வழமைபோல, நடப்பாண்டு ரமழான் மாதத்திலும் காயல்பட்டினத்திலுள்ள பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
காயல்பட்டினம் எல்.எஃப். ரோட்டில் அமைந்துள்ள செய்கு ஹுஸைன் பள்ளியில் ஏற்பாடு செய்யப்படும் நோன்புக் கஞ்சிக்கு 7 நாட்களுக்கு மட்டும் அனுசரணை கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து, அப்பள்ளியின் பொருளாளர் கே.எம்.இஸ்மத் தெரிவித்துள்ளதாவது:-
அன்பின் அனைத்துலக காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹ்...
இறையருளால், இவ்வாண்டும் புனிதமிக்க ரமழான் மாதத்தில் நம் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வழமைபோன்று நோன்புக் கஞ்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு
கறிகஞ்சி - ரூ.3250 என்றும்
வெண்கஞ்சி - ரூ.2500 என்றும்
செலவு மதிப்பிடப்பட்டுள்ளது.
7 நாட்களுக்கு மட்டும் அனுசரணை தேவைப்படுகிறது. நமது இப்பள்ளிவாசலைப் பொருத்த வரை, அனுசரணையாளர்கள் தாமாக முன்வருவது மிக மிகக் குறைவே. எனவே, அனைத்துலக காயலர்களான உங்களையே நாட வேண்டியுள்ளது.
இப்பள்ளிவாசல் நம் நகரின் பேருந்து நிலையம் அருகில் இருப்பதால், மஹல்லாவாசிகள் மட்டுமின்றி, பிரயாணிகள் உட்பட பலரும் இங்கு நோன்பு துறக்க வருகின்றனர்.
எனவே, அன்பார்ந்த காயலர்களே! தாங்கள் இந்த நன்மையான காரியத்திற்காக அனுசரணையளித்து, அல்லாஹ்வின் நல்லருளைப் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அனுசரணையளிக்க விரும்பும் அன்பர்கள் இச்செய்தியின் அடியிலேயே உங்கள் தொடர்பு விபரங்களைப் பதிவு செய்தோ அல்லது +91 97903 08634 என்ற எனது கைபேசி எண்ணைத் தொடர்புகொண்டோ விபரம் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு செய்கு ஹுஸைன் பள்ளி பொருளாளர் கே.எம்.இஸ்மத் கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்கு ஹுஸைன் பள்ளியின் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) ரமழான் நோன்புக் கஞ்சிக்கு அனுசரணை கோரி வெளியிடப்பட்ட அறிக்கை குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
செய்கு ஹுஸைன் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |