காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பிற்கு புதிய செயற்குழு 14.06.2014 அன்று நடைபெற்ற அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்புதிய செயற்குழுவின் முதல் கூட்டத்தில், நலத்திட்ட உதவிகளுக்காக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அவ்வமைப்பின் சார்பில், அதன் செயலாளர் எம்.செய்யித் அஹ்மத் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இறையருளால் எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் புதிய செயற்குழுவின் முதலாவது கூட்டம் 24.06.2014 செவ்வாய்கிழமையன்று, அமைப்பின் தலைவர் ஜனாப். ஏ.டபிள்யு.கிழுறு முஹம்மத் ஹல்லாஜ் தலைமையில், அவரது இல்லத்தில் நடைபெற்றது.
வரவேற்புரை:
ஜனாப். தைக்கா உபைதுல்லாஹ் கிராஅத் ஓதி, கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். கூட்டத் தலைவர் வரவேற்புரையாற்றினார்.
பேரவையின் புதிய செயற்குழுவின் அங்கத்தினர், பழைய தலைவர், பார்வையாளர்கள் உள்ளிட்டோரை வரவேற்றுப் பேசிய அவர், நகர் மற்றும் சமுதாய நலனுக்காக அனைவரும் இணைந்து பணியாற்றவும், நல்ல கருத்துக்களை பரிமார வேண்டுமாரும் கேட்டுக்கொண்டார்.
ஹாங்காங் - மக்காவ் - சீனா ஆகிய பகுதிகளில் வசித்து வரும் - இதுவரை பேரவையில் தம்மை உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ளாத காயலர்கள் தயவு செய்து தம்மை இவ்வமைப்பின் உறுப்பினர்களாக்கிக் கொள்ளுமாறு அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
அடுத்து, செயலாளர் எம்.செய்யித் அஹ்மத் பேரவையின் துணை விதிகளை வாசித்தார். அதன் பின்னர் அவர் கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வறிக்கை மற்றும் 14.07.2014 அன்று நடைபெற்ற பேரவையின் பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகளை சமர்ப்பித்து, அக்கூட்டங்களில் தீர்மானிக்கப்பட்ட அம்சங்கள் நிறைவேற்றப்பட்டமை குறித்து விளக்கிப் பேசினார்.
வரவு - செலவு கணக்கறிக்கை:
பின்னர், பேரவையின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை பொருளாளர் பி.எஸ்.ஏ.அஹ்மத் கபீர் சமர்ப்பிக்க, கூட்டத்தில் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளிக்கப்பட்டது..
தீர்மானங்கள்:
நகர்நலன் குறித்த உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - மருத்துவக் கருவி வாங்க கே.எம்.டி. மருத்துவமனைக்கு நிதியொதுக்கீடு:
கே.எம்.டி.மருத்துவமனையிலிருந்து எக்கோ ஸ்கேன் கருவி வாங்குவதற்கு உதவி அளித்திட வந்திருந்த விண்ணப்பத்தை விவாதித்த பின்னர் அதற்கு பேரவையின் செயற்குழு நிதி வழங்கிட முடிவு செய்தது.
தீர்மானம் 2 - தக்வாவின் இமாம் - முஅத்தின் ரமழான் ஊக்கத்தொகை திட்டத்தில் பங்கேற்பு:
தாய்லாந்து காயல் நல மன்றத்தின் முயற்சியில் நமதூர் இறைஇல்லங்களில் பணியாற்றும் இமாம் மற்றும் முஅத்தினுக்கு ரமலான் மாத சிறப்பு நிதி உதவியளிப்பு ரமலானில் நடந்து வருகிறது. அந்நிகழ்வில் இவ்வாண்டு நமது பேரவையும் நிதி வழங்கிட முடிவு செய்தது.
தீர்மானம் 3 - நகர்நலத் திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு:
இக்ராஃ மற்றும் ஷிஃபா அமைப்புகளுக்கு வருடாந்திர செலவினங்களுக்கான பங்களிப்பு, ஷிஃபா மருத்துவ விண்ணப்ங்களுக்கு உதவி, கத்தர் காயல் நல மன்றத்துடன் இணைந்து புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் நடத்தல், ஆகியவற்றுக்காக பேரவையால் அளிக்கப்பட்டு வந்த அனுசரணைகளை இனியும் தொடர்ந்து அளித்திட தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 4 – ஆலோசனைக் குழுவினர் தேர்வு:
அனுபவமிக்க மூத்தவர்கள் ஐவர் பேரவையின் ஆலோசனைக் குழுவினராகத் தெரிவு செய்யப்பட்டனர்.
தீர்மானம் 5 - உள்ளூர் பிரதிநிதி:
கடந்த ஆறாண்டுகளாக பேரவையின் உள்ளூர் பிரதிநிதியாக சிறந்த முறையில் செயலாற்றிய ஜனாப் எஸ்.அப்துல் வாஹித் அவர்களுக்கு இப்புதிய செயற்குழு மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு, இனியும் அவரே தொடர்ந்து அப்பொறுப்பில் செயலாற்றிட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
பங்கேற்றோர்:
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜனாப் ஏ.எஸ்.ஜமால் மாமா நன்றி கூற, கம்பல்பக்ஷ் ஹாஜி எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், பேரவையின் புதிய செயற்குழுவினர் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
பங்கேற்ற அனைவருக்கும் சுவையான விருந்து தலைவர் ஜனாப். ஏ.டபிள்யூ. கிலுர் முஹம்மது ஹல்லாஜ் அவர்கள் குடும்பத்தினரால் வழங்கி உபசரிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 03:34 / 01.07.2014] |