காயல்பட்டினம் ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் புதிய அலுவலகம், குத்துக்கல் தெருவில், முஹ்யித்தீன் பள்ளி வளாகத்தில், காட்டு தைக்கா தெரு பகுதியில் 01.05.2014 வியாழக்கிழமை மாலையில் திறக்கப்பட்டது.
அமைப்பின் மூத்த நிர்வாகி தோல்சாப் எம்.எல்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் கிராஅத் ஓதி, துஆ பிரார்த்தனை செய்து, புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
மூத்த நிர்வாகி சட்னி எஸ்.ஏ.கே.செய்யித் மீரான் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அமைப்பின் 30 ஆண்டுகால சேவைகள் குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார். அவரது உரைச்சுருக்கம்:-
>>> முந்தைய ஆண்டுகளில் உலக காயல் நல மன்றங்களின் கூட்டமைப்பான இக்ராஃ கல்விச் சங்கம் மூலமாக தலா ஐந்தாயிரம் ரூபாய் வீதம் நான்கு நபர்களுக்கு மொத்தம் இருபதினாயிரம் ரூபாய் உயர்கல்விக்கான உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
>>> நடப்பாண்டு, கடந்த ஜனவரி 18, 19 அன்று இரு நாட்கள் நடைபெற்ற 30-ஆம் ஆண்டு விழா நிகழ்வில் முடிவு செய்யப்பட்ட படி, ஒரு மாணவருக்கு ஓராண்டுக்கு ரூபாய் 5 ஆயிரம் என, மூன்றாண்டுக்கான முழு உதவி தொகையாக மொத்தம் பதினைந்தாயிரம் வீதம், இரண்டு மாணவர்களுக்கு மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் - கடந்த ஏப்ரல் மாத இறுதியில், இக்ராஃ கல்விச் சங்க அலுவலகத்தில், அதன் பொருளாளர் கே.எம்.டி.சுலைமான் வசம் ஒப்படைக்கப்பட்டது.
தகவல்:
சட்னி S.A.K.செய்யித் மீரான்
படங்கள்:
தோல்சாப் எம்.எல்.மூஸா நெய்னா
ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |