பட்ட உலமாவுக்கோ அல்லது எந்த இயக்கத்திற்கோ சார்ந்து இக்கருத்தை பதியவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...பிறை சம்பந்தமாக
posted by abdul wadood (jaipur) [30 June 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 35697

அன்பானவர்களே பிறை சம்பந்தமாக ஒரு விஷயம் நாம் நன்கு புரிந்து கொள்வது மிக்க அவசியம் .நபி (ஸல்)அவர்கள் மாதத்தின் நாட்கள் 29 எனபது உறுதி 30 தா அல்லது அடுத்த புதிய மாதத்தின் தலைப் பிறையா என்பதை மட்டும் முடிவு செய்ய ஒரே ஒரு இலகுவான எல்லோராலும் சாதரணமாக புரிய அறிந்து செயல்பட தக்க வழிமுறையை நபி (ஸல்)அவர்கள் நமக்கு செயல் படுத்தி கட்டி தந்துள்ளார்கள். அதுவே 29 நாளின் பின்னேரம் 30 ததாவது இரவு சூரியன் மறைந்த பிறகு அதி காலையில் கிழக்கில் உதயமாகி மேற்கில் மறையப் போகும் உர்ஜுனல் கதிம் சந்திரன் நம் புறக் கண்ணுக்கு தென்பட்டால் புதிய மாதம் தொடங்கி விட்டது அப்படி தெரியாது மேகம் மறைத்தால் நடைபெறும் மாதத்தின் இறுதி நாள் பிறை 30 அடுத்த நாள் புதிய மாதம் தொடங்கி விடும் என்பதே.

இதனடிப்படையில் நாம் செயல் பட்டாலே நம் சமுதாயத்தில் இந்த தேவை இல்லாத சர்ச்சை பிரச்சனை ஏற்படாது .நபி (ஸல்)அவர்கள் மேகம் மறைத்தால் என்று கூறியுள்ளதை நாம் சற்று ஆழ்ந்து கவனிக்க கடமை பட்டுள்ளோம் இருக்கின்ற பொருளைத்தான் திரையிட்டு மறைக்க முடியும் அதனால் சம்சுதீன் காசிமி அபுல் ஹசன் அதிகாரி பார்த்ததெல்லாம் மேகத்திற்கு மேல் அதாவது மேகத்தின் திரைக்கு உள்ள பிறையை (அரபியில் வுஜூதுல் ஹிலால்)அவர்கள் பார்த்தது. மேகத்தின் திரை இன்றி தென்பட்டாலே நாம் எடுத்து செயல் படவேண்டும் என்பதுவே நபி (ஸல்)அவர்களின் கட்டளை.

விண்ணில் சந்திரன் எக்காலமும் இருந்து கொண்டே தான் இருக்கும் என்பதை நாம் நன்கு அறிவோம்.அதனால் இவர்களின் பார்வை ஹதீத் அடிப்படையில் இல்லை அதனால் எடுக்க வேண்டிய அவசியமில்லை.

அடுத்து எல்லை பிரச்சனை மலே கவுன் ஸ்ரீ லங்கா எந்த அளவு பிறை விஷயத்தில் தகவலை எடுக்க வேண்டும் என்ற அளவு கோளை நபி (ஸல்)அவர்கள் கூறியதாக எந்த ஒரு ஹதீதும் வரவில்லை என்பதே நான் அறிந்த வரை உண்மை. அளவுகோலை முடிவு செய்வது மார்க்க அறிஞ்சர்கள் உலமாக்கள்தான். கூடி ஆலோசித்து முடிவு செய்த பின் மற்றவர்கள் மாற்றுக் கருத்து கூறி சர்ச்சை செய்வது நல்ல வழி முறை அல்ல.

நபி (ஸல்)அவர்கள் எல்கையை நிர்ணயிக்க வில்லை எப்படி பிரயாணம் எவ்வளவு தூரம் சென்றால் ஜம்மு கஸ்ரு தொழவேண்டும் என்ற பிரயாண தூர அளவுகோலை நிர்ணயிக்கவில்லை என்பதே நான் அறிந்தது.

உலகம் முழுவதும் ஒரே நாளில் தான் நோன்பு இன்னும் பெருநாள் அனுசரிக்க நபி (ஸல்)அவர்கள் எங்கும் எப்பொழுதும் நான் அறிந்த வரை கூறவே இல்லை.மாறாக நபி (ஸல்)அவர்களின் காலத்தில் மக்காவில் ஒரு நாளும் மதீனாவில் மறு நாளும் அனுசரித்தார்கள் என்ற செய்தியை அல்லமா இப்னு கதீர் (ரஹ்)அவர்கள் தங்களின் பிரசித்திப் பெற்ற ஆதாரமான சரித்தர வரலாறு நூலான அல் பிதாய வன் நிஹாய வில் பதிந்துள்ளர்கள் ஆகவே உலகம் முழுவதும் ஒரே நாளில் நோன்பு இன்னும் பெரு நாள் வரவேண்டும் எனபது நமது ஷரிஆத் தும் கூறவில்லை இந்த நவீன விண்ணியல் அறிவியல் பிரகாரம் கூட சாத்தியமில்லை என்பதே என் தாழ்ந்த கருத்து .

உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் ஒரே அளவில் சந்திரன் நம் புறக்கண்ணுக்கு தென்படுவதில்லையே என்பதும் என் தாழ்ந்த அறிவிற்கு தெரிந்தது.

அதைவிட முதலில் சர்வதேச பிறை கொள்கை பிறகு சவுதி பிறை என்று எந்த வித குர் ஆன் ஹதீதின் சிறு ஆதாரமுமின்றி குர் ஆன் ஹதீதை மட்டுமே பின்பற்றுவோம் என்று கூறி வரும் ஒரு கூட்டமும் உள்ளதே அதைப் பற்றி யாரும் என் கேள்வி கேட்பதில்லை.

இன்னும் விளக்கம் அறிய விரும்பு வர்கள் எனது மெயில் id wadoodabdul62@gmail.com ல் தொடர்பு கொள்ளலாம்

அல்லா மிக்க அறிந்தவன்
அப்துல் வதூத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [01 July 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35698

அஸ்ஸலாமு அலைக்கும்,
இஸ்லாம் என்பது என்றும் யதார்த்தமான அறிவு பூர்வமானது மார்க்கம் இறைவன் நமக்கு அருளிய வேதமும் , நம் பெருமானாரின் வழிக்காட்டலும் இது போன்ற பல குழப்பமான நிலைகளுக்கு சிறப்பான விளக்கங்களை கண்டிப்பாக கொடுத்துதான் இருக்கும்.

ஆனால் நம் ஆலிம்கள் அதற்கான மார்க்க விளக்கங்களை மக்களுக்கு உண்மையாகவும் இறைவனுக்கு அடிபணிந்தும் மார்க்கத்தை மக்களுக்கு நல்ல முறையாக எடுத்து கூற வேண்டும் இதில் முக்கிய கடமை அவர்களுக்கு உண்டு.

அரசியல் வாதிகளை போல கோஷ்டி பூசலாக மாற்ற ஆலிம்கள் காரணமாக ஆகிவிடகூடாது.

பிறை கூட நம் வேறுபட்ட ஆலிம்களின் கருத்துக்ககளையும் அதன் காரணமாக வேறுபாடுகளை வளர்த்து கொண்ட நம் மக்களையும் பார்த்து சிரிக்கும் .

அணைத்து தரப்பு ஆலிம்களும்தான் இந்த வேறுபாடுகளுக்கு பொறுப்பு எடுத்து கொள்ளவேண்டும் .

இஸ்லாமிய பொது மக்ககள் அனைவரையும் நிம்மதியாக ரமதானையும் , இதுல் பித்ரையும் குழப்பங்கள் எதுவும் இல்லாமல் அனுசரிக்க அணைத்து ஆலிம்களும் உதவி புரியுங்கள்.

அல்லாஹ் உங்களுக்கும் நம் சமுதாயத்துக்கும் நன்மைகளையும் ஒற்றுமையையும் கண்டிப்பாக தருவானாக ஆமீன் .

ஒரு இறை, ஒரு மறை , ஒரு பிறை, ஒரே மார்க்கம், ஒரே மக்கள்........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by zubair rahman-ab. (Doha-Qatar) [01 July 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 35699

வதூத் சாஹிப் அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக !

மனிதன் மிக இலகுவாக படைக்கப்பட்டுள்ளான், தன்னுடைய நியாயங்களை தெளிவு படுத்துவதில் உலகின் எந்த மூளைக்கு சென்றேனும் எப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலும் ஆதாரங்களை தேடிப்பிடித்து நிலைநிறுத்துவதில் வல்லவன்.

இஸ்லாம் மார்க்கம் மிக இலகுவானது , நம் உயிரினும் மேலான நபிகளார் (ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்) அவர்கள் அப்படித்தான் போதித்து கொடுத்தார்கள். நமக்கு மட்டுமானது அல்ல அவனுடைய ஏடும், நபிகளாரின்(ஸல்,,,) வழிகாட்டுதலும். அது அனைவராலும் இலகுவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய நடைமுறை சாத்தியகூறுகள் நிறைந்தவை.

அக்காலத்து உலமாக்கள் தவறு செய்தவன் தன் சொந்த பிள்ளையாக இருந்தாலும் தண்டிக்க தவறியதில்லை. ஆனால் இக்காலத்தில் அப்படி காண்பது அரிதிலும் அரிது என்பது என்னுடைய கருத்து,

பித்னாக்கள் நிறைந்த இந்த உலகில் எதற்கு எடுத்தாலும் தன் சொந்த கருத்தை (ஊனமானதாக இருந்தாலும்) நிலை நாட்டுவதில் முன்னோர்களை பழி தீர்ப்பதே ஒரு நடைமுறை கொள்கையாக வழி நடத்தி செல்லும் உலமாக்களும் இல்லை என்கிற ஆதாரம் வதூத் சாஹிப் அவர்களிடம் உண்டா ? ( இசைக்கு ஆதாரம், வட்டிக்கு ஆதாரம் (ஷரியத் பைனான்ஸ்), இன்னும் ஏனைய ,,,,,)

சர்வதேச லிமிடெட் கம்பனிகளை விடுங்கள் -அவர்கள் கார்பரேட் என்னும் கொள்கையில் உள்ளவர்கள் தங்களுக்கு வேண்டியபடிக்கு விதிமுறைகளை தளர்த்திக்கொள்ளலாம்- நம் குடிலுக்கு வருவோம் முந்தய உலமாக்களால் எடுக்கப்பட்ட தீர்ப்புகள் பழைய ஏற்பாடா? இப்போது புதிய ஏற்பாடு பிறந்துள்ளதா?

நல்ல கருத்துகளை யார் எந்த புறத்திலிருந்து சொன்னாலும் அதை ஏற்று நடைமுறை படுத்தக்கூடிய வலிமையை நம் மனதில் ஏற்ப்படுத்தி கொள்ளவேண்டும் அது எந்த பிரிவு உலமாவாக இருந்தாலும் சரியே என்பது என்னுடைய கருத்து.

வல்லோன் நம்முடைய அமல்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய தாக ஆக்கியருள்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved